Header Ads



மாடறுப்பு நிறுத்தலும், முஸ்லிம்களின் பதறலும்


அஷ்-ஷைக் எம்.பர்ஹத் ஹஸீம் ஹக்கானி

மாட்டிறைச்சி உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றோ அல்லது மாட்டிறைச்சி வியாபாரம் மாத்திரம் தான் அனுமதிக்கப்பட்ட வியாபரமோ கிடையாது என்பதை நிருபிக்கும் மற்றொரு சந்தர்ப்பத்தை கௌரவப் பிரதமர் அவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்திருக்கும் பாராளுமன்றம் ஊடாக நமக்கு பெற்றுக் கொடுக்க முன் வந்துள்ளார். இதனை முஸ்லிம்கள் தமது உயிரை மாய்க்க வேண்டிய ஒன்றாக உற்று நோக்க வேண்டிய எந்தவித கட்டாயமும் கிடையாது.

இவ்வாறான அறிவிப்புக்கள் ஆங்காங்கே எழும் போது முஸ்லிம்கள் பதறி அடித்துக் கொண்டு தமது உரிமைகள் என பதிவுகள் இடுவதையும், குறுகிய அரசியல் இலாபங்கள் தேடும் அரசியல் வாதிகள் இதனை பயன்படுத்தி அப்பாவி முஸ்லிம்களை தூண்டுவதை விட்டும்  விலகி நடந்து முஸ்லிம் சமூகத்தை புதிய சிந்தனை மிக்க வழியின் பால் இட்டுச் செல்ல உதவ வேண்டும்.

இதற்காக முஸ்லிம்களின் உரிமைகள் காவு கொள்ளப்படும் போது அதற்கு குரல் கொடுக்காமல் வாய் மூடி மௌனிகளாக இருக்க வேண்டும் என்பது கருத்தல்ல. உரிமைகள் எது எவற்றிற்கு குரல் கொடுக்க வேண்டும் என்பதை வழிகாட்ட வேண்டிய பாரிய பொறுப்பு முஸ்லிம் அமைப்புக்களுக்கு இருக்கின்றது. அதே போன்று புத்திஜீவிகளும் இது தொடர்பில் பாரிய கவனம் செலுத்த வேண்டும். எமது முன்னோர்களை இவற்றிற்கு முன்னுதாரணமாக எடுத்து செயற்பட முன் வர வேண்டும்.

மாடறுப்பை பொறுத்த வரை முஸ்லிம்களுக்கு வருடாந்த தமது உழிஹிய்யா கடமையில் மாத்திரமே சிறிது பிரச்சினை இருக்கின்றது. அதனையும் மார்க்க வழிகாட்டலுக்கு அமைவாக ஆட்டை அறுப்பதினூடாக நிறைவேற்றிக் கொள்ளலாம்.ஆனால் இவ்வாறாக ஒரு சமூகத்தை சிறிது கிள்ளிப்பார்க்கின்ற சட்டங்களை உருவாக்குவதின் பின்புலத்தில் சிறிய இலாபங்களை தேடும் அதே அரசாங்கங்களுக்கு பாரிய பிரச்சினை இருப்பதை யாராலும் மறுக்க முடியாது.அறிவு ரீதியாக சிந்திப்பவர்களுக்காக சில எண்ணிக்கை சார் தரவுகளை முன் வைக்கின்றேன்.

ஒரு நாளைக்கு அனுமதி பெற்று அறுக்கப்படும் மாடுகளின் எண்ணிக்கை 5000 என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. இது வருடமொன்றிற்கு 1825000 பதினெட்டு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரம் ஆகும். அப்படியாயின் இவ்வரசாங்கம் ஆட்சியில் இருக்கும் 5 வருட காலத்திற்குல் இலங்கையில் அறுக்கப்படாத மாடுகளின் எண்ணிக்கை 9125000 தொன்னூற்றி ஒரு இலட்சத்தி இருபத்தி ஐயாயிரமாக மாறிவிடும். இது தவிர 5 வருடங்களில் கன்றுகளை ஈன்ற மாடுகள், முஸ்லிம்கள் மற்றும் ஏனைய மதத்தவர்களின் மார்க்க அனுஷ்டானங்கள், பூஜைகளுக்காக அறுக்க வேண்டியவை என அனைத்தையும் ஒன்று சேர்த்தால் சுமார் 1.5 கோடி மாடுகள் இலங்கையில் அதிகரித்து இருக்கும். இவற்றின் பராமரிப்பு, இவற்றுக்கான உணவு, இவற்றின் மூலம் ஏற்படும் பிரச்சினைகள் என யாராலும் சிந்திக்க முடியாத ஒரு நிகழ்வை எதிர்பார்க்களாம்.

அப்படி இல்லையாயின் அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். உண்மையான நோக்கத்திற்காக இதை தடை செய்திருந்தால் ஏற்றுமதியும் செய்ய முடியாது. இறக்குமதியும் செய்ய முடியாது. அப்படி அல்லாமல் இந்தியாவை போன்று ஏற்றுமதி செய்ய முன் வருவார்களானால் அதனை ஒரு போதும் ஏற்கவும் முடியாது.

