Header Ads



கொரோனா உடல்களின் நல்லடக்கம் பற்றி அமைச்சரவையில் ஆராய்வு, நல்லது நடக்க பிரார்த்திப்போம் (யாரும் குழப்பி விடாதீர்கள்)


 - மொஹமட் அன்ஸிர் -


ஜனாதிபதியின் செயலகத்தில் இன்று, திங்கட்கிழமை 2 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், கொரோனாவினால் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வது பற்றி ஆராயப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் அலி சப்ரி, இதற்கான பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார்.

பிரதமர் மகிந்த உள்ளிட்ட பல, அமைச்சர்கள் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை, நல்லடக்கம் செய்வதற்கு ஆதவை வெளிப்படுத்தியுள்ளனர்.

சமூக நலன்கருதி இங்கு சில விடயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது.

அந்தவகையில்,   கொரோனாவினால் மரணிக்கும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கான வாய்ப்புக் கிட்ட சகல முஸ்லிம்களும்பிரார்த்திப்போம். 

மேலும், சமூக வலைத்தளங்களில் இதுபற்றி விவாதித்து, மாற்று மதத்தினரை வம்புக்கு அழைத்து, கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை குழுப்பிக்கொள்ள வேண்டாமெனவும் மிகவும் உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய 02-11-2020 அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர்களினால் இத்தகவல் Jaffna Muslim இணையத்திடம் பிரத்தியேகமாக தெரிவிக்கப்பட்டது.

நல்லது நடக்க அல்லாஹவிடம் பிரார்த்திப்போம் வீண் குழப்பங்களை தவிர்ப்போம்.

6 comments:

  1. அரசாங்கம் இந்த விடயத்தில் முஸ்லிம்களுக்கு உதவி செய்தால் நிச்சயமாக முஸ்லிம்கள் இந்த விடயத்தில் நன்றியோடு இருப்பார்கள்

    ReplyDelete
  2. நீங்க கொஞ்சம் பொறுத்திருந்தா நல்லாரிந்திரிக்குமே! ஏன் அவசரப்பட்டயல்?

    ReplyDelete
  3. இந்த செய்தியை வெளியிட்டிருக்க வேண்டியதில்லை.

    ReplyDelete
  4. A strong letter from UN has been sent to President requesting to cancel the relevant gazette notification and respect the fundamental rights of the Muslims.

    ReplyDelete
  5. சர்வ வல்லமையுள்ள அல்லாஹ் இந்த முயற்சியை வெற்றிபெற ஆசீர்வதிப்பாராக, இன்ஷா அல்லாஹ். "முஸ்லீம் குரல்" எப்போதும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வின் அருளால், இலங்கையில் உள்ள முஸ்லிம்களின் இந்த வேதனை முடிவுக்கு வரும் என்று நம்பினார், இன்ஷா அல்லாஹ். நாம் அனைவரும் சர்வவல்லமையுள்ள அல்லாஹ்வையும், மாற்றம் ஏற்பட "DUA" யையும் பிரார்த்திப்போம், இன்ஷா அல்லாஹ். இந்த சிந்தனையைப் பற்றி முஸ்லிம் குரல் எப்போதும் எழுதியுள்ளது.

    May God AllMighty Allah bless this endeavour to succeed, Insha Allah."The Muslim Voice" always believed that by the grace of God AllMighty Allah, this agony of the Muslims in Sri Lanka will come to an end, Insha Allah. Let us all pray God AllMighty Allah and as "DUA" for the change to happen, Insha Allah. The Muslim Voice has alway written about this thought.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  6. ஆம் இதனை எழுதியவருக்குத்தான் மனநிலையில் குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது.

    ReplyDelete

Powered by Blogger.