Header Ads



20 நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டுள்ள, முஸ்லிம் கிராமம் - 3 மரணங்களும் பதிவாகியுள்ளன


(அததெரண)

களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள வேயனகல்ல கிராம மக்கள் கொவிட் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

கடந்த டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி தொடக்கம் இதுவரை வேயன்கல்ல முஸ்லிம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. 

கடந்த 23 நாட்களாக மூடப்பட்டுள்ள புளத்சிங்கள வேயன்கல்ல கிராமத்தில் இதுவரை 389 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

ஒன்பது சந்தர்ப்பங்களில் 1,305 பிசிஆர் பரிசோதனைகளும் மற்றும் 72 என்டிஜன் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இதன்போது 389 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 

மேலும் குறித்த கிராமத்தில் மூன்று கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளன. 

நேற்று மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் 05 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக புளத்சிங்கள பொது சுகாதார பரிசோதகர் ஆர்.ஏ.சீ ரணவக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.