Header Ads



முதியவரின் காலடிக்குச் வந்து முறைப்பாட்டைப் பெற்ற பொலிஸ் பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த


- ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

முதியவரின் காலடிக்கு வந்து முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் செயல் பாராட்டப்படுகிறது.


திங்களன்று 14.09.2020 ஏறாவூர் பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடளிப்பதற்காக ஒரு முதியவர் தள்ளு முச்சக்கர சைக்கிளில் பொலிஸ் நிலைய வாயிலை அடைந்தார்.


இதன்போது வரவேற்பறையில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தர் அந்த வயோதிபரை விசாரித்தார்.


முதியவர் தான் பொலிஸ் பொறுப்பதிகாரியை நேரில் சந்தித்தே தனது முறைப்பாட்டைக் கூற வந்தேன் என்று தெரிவித்ததும் பெண் பொலிஸ் அலுவலர் விடயத்தை பொறுப்பதிகாரியின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.


இவ்வேளையில் தனது பொறுப்பதிகாரி அலுவலக ஆசனத்தில் இருந்து எழுந்து  தள்ளு முச்சக்கர சைக்கிளில் அமர்ந்திருந்த முதியவரின் காலடிக்கு வந்த ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கீர்த்தி ஜயந்த அந்த முதியவரிடம் தமிழில் பேசி அவரது முறைப்பாட்டை அவ்விடத்தில் இருந்தே பெற்றுக் கொண்டார்.


முதியவர் அளித்த காணி ஒழுங்கை சம்பந்தமான முறைப்பாட்டைப் பெற்றுக் கொண்ட பொலிஸ் பொறுப்பதிகாரி இதுபற்றி முழுக் கவனஞ் செலுத்துவதாகவும் உறுதியளித்தார்.


இந்த விடயம் அநேகரின் அவதானத்தைப் பெற்றதுடன் பலர் பொலிஸ் பொறுப்பதிகாரியின் பணிவான சேவையைப் பாராட்டியும் வருகின்றனர்.


4 comments:

  1. We salute you police Officer sir for your respective response.

    ReplyDelete
  2. இது ஒரு பொலிஸ் அதிகாரியின் மனோபாவம் பற்றிய விடயம். மனித இயல்புகளையுடைய ஒரு ஆத்மா இப்படித்தான் நடந்து கொள்ளும். செய்யும் தொழிலில் சமத்துவம் இன்மை, கற்கும் கல்வியில் சமத்துவம் இன்மை, பினபற்றும் மதத்தில் சமத்துவமின்மை' வாழும் வாழ்வில் சமத்துவம் இன்மை, எங்கள் வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் சமத்துவமின்மை - இவற்றின் காரணமாகத்தான் இன்னமும் மனித சமுதாயம் மனிதவிழுமியங்களற்ற சமூகமாக எம் மத்தியில் இருந்து கொண்டிருக்கின்றது. உண்மையில் பொலிஸ் அதிகாரி திருவாளர். கீர்த்தி ஜயந்த அவரகளது செயற்பாடு எங்களுக்கு பெரும் "அதிர்ச்சி"யான விடயமாக தென்படுகின்றது. காரணம் எங்கள் சகோதரர்கள் "சமத்துவமின்மை" என்ற நோயால் மிக அதிகம் பாதிக்கப்பட்டிருப்பதே. கீர்த்தி ஜயந்த அவரகளது பெருந்தன்மை சகலருக்கும் பாடமாக அமையட்டும்.

    ReplyDelete
  3. Suhood, well done, absolutely you are correct

    ReplyDelete

Powered by Blogger.