Header Ads



ஐக்கிய தேசிய கட்சி, விடுத்துள்ள அறிக்கை



இருபதாவது திருத்தத்திற்கு வாக்களிப்பதை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் தவிர்க்கவேண்டும் என ஐக்கியதேசிய கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

20வது திருத்தத்தின் பல பிரிவுகளை நிறைவேற்றுவதற்கு சர்வஜனவாக்கெடுப்பு அவசியம் என உச்சநீதிமன்றம் வியாக்கியானம் செய்துள்ள போதிலும் 20வது திருத்தத்தை நாடாளுமன்றத்தை சமர்ப்பிப்பது விவாதிப்பது என அரசாங்கம் தீர்மானித்துள்ளமை குறித்து ஆழ்ந்த கவலையடைந்துள்ளதாக ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இந்த திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள பிரிவுகளை இந்த தரப்பினர் நாடாளுமன்ற தெரிவுக்குழுவிடம் முன்னர் சமர்ப்பிக்கவில்லை என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சி ஆகவே இவை தேவையற்றவை மக்களுக்கு ஆபத்தினை ஏற்படுத்தக்கூடியவை என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

எங்கள் மக்களின் உரிமையான எங்கள் அரசமைப்பில் உறுதிசெய்யப்பட்டுள்ள பாரம்பரியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்கள் குறித்து ஒரு கட்சியாக நாங்கள் கவலையடைந்துள்ளோம் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை எதிர்ப்பதாகவும் ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.

2 comments:

  1. YOU DONT HAVE AN EVEN ONE MEMBER IN THE PARLIMENT????

    ReplyDelete
  2. அது சரி உங்களுக்கு நிச்சயமாக ஆழ்ந்த கவளையைத்தரும்தான் , ஏனெனில் இன்னொருமுறை நீங்கள் ஆட்சியாளராக மாறும் சந்தர்பம் கண்னுக்கு தென்படும் தொலைவிள் இல்லை , ஏதாவது அப்பத்த கொடுத்து முதுகிள் குத்திவிட்டு ஆட்சிமாற்றத்தை , இப்போது உங்களின் கபட நாடகங்களை அறிந்த சமூகம் அல்லது தலைமுறை உள்ளவரை முடியாத காரியம் , அப்படியும் ஏதாவது தவறுதலாக நடக்கும் பற்சத்தில் உங்களாள் கபடமான முறயையில் ஆணைக்கழுக்களை அமைத்து திருடவும் முடியாது ஏனெனில் இந்த சட்டத்தின் படி கூடுதல் அதிகாரம் இருப்பினும் திருடன் யார் , திரட்டுக்கு பொறுப்புதாரி யார் என்பது தெளிவு ஆனால் இப்போது உள்ள சட்டப்படி எவ்வளவு அப்பட்டமான பயங்கரவாதச்செயல்களும் , பகல் கொள்ளைகளும் நடந்தாலும் யாரும் பொறுப்பேற்க போவதும் இல்லை ,குற்றம் சுமத்தவும் முடியாது

    ReplyDelete

Powered by Blogger.