Header Ads



முஸ்லீம் அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது..? விஜயதாச கடிதம்


உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்களிற்கு வழங்குவதற்கு என முஸ்லீம்வேர்ல்ட் லீக் என்ற அமைப்பு வழங்கிய 920 மில்லியனிற்கு என்ன நடந்தது என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த கேள்வியை எழுப்பியுள்ள விஜயதாச ராஜபக்ச இதுதொடர்பில் விளக்கமளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உயிர்த்தஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் நலன்களிற்காக வழங்கப்பட்ட நிதி என்பதால், அதற்கு என்ன நடந்தது என அறிவது கட்டாயமான விடயம் என விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

2019 ஜூலை மாதம் இடம்பெற்ற தேசிய சமாதான மாநாட்டில் முஸ்லீம்வேர்ல்ட் லீக்கும் கலந்துகொண்டது என தெரிவித்துள்ள விஜயதாச ராஜபக்ச அந்த அமைப்பின் தலைவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஐந்து பில்லியன் டொலர்களை வழங்கினார் என ஊடகங்கள் தெரிவித்திருந்ததை தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ச சந்திரிகா குமாரதுங்க போன்றவர்கள் அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததையும் விஜயதாச ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

5 comments:

  1. ஆண்டகை இதைப்பற்றி ஏன் பேசவில்லை. இவ்விடயத்தில் அவரின் கருத்தினையும் அறிவதற்கு தொடர்பு சாதனங்கள் முனைப்புக் காட்ட வேண்டும்.

    ReplyDelete
  2. கௌரவ விஜயதாச அவரகள் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்று சொல்வதனைவிட அவர் ஒரு முன்னாள் நீதியரசர் என்று சொல்வதிற்றான் பெருமை உள்ளது. அவருக்குத் தெரிந்த விதத்திழல் அப்பணத்திற்கு என்ன நடந்தது என்று கேட்கின்றார். அதனையே இலங்கை மக்களாகிய நாங்களும் அறிய விரும்புகின்றோம். பணம் என்பது மக்களின் கடும் உழைப்பினால் பெறப்படுவனவாகும்.அதற்கு என்ன நடந்தது என்று அறிய வேண்டியது இதனோடு சம்பந்தப்பட்டவரகளின் கடமையாகும்.

    ReplyDelete
  3. அந்த விடயத்தை அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்றில் இருந்து தொடராக பத்திரிகைகள், இணையத்தளங்களில் தொடராக வாசித்துவருகின்றேன். அந்தப் பணம் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் பின்கதவால் சென்று அந்த மாநாட்டுடன் தொடர்பான ஒருசிலரின் பையை நிரப்பியிருககலாம் என்வது எனது பணிவான அபிப்பிராயம். குறிப்பாக அந்த பணம் பற்றி முன்னாள் சனாதிபதி மைத்திரிக்கும் அந்த கூட்டத்தை நடாத்தவும் முஸ்லிம் வேல்ட் லீக் தலைவரை இலங்கைக்கு அழைத்துவர பின்னணியில் இயங்கிய அப்துல்காதர் மஷ்ஹூர என்ற முன்னால் இலங்கையரும் தற்போதைய சவூதிப் பிரஜையுமான இந்த மஷூர மௌலானாவுக்கு அநதப் பணம் எங்கே சென்றது என்பது பற்றி நன்றாகத் தெரியும் என எங்கோ இணையத்தள செய்தியொன்று வௌியிட்டிருந்தது. எனவே அரசாங்கம் உடனடியாக அந்த அப்துல் காதர் மஷூரை உடனடியாக ஸீஐடிக்கு அழைத்து அந்த பணத்தைத் திரும்பிப் பெறறு அப்பாவிகளான ஈஸ்டர ஞாயிறு சம்பவததில் காயப்பட்ட, இறந்து போனவரகளின் குடும்பத்துக்குச சரியாகப் பெற்றுக் கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நாட்டின் பிரதமருக்கும் அப்துல் காதர் மஷ்ஹூருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.அப்படியானால் உண்மை வௌிவருமா, என்பது பொதுமக்களுக்குச் சந்தேகம்.