மறுபுறம் மாட்டை வளர்த்து இறைச்சிக்காக விற்பனை செய்பவர்களில் அதிகமானவர்கள் பௌத்தர்களே ஆவார்கள். அப்படியாயின் அவர்களின் வியாபாரம் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி தள்ளப்படும். இதனையும் அரசு சிந்திக்க வேண்டும். அவ்வாறு பால் உற்பத்திக்காக வளர்க்கப்படுகின்ற மாடுகளும் அதன் காலம் முடிவடையும் போது என்ன செய்வதென்ற பிரச்சினையும் இங்கே எழும்.

அது மாத்திரமல்ல இன்றைய நாட்களில் அரசுக்கு மாட்டிறைச்சி கடைகளால் அனுமதிப்பத்திரங்கள் மூலம் பல இலட்சக் கணக்கான ரூபாய்கள் பெறப்படுகின்றன. அதனை நிறுத்துவதனால் அந்த இடத்தை நிறப்ப வேண்டிய அவசியமும் அவர்களையே சார இருக்கின்றது.

மாடாறுப்பை நிறுத்துவது என்பது உண்மையில் உயிர்கள் கொள்ளக் கூடாது என்பதற்காக இருந்தால் நாட்டில் உணவாக கொள்ளும் மீன் வகைகளும், இலங்கை மக்கள் விரும்பி உண்ணும் கருவாடு நெத்தோலி போன்றவையும், மறுபுறம் நாளாந்தம் அறுக்கப்படும் பன்றிகளும், அனைத்து உணவுகளுடனும் தோழமை கொண்ட கோழி ஆகியவற்றிற்கும் உயிர் இருக்கின்றது என்பதை தெளிவாக அனைவரும் புரிந்து வைக்க வேண்டும்.

இது தவிர விவசாயத்தை ஊக்குவிக்கும் அரசு விவசாயத்தை பூச்சிகளில் இருந்து பாதுகாக்க தெளிக்கப்படும் பூச்சி கொள்ளிகள் மூலம் இறக்க நேரும் உயிருள்ள பூச்சிகள் தொடர்பாகவும், விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்ட தாவரங்களுக்கும் உயிருள்ளதென்றால் அதன் உயிர் பற்றியும் அரசு சிந்திக்க வேண்டும்.

இவற்றையும் மீறி சட்டங்கள் கொண்டு வரப்பட்டால் தோல் உற்பத்திகள், சுற்றுல்லா பயணிகளின் நாளாந்த உணவுத் தேவை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டு உணவகங்கள் என அனைத்தினதும் வறுமானங்கள் அலை அலையாக குறைந்து விடும். அப்போது அவற்றிலிருந்து பெறப்பட்டு வந்த அரசாங்கத்தின் வரிகள் அனைத்தும் தடைப்பட்டு ஏற்கனவே பொருளாதரத்தில் பாதாளத்திற்கு சென்றுள்ள இலங்கையை மீள் கட்டியெழுப்புவதென்பது கனவாகவே இருந்து விடும்.

மற்றொரு புறம் நாளாந்தம் அரசாங்கத்தால் புல்லுத் திண்ணாத சிங்கத்திற்கும், புலிக்கும் வழங்குகின்ற இறைச்சிற்கும், நாட்டை காப்பதில் அரசியல் வாதிகளை விட தமது உயிரை துட்சமென மதித்து செயற்பட்டு வரும் இராணுவத்தினரின் புரோட்டின் உணவிற்காக வழங்கும் இறைச்சி போன்றவற்றிற்கு எவ்வாறானதொரு மாற்று வழியை உயர் சபையான பாராளுமன்றம் முன் வைக்கப் போகின்றது.

இவை அனைத்தும் ஒருபுறமிருக்க பாராளுமன்றத்தில் மாடறுப்பு தடையை பாராளுமன்றத்தில் முன் வைத்த கௌரவ பிரதமர் அவர்கள் இந்நாட்டின் 30 வருட யுத்ததை முடிவிற்கு கொண்டு வந்தவர் என்ற வகையில் 30 வருட யுத்த நிறைவிற்கு பின்னர் வடக்கு நோக்கி செல்கையில் அவரும், சாரை சாரையாக விடுதலை புலிகளின் இடத்தை பார்வையிட சென்ற ஏனைய அனைவரும் பாரியளவில் கைவிடப்பட்ட மிருகங்கள் வளர்ச்சியானது மனிதர்கள் வாகனங்களில் செல்ல முடியாதளவு மாறியிருந்ததையும் ஆங்காங்கே இறந்து துர்வாடை வீசிய நிலையில் இறுந்ததையும் அவதானித்திருப்பீர்கள். இந்த நிலை வடக்கில் மாத்திரமே என்றால் முழு இலங்கையிலும் மாடறுப்பு நிறுத்தப்பட்டால் மீண்டும் அந்த நிலையை கண்டு கொள்ள நீண்ட நாட்கள் தேவைப் படாது என்பதே தெளிவான விடயமாகும்.

