Header Ads



பொன்சேக்காவை அமரவைத்த இம்தியாஸ், இனவாதத்தை எதிர்த்த கபீர், ஆதரவாக குரல் எழுப்பிய ராஜித்த


- அன்ஸிர் -

ஐக்கிய மக்கள் சக்தியின் 2021 ஆம், நடப்பு வருடத்திற்கான ஆரம்ப தேசிய செயற்க் குழுக் கூட்டம் இன்று (25) இடம் பெற்றுள்ளது.

இதன்போது Unp யின் முன்னாள் செயலாளராகவும், தவிசாளராகவும் இருந்த கபீர் காசிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் உயர் பதவியொன்று கிடைக்குமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனை பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மான பகிரங்கமாகவே ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு சுட்டிக்காட்டினார். எனினும் அவர் சிரேஷ்ட பிரதி தவிசாளர்களில் ஒருவராகவே நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறே சஜித் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததும், அவரை ஆசுவாசப்படுத்தி தனிகட்சி அமைப்பதில், முக்கிய பங்காற்றிய இம்தியாஸ் பாக்கீர் மரிக்காருக்கும் முக்கிய பதவி கிட்டுமென எதிர்பார்க்கப்பட்டுள்ளது. எனினும் அவரும்  சிரேஷ்ட பிரதி தவிசாளர்களில் ஒருவராகவே நியமிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் விவகாரங்களில் துணிச்சலுடன் குரல் எழுப்பிவரும், முஜீபுர் ரஹ்மானுக்கு கட்சியில் எந்தப் பதவியும் இதன்போது வழங்கப்படவில்லை.

ஏற்கனவே பொன்சேக்கா, கவிந்த, ஹெக்டெர் ஆகியோர் முஸ்லிம் விரோத போக்குடன் செயற்படுவது குறித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் முஸ்லிம் உறுப்பினர்களிடையே விரக்தி, நிலவிய நிலையில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு, முக்கிய பதவிகள் வழங்கப்படாது 2 ஆம் நிலை பதவிகளே வழங்கப்பட்மை அவர்களை மேலும் விசனமூட்டியது.

இந்நிலையில் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கு, தமது கட்சிக்குள் எக்காரணம் கொண்டும் வளரக்கூடாது இது தவிர்க்கப்பட் வேண்டுமெனவும் சகல இன, மதத்தவரையும் அணைத்துச் செல்லும் கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட வேண்மேன இம்தியாஸ் வலியுறுத்தியுள்ளார். இதன்போது குறிக்கீடு செய்ய பொன்சேக்கா முயன்றபோது நீங்கள அமருங்கள், நீங்களும் அவ்வாறான கருத்துக்களை வெளியிட்டுள்ளீர்கள். நான் பேசும் போது  குறுக்கிடாதீர்கள் என காட்டமாக பதிலளித்துள்ளார் இம்தியாஸ்.

இதையடுத்து கபீர் காசிம் கருத்து வெளியிடுகையில்,, இனவாதம், மதவாதம், அற்ற கட்சியையே தாம் ஆதரிப்பதாகவும் தம்மிடையே இனவாத போக்குடையவர்கள் அதிகரிப்பதை ஏற்க முடியாதெனவும், தமக்கு எப்படி சிங்களவரும் முஸ்லிம்களுகம் வாக்களித்தார்களோ அதுபோன்று ஐக்கிய மக்கள் சக்தியின் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் முஸ்லிம்கள் வாக்களித்துள்ளமையை சுட்டிக்காட்டினார்.

இதன்போது ராஜித்த சேனாரத்தினவும் குறுக்கிட்டு இனவாதத்தை ஒருபோதும் ஆதரிக்க முடியாதெனவும், ஐக்கிய தேசியக் கட்சியினால் இனவாதத்தை வெளியிடாது ஆட்சியை கைப்பற்ற முடிந்ததெனவும், அவ்வாறே  ஐக்கிய மக்கள் சக்தியும் இனவாதத்தை கையில் எடுக்காமல், சகல சமூகங்களையும் இணைத்துச் செல்ல வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் கபீரும், இம்தியாஸும் இதற்கு முன்னர் இவ்வாறு கவலையுடன் பேசியதை தாம் காணவில்லை எனவும், அவர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் உள்ள சிலரின் இனவாதப் போக்கினால் பாதிப்படைந்துள்ளது இதன்மூலம் வெளிப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.