Header Ads



கொரோனா நோயாளர்களால் நிலத்தடி நீர் பாதிப்ப்பதாக, வைத்தியசாலைக்கு எதிராக வழக்குத்தாக்கல்


இலங்கையின் உச்ச நீதிமன்றத்தில் ஜனாஸாவை எரிப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டு அது நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. அவ்வழக்கில் பிரதிவாதிகள் கொறோனாவினால் மரணிப்பவர்களைப் புதைப்பதனால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்று உறுதிப்படுத்தும் 10 நிபுணர்களின் சத்திய ஓலைகளை (affidvits) அரச தரப்பு தாக்கல் செய்திருந்தது. அந்த நிபுணர்களின் அறிக்கையில் கொறோனா நோயாளர்களின் கழிவுகளாலும் நிலத்தடி நீர் பாதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

அந்த நிபுணர்களின் சத்திய ஓலைகளை அடிப்படையாக வைத்து பாலமுனையில் வைத்தியசாலையிலும் கோராணா நோயாளர்களின் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக கூறி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் பொறிமுறை உருவாக்கப்படும் வரைக்கும் கொறொனா நோயாளிகளை வைத்தியசாலையில் அனுமதிக்கக் கூடாது என்ற கட்டளையைப் பிறப்பிக்குமாரி கோரி பாலமுனை வைத்தியசாலையைச் சூழ உள்ள பகுதிகளில் வசிக்கும் ஐவர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட  பொதுத் தொல்லை வழக்கு இன்று (21) விசாரணைக்கு வந்தது.

 ‘அரசு மரணத்தவர்களை புதைப்பதனால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்ற காரணத்தைக் காட்டி உடல்களை எரிக்கின்றது. மரணித்தவர்களிந் உடல்களைப் புதைப்பதனால் நிலத்தடி நீர் பாதிக்கும் என்றிருந்தால் உயிரோடு இருப்பவர்களின் கழிவுகளால் பாதிக்காதா?’ என்று ஒரு மனுதாரர் பேட்டியில் கேள்வி எழுப்பினார்.’‘ ஒன்று அரசாங்கம் இந்த நிபுணர்களின் அறிக்கைக் கேற்ப உடல்களை எரிப்பதென்றால், அதே அறிக்கைக்கேற்ப தனிமைப்படுத்தல் நிலையங்களை இல்லாதொழிக்கட்டும் அல்லது தனிமைப்படுத்தல்  நிலையங்களால் நிலத்தடி நீர் பாதிக்காது என்றால் அல்லது பாதிக்காதவாறு உரிய பொறிமுறையை உருவாக்க முடியும் என்று கூறினால் அதே முறையினைப் பாவித்து மரணித்தவர்களை புதைக்க அனுமதிக்கட்டும்’’ என்று மனுதாரர் மேலும் குறிப்பிட்டார்

அடிப்படை உரிமை வழக்கிற்கு ஏலவே சத்தியக்கடதாசிகள் வழங்கிய நிபுணர்களை இவ்வழக்கிற்கு சாட்சிகளாக அழைக்குமாறும் பரிந்துரைக்கப்பட்டது. அவ்வாறு சாட்சிகளாக அழைக்கப்படுமிடத்து குறித்த நிபுணர்கள் அக்கரைப்பற்று நீதிமன்றத்திற்கு வருகை தந்து எவ்வாறு கொறோனா வைரஸ் நிலத்தடி நீரைப் பாதிக்குமென்று விபரிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இவ்வழக்கிற்கு குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணி றதீப் அஹமட், சிரேஷ்ட சட்டத்தரணி பஹீஜ் மீரா முஹைதீன் மற்றும் சட்டத்தரணி வசீம் அவர்கள் வாதிகள் தரப்பில் ஆஜராகினர். இவ்வழக்கிற்கு தேவையான அனைத்து தொழில் நுட்ப உதவிகளை குரல்கள் இயக்கம் வழங்கி வருகிறது. 

வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜனவரி நான்காம் திகதி விசாரணைக்கு  எடுத்துக் கொள்ளப்படும்.

2 comments:

  1. Better file more such cases

    ReplyDelete
  2. actually a great work .... more people should do this....

    ReplyDelete

Powered by Blogger.