Header Ads



எல்லோரும் ஜனாஸாக்களை வைத்திருக்க அனுமதி கோரினால், சிக்கல் ஏற்படும் - அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்


எல்லோரும் ஜனாஸாக்களை வைத்திருக்க  அனுமதி கோரினால் சிக்கல் ஏற்படும், அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்

கொவிட் சடலங்கள் தொடர்பில் அரசாங்கம் துரித கதியில் தீர்மானம் எடுக்க வேண்டுமென பொதுச் சுகாதார அதிகாரிகள் ஒன்றியத்தின் செயலாளர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

காலியில் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய கொவிட்டினால் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலத்தை பிணவறையில் வைத்திருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதிக எண்ணிக்கையிலான சடலங்கள் பிணவறைகளில் பேணிப் பாதுகாக்கப்பட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏனெனில் இலங்கையில் கூடுதலான சடலங்களை இவ்வாறு பிணவறைகளில் பேணிப் பாதுகாப்பது சாத்தியமற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

சடலங்களை வைத்திருப்பதற்கு எல்லோரும் அனுமதி கோரினால் அது சிக்கலை உருவாக்கிவிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே கொவிட் சடலங்களை தகனம் செய்வதா அல்லது வேறும் ஓர் தீர்மானம் எடுப்பதா என்பதனை அரசாங்கமும் சுகாதார தரப்பினரும் துரித கதியில் எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு இன்று -21. கருத்து வெளியிட்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.