Header Ads



20 ஐ அரசாங்கத்தில் இருப்பவர்கள் எதிர்த்தால், அது ஜனாதிபதி கோட்டாபயவை காட்டிக்கொடுப்பதாகும்


தனியாக 19வது திருத்தச் சட்டத்தை எதிர்த்தவன் என்ற முறையில் 19வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு, 20வது திருத்தச் சட்டத்தை கொண்டு வருவதை எதிர்க்கவில்லை என ராஜாங்க அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.


20வது திருத்தச் சட்டத்தை அரசாங்கத்தில் இருப்பவர்கள் எவராவது எதிர்த்தால், அது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை காட்டிக்கொடுக்கும் நடவடிக்கையாக கருத வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.


ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே சரத் வீரசேகர இதனை கூறியுள்ளார்.


19வது திருத்தச் சட்டத்தை தனியாக எதிர்த்த காரணத்தினாலேயே எனக்கு கிடைத்த வாக்குகளில் 50 வீதமான வாக்குகள் கிடைத்தன. 19வது திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் ஒன்றை கொண்டு வர முடியாது.


ஒரு திருத்தத்தை மேற்கொண்ட பின்னர், அது முழு அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு பகுதியாக மாறும். இதன் பின்னர் கொண்டு வரும் திருத்தங்களில் ஒவ்வொன்றாக நீக்கப்படும்.


19வது திருத்தச் சட்டத்தில் உள்ள சிறந்த விடயங்களை வைத்துக்கொள்வதில் தடையில்லை எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.