எனவே முஸ்லிம்கள் இது விடயத்தில் பதற்றங்கள், முந்துதள்கள் இல்லாமல் மிகவும் நிதானமாகவும், இதனால் எம்மை விட பாரிய நஷ்டங்களையும் பின்னடைவுகளையும் அரசாங்கமே சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் நிறுத்தி செயற்பட முன் வர வேண்டும். அதே நேரம் இது பொதுவான ஒரு விடயம் என்பதால் நிறுத்தினால் என்ன நிறுத்தா விட்டால் என்ன என்ற ஒரு போக்குடன் நாம் முன்னேறி நகர்வதானது தன்னை தானே சுட்டுக் கொண்ட ஒன்றாக அவர்கள் இதனை கண்டு கொள்ள வாய்ப்பிருக்கின்றது. அது மாத்திரமல்ல நாமது வியாபாரிகள் புதிய வியாபார பயணத்தை துவங்கி செல்லும் அதே நேரம் மீண்டும் அனுமதி கிடைக்கப்பெற்றால் நாம் அதனை மீண்டும் தொடர்வதற்கான முன் ஏற்பாடுகளை செய்ய முன் வர வேண்டும்.


8 comments:

  1. ஏன் இந்தப் பதட்டம்..? ஓரிரு வருடங்களுக்குத் தடை செய்து பார்க்கட்டுமே. அவர்களால் அதனைத் தாங்க முடியாது போகும். அவை பெருகி வீதிகளில் அலையட்டுமே..

    ReplyDelete
  2. Muslims eppothu patarinaarkal....

    ReplyDelete
  3. ஒரு நாளைக்கு 5௦௦௦ மாடுகள் அறுப்பது என்பது பிழையான கருத்தாகும். மொத்தமாக 12+ இலட்சம் மாடுகளே தற்போது இலங்கையில் உள்ளதாக கால்நடை வளர்ப்பு திணைக்களம் கூறியது. அப்படி பார்த்தல் ஒரு நாளைக்கு 5௦௦௦ மாடுகள் அறுத்தால் ஒரு வருடத்துக்கு 18 இலட்சம் மாடுகள் அறுக்கப்படுகிறது. தற்போது இருப்பில் உள்ளது 12+ இலட்சம் மாடுகள்.

    ReplyDelete
  4. this is my opinion also

    ReplyDelete
  5. நல்லதோர் ஆக்கம் ஹஸ்ரத். இதுபோன்று விளக்கமாக எவராலும் எழுத முடியாது என்றுதான் நினைக்கின்றேன். நீங்கள் தமிழிலும் வல்லவர் என்று நிidக்கின்றேன். உங்கள் பாடசாலையில் "துண்டைக் காணோம். துணியைக் காணோம்" என்ற பகுதியைப் பற்றி கற்றிருப்பீர்கள் என்று நினைக்கின்றேன். எல்லாம் நன்மைக்கே!

    ReplyDelete
  6. Masha Allah very good openion

    ReplyDelete
  7. மாடறுப்பதை நிருத்துவதால் முஸ்லீம்களுக்கு ஏற்படும் நண்மைகள்...
    கள்ள மாடு, செத்த மாடு, சென மாடு, பாளூட்டும் மாடு, சரியான முறையில் அறுக்கப்படாத மாடு, நோய் மாடு களின் இறைச்சியை உண்ணுவதிலுறுந்து எமது சமூகம் பாதுகாக்கப்படும். மற்றும் மாற்று மதத்தவர்கள் மத்தியில் முஸ்லீம்களுக்கு மாட்டு இறைச்சி கட்டாயம் என்று பரவி இருக்கும் கருத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படு. நாம் போராட வேண்டும் மாடறுப்பை தடை செய்யக்கோறி, எங்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மாட்டிறைச்சியும் வேண்டாம். மாட்டிறைச்சி வியாபாரம் செய்யும் 90 வீதமானவர்கள் மார்க்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாகவே (அனைத்து ஹராமான செயல்களும் செய்து வியாபாரம் செய்யக்கூடியவர்கள்) இருக்கின்றார்கள். அவரகளும் நேர்வழிப்பெற இது ஒரு நல்ல தருனமாக அமையும். மாடு அறுப்பதை நிருத்துவதால் மாற்று மததவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் தான் பாதிப்பு என்றால் ஏன் எமது சமூகம் இதில் குழப்பமடைய வேண்டும். நாங்கள் புள்ளி விபரங்கள் போட்டு காட்ட வேண்டிய எந்த தேவையும் இல்லை. புள்ளி விபரங்கள் இட்டு வாட்ஸப், சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை விடுத்து நாமும் மாடறுப்புக்கு முழு ஆதரவு என்று எங்கள் கருத்துக்களை அதிகம் பகிர்வோம்

    ReplyDelete
  8. My comment was not published.

    ReplyDelete

Powered by Blogger.