Header Ads



நெஞ்சில் ஈரமில்லா வஞ்சகர்களுக்கு..!


இரண்டு நாட்களாக தூக்கமில்லா வேலைப் பழு.இப்பொழுதுதான் முகனூலுக்கு வரக்கிடைத்தது.பாலமுனை வழக்குத் தாக்கலுக்கு பல கற்றவர்கள், புத்தியுள்ளவர்கள்,புரிந்து கொள்ளக் கூடியவர்கள் மத்தியில் இருந்து வாழ்த்துக்கள்.

இன்னும் சிலரிடமிருந்து விமர்சனங்கள்.அவர்கள் எல்லோரும் ஒரே ஒரு அரசியல்வாதியின் அல்லக்கைகள்.வாக்குக் கேட்டுத் தோற்றுப் போன அல்லக்கைகளில் இருந்து அவரின் பாதத்தூசியை எடுத்து பாக்கட்டில் வைக்கும் அல்லக்கைகள் வரை சில விமர்சனங்கள்.அதை விமர்சனங்கள் என்பதை விட ஒரு வகையான காழ்ப்புணர்வின் வெளிப்பாடு.கணக்கே இல்லை எங்களுக்கு.

இவ்வழக்கை குரல்கள் இயக்கம் முன்னின்று தாக்கல் செய்தற்குப் பின்னால் இருக்கும் தத்துவத்தை ஒரு சிலரைத் தவிர சட்ட அறிவும் இல்லாத பொது அறிவும் இல்லாத அல்லக்கைகளால் புரிந்து கொள்ள முடியாது.

 நீ மூட்டிய நெருப்பிலே உன்னை எரித்தல் என்பது இதைத்தான்.

ஜனாஸா எரிப்புக்கு எதிராகப் போடப்பட்ட வழக்கு, காரணம் எதுவும் கூறாமல் நிராகரிக்கப்பட்டுவிட்டது.எத்தனையோ வாதங்கள் முன்வைக்கப்பட்டன.விஞ்ஞான ஆய்வுக் கட்டுரைகள்,உலக சுகாதார அமைப்பின் விளக்கங்கள்,உள் நாட்டு வைத்தியர்களின் வாக்கு மூலங்கள்,மனிதாபிமான அடிப்படையிலான வாதங்கள்,மனித உரிமை அடிப்படையிலான வாதங்கள்,தர்க்க ரீதியான வாதங்கள் எல்லாம் செய்தாகிற்று.அனைத்தையும் கேட்ட நீதிமன்றம் காரணம் சொல்லாமல் நிராகரித்துவிட்டது.நீதிமன்றின் முடிவோடு உடன்பட்டுக் கொள்ளமுடியாவிட்டாலும் அதை மதிக்க வேண்டும்.

வழக்கில் ஒரு சுவாரஸ்யம் நடந்தது

அரச தரப்பினர் ஒரு ஆவணத்தை சமர்ப்பித்திருந்தார்கள்.அந்த ஆவணம் இந்த வைரஸானது நிலத்தடி நீரை பாழ்படுத்தும் என்று சுகாதார திணைக்களத்தின்,அரசின் பல பேராசிரியர்கள்,வைத்தியர்கள் கையெழுத்திட்டு சமர்ப்பித்திருந்தார்கள்.

வழக்கு முடிந்துவிட்டது.அந்த ஆவணம் இப்பொழுது ஒரு ‘public document’. அந்த ஆவணந்தான் அவர்கள் மூட்டிய நெருப்பு.

இப்பொழுது இலங்கையில் எத்தனையோ இடத்தில் தனிமைப்படுத்தல் நிலையங்களிலும், வைத்தியசாலைகளிலும் கொறோனா நோயாளிகள் இருக்கிறார்கள்.அரச தரப்பினர் சமர்ப்பித்த ஆவணத்தின் படி கொறோனால்வால் மரணித்த உடம்புகள் நிலத்தடி நீரை பாதிக்கும் என்றால்,உயிரோடிருக்கும் கொறோனா நோயாளிகளின் கழிவுகள் நிலத்தடி நீரைப் பாதிக்காதா? செத்த உடம்பையே உங்களால் நிலத்தடி நீர்ப் பாதிப்புக்காக புதைக்க முடியாதென்றால் உயிருள்ள உள்ளவர்களின் கழிவுகள் தினமும் சேர்கிறதே, சில இடங்களில் ஆற்றில் கலக்கிறதே. அதற்கு என்ன தீர்வு.யார் அப்படிச் சொன்னது? நீங்கள் தந்த ஆவணம்தான்.

