Header Ads



ஹிஸ்புல்லாவை விடுவியுங்கள் - அல்லது நீதிமன்றத்தில் நிறுத்துங்கள் - சர்வதேச மன்னிப்பு சபை கோரிக்கை


இலங்கையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஆறு மாதங்களுக்கும் மேலாக குற்றச்சாட்டுக்கள் இன்றி காவலில் வைக்கப்பட்டுள்ள முக்கிய மனித உரிமை சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை இலங்கை அதிகாரிகள் விடுவிக்க வேண்டும்.


அல்லது நம்பத்தகுந்த சாட்சியங்கள் இருக்குமானால் அவரை நீதிமன்றத்தில் முன்னலைப்படுத்த வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை கோரியுள்ளது.


ஹிஜாஸ் ஹிஸ்புல்லா கொழும்பில் உள்ள குற்றப் புலனாய்வுத் துறையினரால் 2020 ஏப்ரல் 14ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.


பயங்கரவாத சட்டத்தின்கீழ் சந்தேக நபரை ஒரே நேரத்தில் 90 நாட்கள் நீடிக்கும் உத்தரவுகளை பயன்படுத்தி 18 மாதங்கள் வரை தடுத்து வைக்க முடியும். இதன்படி ஹிஜாஸின் தடுப்பு நாளை 17ஆம் திகதி அன்று நிறைவடைகிறது.


ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தற்போது ஆறு மாதங்களுக்கும் மேலாக காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் தவறுகள் தொடர்பில் ஆதாரங்கள் இல்லாமல் அவரை நீதிமன்றத்தில் முன்னிலை செய்யமுடியாத நிலை உள்ளது.


எனவே ஒரு வருடம் வரை தடுப்பு காவலில் வைத்திருக்கக்கூடிய நிலைமை உள்ளதாக அலுவலக இயக்குநர் டேவிட் கிரிஃபித்ஸ் சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளரின் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.