Header Ads



தேனிலவு செல்வதை தெரிவிக்காமையினால் சிக்கல், திருமணத்தின் போது மணமகளை காணவில்லை -


காலி, இமதுவ பிரதேசத்தில் மணமகன் திருமணத்திற்காக வந்த போது மணமகள் காணாமல் போன சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.


 குறித்த மணமகள் மற்றும் மணமகனுக்கு கடந்த ஒருவருடத்திற்கு முன்னர் திருமண நிகழ்வு ஒன்றின் மூலம் அறிமுகமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


பின்னர் இரண்டு தரப்பினரினதும் விருப்பத்திற்கமைய திருமண திகதி குறிக்கப்பட்ட நிலையில், மணமகளும் மணமகனும் ஒருவருக்கு ஒருவர் பழகியுள்ளனர். அதற்கமைய இவர்களின் திருமணம் கொரோனா காலப்பகுதியில் இடம்பெறவிருந்தது.


எனினும் நாட்டில் காணப்பட்ட நிலைமை காரணமாக மூன்று மாதங்களுக்கு முன்னர் திருமணத்தை நடத்தாமல் பதிவு திருமணம் மாத்திரம் செய்துக் கொள்ளப்பட்டுள்ளது.


அதற்கமைய கொரோனா அவதானம் குறைவடைந்த நிலையில் இரண்டு வீட்டாரினதும் இணக்கத்திற்கமைய கடந்த 17ஆம் திகதி காலி, ஹிக்கடுவ பிரதேசத்தில் இந்த திருமணம் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது.


எப்படியிருப்பினும் 17ஆம் திகதி திருமணத்தின் போது மணமகள் அங்கு வரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் இதனை அறியாத மணமகன் திருமணத்திற்கு தயாராகி மண்டபத்திற்கு சென்றுள்ளார்.


மணமகளின் தொலைபேசிக்கு அழைப்பு மேற்கொண்ட போதிலும் அவர் பதிலளிக்காத காரணத்தினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், மணமகன் பெண்ணின் வங்கி கணக்கு மற்றும் வாகனத்தை கேட்டதாகவும், தேனிலவு செல்லும் இடத்தை தெரிவிக்காமையினால் மணமகளுக்கு திருமணம் பிடிக்கவில்லை என தெரியவந்துள்ளது. அதனால் அவர் தலைமறைவாகி உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

1 comment:

Powered by Blogger.