Header Ads



எல்லாம் வல்ல இறைவன் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க பிரார்த்திக்கின்றோம்...!


சாய்ந்தமருதைச் சேர்ந்த ஊடகவியலாளரும், பன்னூலாசிரியரும், கலைஞருமான எம்.எம்.எம். நூறுல் ஹக் திங்கட்கிழமை (25) ஏறாவூரில் காலமானார்.

கடந்த கால் நூற்றாண்டுகளாக நவமணியோடு நெருங்கித் தொடர்புபடுத்தி, அடிக்கடி கட்டுரைகளை எழுதி, சமூகத்தை அறிவூட்டிய எழுத்தாளரான எம்.எம்.எம். நூறுல் ஹக்குடைய மறைவு குறித்து நவமணி ஆசிரியர் பீடம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது.

நவமணியின் ஆரம்ப காலத்தில் இருந்தே அதாவது கடந்த 25 வருட காலமாக அவர் அடிக்கடி நவமணி க்கு பல்வேறு வகையிலும் கட்டுரைகள் மற்றும் ஆக்கங்களை எழுதியுள்ளார்.

நாங்கள் கேட்கும் போதெல்லாம் கிழக்கு மாகாணத்தின் நிலைமை,  அரசியல் நிலைமை பற்றி பக்கச்சார்பின்றி கட்டுரைகளை அவர் நமணிக்காக எழுதித் தந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான கட்டுரைகளை நாங்கள் வாராவாரம் பிரசித்திருக்கின்றோம். 

எந்தவித சலிப்புமின்றி எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, கட்டுரைகளை அவர் அனுப்பி வைத்தார். அப்படிப்பட்ட ஒருவரின் மரணம் உண்மையிலேயே இச் சந்தர்ப்பத்தைப் பொறுத்தவரையில் ஒரு துறையிலே வெற்றிடத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

ஊடகவியலாளராக, நூல் விமர்சகராக, எழுத்தாளராக அவர் நிறைந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

எந்த விதவிதமான கொடுப்பனவுகளும் இல்லாமல் தன்னுடைய சமூகக் கடமையை நிறைவேற்றுவதற்காக அவர் செய்த பணி பாராட்டுக்கு உரியது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் வருடாவருடம் நடாத்தப்படும் வித்தகர் விருது போட்டியில் இம்முறை ஊடக வித்தகர் விருதுக்காக எம்.எம்.எம்.நூறுல்ஹக் தெரிவு செய்யப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடைசியாக  அவர், ஒரு வாரங்களுக்கு முன் என்னோடு பேசி, தனது நிலைமையைப் பற்றி விளக்கினார். அவருக்காக நாங்கள் பிரார்த்தனை செய்தோம். என்றாலும் இறைவனது நாட்டம் அவருடைய உயிர் பிரிந்து விட்டது.

அவருடைய மறைவினால் துயருற்றிருக்கும் எழுத்தாளர்  கமறுன் நிஷா மற்றும் அவருடைய இரு பிள்ளைகளைகளுக்கும் நவமணி ஆசிரியர் பீடம் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

எல்லாம் வல்ல இறைவன் அவருடைய பாவங்களை மன்னித்து உயர்ந்த சொர்க்கமான ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்க பிரார்த்திக்கின்றோம்.

1 comment:

  1. Innaa lillahi va innaa ilaihi raajioon. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன். அல்லாஹும்மஃபிர் லஹு வர்ஹம்ஹு.

    ReplyDelete

Powered by Blogger.