இந்த அரச ஆவணத்தை ஆதாரமாகக் காட்டி நிலத்தடி நீர் பாதிக்கிறது.மரணித்தவர்களைப் புதைப்பதாலேயே பாதிப்பு வருவதாக இந்த விற்பன்னர்கள் கூறுகிறார்கள். ஆகவே தனிமைப்படுத்தல் நிலையங்களால் சூழ இருக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது.ஆகவே அவைகளை அகற்ற வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தால்என்ன என்ற ஒரு யோசனை எங்களுக்குத் தோன்றியது.

இது அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுக்கும்.அவர்களின் நிபுணர்கள்தானே நிலத்தடி நீர் பாதிக்கும் என்று சொல்லிவிட்டார்கள்.அப்படியால் அனைத்து வைத்தியசாலைகளையும் மூடுவதா? இல்லை பாதிக்காது என்ற வாதத்தை ஏற்று புதைக்க அனுமதிப்பதா என்ற பெரும் சட்டப் பிரச்சினையை இது உருவாக்கிவிடும்.ஒரு தனிமைப்படுத்தல் நிலையம் மூடப்படுமாக இருந்தால் அனைத்து நிலையங்களும் மூடப்படலாம்.அது தரும் பாதிப்பை விட புதைக்க விடுவதுதான் இலகுவான வழியாக இருக்கும். இல்லை இது நிலக்கீழ் நீரைப்பாதிக்கும்தான். ஆனால் தொற்று நீக்கும் முறைமை இருக்கிறது என்று கூறுவார்கள் என்றால், உயிரோடு இருக்கும் நோயாளிகளின் கழிவுகளைத் தினமும் தொற்று நீக்கும்பொறிமுறை இருக்கும் என்றால் ஏன் மரணித்த, தினமும் கழிவகற்ற முடியாத ஒரு உடலைப் புதைப்பதற்குத் தொற்று நீக்க முடியாதா என்ற கேள்வி வரும்.

ஒன்று நிலத்தடி நீரைப் பாதிக்காது என்று அவர்கள் சொல்ல வேண்டும்.அல்லது ஒழுங்கான கழிவகற்றல் முறை இருக்கிறது என்று சொல்ல வேண்டும்.

நீரைப்பாதிக்காது என்றால் புதைக்க விடு என்று கேட்கலாம்.

சரியான கழிவகற்றல் முறை இருக்கிறது என்றால் அம்முறையையே பயன்படுத்தி புதைக்க விடு என்று வாதாடலாம்.இது இரண்டு தலை கொண்ட வாள்.எங்கு வந்து விழுந்தாலும் பாதிக்கப்படுவது அவர்கள்.அங்கால் ஓடினால் முதலை.இங்கால் ஓடினால் பூதம்.இரண்டும் நீ வெட்டிய குழி.ஒன்றிலாவது விழுந்தாக வேண்டும். 

இது ஒரு அணுகு முறை. இதில் இன்னொரு வழி இருக்கிறது.அது நிலத்தடி நீரைப் பாதிக்கும் என்று சொல்ல வந்த நிபுணர்களை அனைத்து சாட்சியங்களையும் செல்லுபடியற்றதாக்கும் ஒரு வழி. அதை என்னால் இப்பொழுது பொது வெளியில் பகிர முடியாது.

அவர்கள் மூட்டிய நெருப்பிலே அவர்களை விழவைத்தல்.

இதைத்தவிர இன்னும் மூன்று வேறு வகையாக வழக்குகளும் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இழப்பதற்கு ஒன்றுமில்லை என்றால் இருக்கும் வழி எல்லாவற்றையும் முயன்று பார்ப்போமே என்பதுதான் எமது நிலைப்பாடு.எரிக்கத்தான் போகிறார்கள் என்றால் எதிர்த்த மகிழ்ச்சியில் எரிந்து போவோமே. இழப்பதற்கு என்ன இருக்கிறது.

