Header Ads



20 நாள் குழந்தையை எரித்தது மனதை வருத்துகிறது, முஸ்லிம்களுடனான சந்திப்பில் சஜித்


பல்வேறு சமூகங்களின் கலாச்சார உரிமைகளை மீறுவதை முற்றிலும் எதிர்பதாகவும், இனவெறி மற்றும் தீவிரவாதத்தை முற்றிலுமாக ஒழிப்பதாக தானும் தமது ஜக்கிய மக்கள் சக்திக் கூட்டமைப்பின் நிலைப்பாடாகும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தொரிவித்தார்.

இறந்த 20  நாள், ஒரு சிறு குழந்தையை கூட எரித்ததன் மூலம் ஏற்பட்ட பெரும் அநீதி மனதைக் வருத்துகிறது என்றும், இந்த தருணத்திலிருந்து அரசாங்கத்திற்கு புத்தியும் ஞானமும் கிடைக்கப் பெறட்டும் என்று சஜித் பிரேமதாச கூறினார்.

பௌத்த மதத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் அதே வேளையில், மற்ற எல்லா மதங்களையும் இனக்குழுக்களையும் மதிக்கவும், அவர்களின் மத, கலாச்சார மற்றும் சமூக உரிமைகளைப் பாதுகாக்க  தான் ஒருபோதும் தயங்க மாட்டேன் என்று அவர் கூறினார்.

WHO விதிமுறைகளுக்கு இணங்குவதாக அரசாங்கம் பலமுறை உறுதியளித்த போதிலும், இறந்த உடல்களை அடக்கம் செய்யும் விடயத்தில் ஒரு இனக்குழுவின் கலாச்சார அடையாளத்தை மறுத்து செயற்படுகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.  உலகில் 190 க்கும் மேற்பட்ட நாடுகள் உலக சுகாதார அமைப்பின் விதிமுறைகளுக்கு இணங்கியுள்ளதாகவும், அந்தந்த நாடுகள், அந்த நாடுகளின் அடையாளங்கள் மற்றும் கலாச்சாரங்களின்படி இறந்தவர்களை அடக்கம் செய்ய வாய்ப்பளிக்கிறது என்றும் அவர் கூறினார்.

ஒரு குழு, தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்டு,பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடுமாக இருந்தால்,அந்த இனம் அல்லது மதத்தினை குற்றமாக கருதுவது முட்டாள்தனம் என்று எதிர்க்கட்சித் தலைவர் கூறியதுடன்,விடுதலைப் புலிகள் நூற்றுக்கணக்கான  பொது மக்களைக் கொன்றொழுத்தமை அந்த பயங்கரவாத குழுவின் செயற்பாடாகவே தான் பார்பதாகவும் அதனால் ஒட்டு மொத்த தமிழ் சமூகத்தை தான் அவ்வாறு அடையாளப்படுத்த வில்லை என்றும் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அவ்வாறான என்னப்பாட்டில் செயற்படுவதாக இருந்தால், அது ஜனநாயகம் என்ற பெயரில் தவறான நடவடிக்கையாக இருக்கும் என்றார்.

இன்று (20) மகதேன்ன ஜும்மா பள்ளியில் பக்தர்களுடனான சந்திப்பில் தான் அவர் இதைக் கூறினார்.



2 comments:

Powered by Blogger.