Header Ads



நிகாஹ் சேவைகள் மன்றம் (Nikah services Foundation_NSF )

 


இலங்கையில்  முஸ்லிம்கள் சிறுபான்மையினராக  இருந்த போதும்  பொதுவாக நாடு பூராவும்  பரந்துபட்ட அளவில்  வாழ்ந்து வருகின்றனர. எங்கு வாழ்ந்தாலும் தமது பிள்ளைகள் எதிர்காலத்தில் நல்லவர்களாக வரவேண்டும்  என்பதற்காக  அனேகமாக  இஸ்லாமிய ஒழுக்கப் பண்பாடுகளுடன்  கூடவே வளர்த்தும் வருகின்றனர். 

  பிள்ளைகள் திருமண  வயதை அடையும் போது  பெற்றோர் நல்ல எதிர்பார்ப்புக்களுடன் அவர்களுக்கான துணைகளைத் தேர்ந்தெடுக்கும்  பொருட்டு  கல்யாண  புரோகிதர்களை நாடுவது  வழக்கம். ஆனால் சில புரோகிதர்கள் பணம் சம்பாதிக்கும்  நோக்குடன் மணமக்கள்  தரப்பினர்களுக் கிடையில்  மணமக்களின் கல்வித்தகைமை ,வயது வேறுபாடு ,உடல்நிலைத் தகைமை  ,தொழில்  போன்ற  விடயங்களில்  உண்மைக்குப்  புறம்பான  தகவல்களைப் பரிமாறி திருமணங்களை  நடாத்தி வைக்கின்றனர் .காலம் செல்லச்செல்ல  இவைகள் தம்பதிகளுக்கிடையே முறண்பாடுகளை ஏற்படுத்தி ஈற்றில்  வாழ்க்கை பிரச்சினையாக  உருவெடுத்து  சில  திருமணங்கள்  விவாகரத்தில் கூட  முடிவடைவதையும், வேறு சில திருமணத்திற்கு முன்னர் இடைநடுவில்  சம்பந்தம்  முறிக்கப்படுவதையும் கண்கூடாகப் பார்க்கிறோம். மேலும் சிலர் புரோகிதர்  எனும் பெயரில் மாதம் ஓரிரு  முறை மணமக்கள்  உள் ள வீடுகளுக்குச் சென்று பொய்களைக் கூறி  பணம் பறிக்கும்  நிகழ்வுகள் ஆங்காங்கே இடம்பெறுவதையும் அறியக்கூடியதாகவுள்ளது.

நோக்கம்:- இந்நிலைமையிலிருந்து எமது சமூகத்தை  ஓரளவேனும்  பாதுகாக்க வேண்டும் என்ற  உன்னத  நோக்குடன்  இம்முயற்சி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது

எமது பணி:- மணமக்கள் தரப்பினரிடம்  இருந்து உண்மையான தகவல்களைத் திரட்டி, ஒழுங்குபடுத்தி, மணமக்கள்  தரப்பினர்களின் எதிர்பார்ப்பு  மற்றும்  பொருத்தப்பாடுகளுக்கு அமைய  திரட்டிய  தகவல்களைப் பகிர்ந்தளித்து, இரு  சாராரையும் கூட்ணிணைத்தல் (Co-ordinate) மற்றும் ,இன்ஷா  அல்லாஹ்  திருமணம் நடந்தேறிய பின்னர் குறிப்பிட்டவர்களின் தகவல் களைப் பதிவழித்தல், இன்றேல் தொடர்து பேணுதல் எமது பணியாகும்.

தொடர்பு கொள்ள:-

I . L . N . DEEN

Mobile No- 0779256585

Whatsup NO- 0779256585

Email - weddinglink786@gmail.com

குறிப்பு:- இது  அல்லாஹ்வின் பெயரால் நன்மையை  நாடிச் செய்யும் ஓர் இலவச  சேவையாகும். எனினும் தனவந்தர்கள் ஏழைத்திருமணங்கழுக்கு  ,மற்றும் எமது நிர்வாகச்  செலவுகளுக்கு உதவி செய்ய விரும்பினால் எம்முடன் தொடர்பு கொள்ள  முடியும்.

1 comment:

  1. Dear brothers, you start this work with good intention.

    BUT you need to have acceptance from society.. People should know about your identity in an acceptable manner. At least you can show your connection to a highly respectable Muslim person or an Organization, so that public will trust and connect you.

    I am writing this with a positive recommendation to you.

    NOTE: Any one can start like this to collect personnel details and may use it in wrong manner. So kindly show your connection to a good reference in our society.

    May Allah reward you as per your intention.

    ReplyDelete

Powered by Blogger.