Header Ads



சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க, இரத்த பரிசோதனைகள் தேவையில்லை – திலும்


சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கப்படுவதற்கு எதிர்வரும் காலங்களில் எந்தவொரு காரணத்திற்காகவும் இரத்த பரிசோதனை முன்னெடுக்கப்படமாட்டாது என போக்கு வரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைத் தெரிவித் துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பிரதான கண்பரிசோ தனையே மேற்கொள்ளப்படும்.

சகலருக்கும் எக்ஸ் ரே கதிர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அதற்குச் செலவிடும் பணத்தைச் சேமிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரி வித்தார்.

அத்துடன் எதிர்வரும் காலங்களில் இரத்த பரிசோதனையில் நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் இருப்பது தெரியவந்தாலும், அது சாரதி அனுமதி வழங்க எந்த வித தடையும் இருக்காது என அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், முச்சக்கர வண்டிகளின் தேவையற்ற பாகங்கள் என்ன என்பதை எதிர் காலத்தில் வர்த்தமானி வெளியிடப்படும் என அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.