Header Ads



மார்ச் 31 முதல் இலங்கையில், தடை செய்யப்படவுள்ள பொருட்கள்


தனி பாவனை மற்றும் குறுங்கால பாவனைக்கான பிளாஸ்டிப் பொருட்கள் மீதான தடை எதிர்வரும் மார்ச் மாதம் 31 ஆம் திகதி முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகார சபை தெரிவித்துள்ளது. 

தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீராவிற்கு உள்ள அதிகாரங்களின் படி இந்த ஒழுங்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இது குறித்து இரண்டு விசேட வர்த்தமானி அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. 

இதற்கமைய, 20 மில்லிமீற்றர் அல்லது 20 கிராம் நிறைக்கு குறைவான சிறிய பெக்கெட், காற்றடைக்கப்படக்கூடிய விளையாட்டு பொருட்கள், பிளாஸ்திக் காம்புகளுடனான கொட்டன் பட்ஸ் ஆகியன குறித்த திகதிகளில் இருந்து தடை செய்யப்படவுள்ளதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.