இந்த நகர்வைப் புரிய கால் மில்லி மீற்றர் அறிவுக் கஞ்சி தலையில் இருக்க வேண்டும்.மூளை இருக்கும் இடத்தில் எல்லாம் காழ்ப்புணர்வை வைத்திருப்பவர்களால் இதைப் புரிய முடியாது.

இன்னும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.எங்கள் ஒவ்வொருவரின் வாழ்விலும் கழுத்திலும் தலையிலும் கத்தி ஆடுகிறது.வாழ்வதற்கு ஒரு வாழ்க்கையும் குடும்பமும் போதுமான பொருளாதரமும் இருக்கிறது. உங்கள் தந்தைக்காவும், தாய்க்காவும்தான் இந்தப் போராட்டம்.இதில் எங்கள் தந்தையர்கள் பிள்ளைகளையும்,மனைவியர் கணவர்களையும் இழக்கக் கூடும்.இருந்தாலும் இந்தத் தீ மிதிக்கும் விளையாட்டு எங்கள் கடமை என்று நினைக்கிறோம். உங்கள் அபிலாசைக்களை நிறைவேற்ற அரசியல்வாதிகளும் இல்லை.மார்க்கத் தலைவர்களும் இல்லை. எங்களைப் போன்ற சிவில் சமுகம் மாத்திரம்தான் இருக்கிறது. வெளி நாட்டு வேலை ஒன்றை எடுத்து ஊரில் வளவும் வயலும் வாங்கியும் எங்களால் ஒரு வாழ்க்கை வாழ முடியும்

டேடாவை ஒன் பண்ணி நாலு எழுத்து எழுதுவது மிகவும் சுலபம்.களத்திற்கு வந்து கொஞ்ச நேரம் இருந்து பாருங்கள்.கனவில் கூட யாரோ கதவைத் தட்டும் சத்தமும், பூட்ஸ் சத்தமும்தான் கேட்கும். நீங்கள் இந்தப் பணியின் பாரம் தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.எங்கள் கூலி எங்கள் இறைவனிடம்.அம்பாரை வழக்கில் கார் சீட்டுக்குக் கீழே ஒழிந்துதான் நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் சென்றார்கள். எஞ்சி இருக்கும் எங்களையும் உங்கள் அரசியலுக்காக அழித்து விடாதீரகள். அரசியல்வாதிகள் அவர்கள் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இருப்பார்கள்.பின்னர் உங்களுக்காக குரல் கொடுக்க யாருமே இருக்க மாட்டார்கள்.

Raazi Mohamed

7 comments:

  1. ......thinnigal apdittaaan iruppaanugal... dont worry

    ReplyDelete
  2. Be humble at all the time, god be with you.

    ReplyDelete
  3. ஒவ்வொரு செயலுக்கும் பல பார்வைகள் இருக்கமுடியும் அதில் தவறில்லை அதுவும் உங்களை வழிநடாத்த மற்றும் தடை தாண்ட உதவக்கூடும்.தேவையெனின் விமர்சனங்களிலுள்ள சிறந்தவற்றை வெற்றிக்குத் துணையாக்கிக் கொண்டு முன்னேறுங்கள்.நல்ல முயற்சிகளுக்கு இயற்கை எப்போதும் துணை நிற்கும். வாழ்த்துக்கள் கூறி வழியனுப்பகிறோம்.

    ReplyDelete
  4. Hats off to you.May your efforts bring a favourable result.

    ReplyDelete
  5. I have already made my comments in my reply to the self proclaimed senior lawyer, Rakeeb's Ridiculous observation appearing on the 21st December.

    I am Fully Supportive of the Legal Action filed in the Courts in Akkaraipattu, which is a Very Smart and Intelligent Move and I am sure All Right thinking people will be similarly Supportive of your action.

    Here is wishing you all the best. May the Almighty Allah (Swt) Guide you and Bless you with success in your Very Valuable efforts.

    Baarakallah Feekum

    ReplyDelete

Powered by Blogger.