    ReplyDelete
  4. அந்த விடயத்தை அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்றில் இருந்து தொடராக பத்திரிகைகள், இணையத்தளங்களில் தொடராக வாசித்துவருகின்றேன். அந்தப் பணம் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் பின்கதவால் சென்று அந்த மாநாட்டுடன் தொடர்பான ஒருசிலரின் பையை நிரப்பியிருககலாம் என்வது எனது பணிவான அபிப்பிராயம். குறிப்பாக அந்த பணம் பற்றி முன்னாள் சனாதிபதி மைத்திரிக்கும் அந்த கூட்டத்தை நடாத்தவும் முஸ்லிம் வேல்ட் லீக் தலைவரை இலங்கைக்கு அழைத்துவர பின்னணியில் இயங்கிய அப்துல்காதர் மஷ்ஹூர என்ற முன்னால் இலங்கையரும் தற்போதைய சவூதிப் பிரஜையுமான இந்த மஷூர மௌலானாவுக்கு அநதப் பணம் எங்கே சென்றது என்பது பற்றி நன்றாகத் தெரியும் என எங்கோ இணையத்தள செய்தியொன்று வௌியிட்டிருந்தது. எனவே அரசாங்கம் உடனடியாக அந்த அப்துல் காதர் மஷூரை உடனடியாக ஸீஐடிக்கு அழைத்து அந்த பணத்தைத் திரும்பிப் பெறறு அப்பாவிகளான ஈஸ்டர ஞாயிறு சம்பவததில் காயப்பட்ட, இறந்து போனவரகளின் குடும்பத்துக்குச சரியாகப் பெற்றுக் கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நாட்டின் பிரதமருக்கும் அப்துல் காதர் மஷ்ஹூருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.அப்படியானால் உண்மை வௌிவருமா, என்பது பொதுமக்களுக்குச் சந்தேகம்.

    ReplyDelete
  5. அந்த விடயத்தை அந்த நிகழ்ச்சி நடைபெற்ற அன்றில் இருந்து தொடராக பத்திரிகைகள், இணையத்தளங்களில் தொடராக வாசித்துவருகின்றேன். அந்தப் பணம் யாருடைய கண்களுக்கும் அகப்படாமல் பின்கதவால் சென்று அந்த மாநாட்டுடன் தொடர்பான ஒருசிலரின் பையை நிரப்பியிருககலாம் என்வது எனது பணிவான அபிப்பிராயம். குறிப்பாக அந்த பணம் பற்றி முன்னாள் சனாதிபதி மைத்திரிக்கும் அந்த கூட்டத்தை நடாத்தவும் முஸ்லிம் வேல்ட் லீக் தலைவரை இலங்கைக்கு அழைத்துவர பின்னணியில் இயங்கிய அப்துல்காதர் மஷ்ஹூர என்ற முன்னால் இலங்கையரும் தற்போதைய சவூதிப் பிரஜையுமான இந்த மஷூர மௌலானாவுக்கு அநதப் பணம் எங்கே சென்றது என்பது பற்றி நன்றாகத் தெரியும் என எங்கோ இணையத்தள செய்தியொன்று வௌியிட்டிருந்தது. எனவே அரசாங்கம் உடனடியாக அந்த அப்துல் காதர் மஷூரை உடனடியாக ஸீஐடிக்கு அழைத்து அந்த பணத்தைத் திரும்பிப் பெறறு அப்பாவிகளான ஈஸ்டர ஞாயிறு சம்பவததில் காயப்பட்ட, இறந்து போனவரகளின் குடும்பத்துக்குச சரியாகப் பெற்றுக் கொடுப்பது இந்த அரசாங்கத்தின் கடமையாகும். ஆனால் துரதிருஷ்டவசமாக இந்த நாட்டின் பிரதமருக்கும் அப்துல் காதர் மஷ்ஹூருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகின்றது.அப்படியானால் உண்மை வௌிவருமா, என்பது பொதுமக்களுக்குச் சந்தேகம்.

    ReplyDelete

Powered by Blogger.