தனிப்பட்ட விழாக்களுக்கு ஜனாதிபதிக்கு, அழைப்பு விடுக்க வேண்டாம் என வேண்டுகோள்
மக்களின் நலனுக்காக அரசாங்கத்தின் அபிவிருத்தித்திட்டங்களை விரைவுபடுத்துவதற்கும் கீழ் மட்டத்தில் உள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் அன்றாட உத்தியோகபூர்வ பணிகளுக்கு முக்கியத்துவமளிக்கப்பட்டுள்ளது.
தேசிய பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நேரத்தை செலவிடுவதற்கு மேலதிகமாக விழாக்கள், பரிசு வழங்கும் நிகழ்வுகள், திறப்பு விழாக்கள் போன்ற நிகழ்வுகளில் பங்குபற்றுவதற்கு எதிர்பார்க்கவில்லை என்பதால் அத்தகைய நிகழ்வுகளுக்காக ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுக்க வேண்டாமென அனைவரிடமும் அன்பாக கேட்டுக்கொள்ளப்படுகின்றது.
ஜனாதிபதி அவர்கள் மீதுள்ள அன்பு மற்றும் மதிப்பின் காரணமாக அதிகளவானோர் தமது வாழ்வின் முக்கிய சந்தர்ப்பங்களில் கலந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றனர். மக்கள் தன்மீது வைத்துள்ள இந்த பற்றை ஜனாதிபதி அவர்கள் பெரிதும் மதிக்கின்றார்.
எனினும் உத்தியோகபூர்வ கடமைகளுக்கு புறம்பாக தமக்கு கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களையும் மக்களின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பதற்கு ஜனாதிபதி அவர்கள் உறுதி கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
01.09.2020

நல்ல வேண்டுகோள்,அருமையான பதிவு!
ReplyDeleteGood intention!
ReplyDelete