Header Ads



ராஜாங்க அமைச்சுப் பதவியை, அதாவுல்லாஹ் நிராகரித்தாரா...?


- Anzir -

முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுக்கு, வழங்கப்படவிருந்த ராஜாங்க அமைச்சுப் பதவியை, அவர் நிராகரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தனக்கு முழு அமைச்சுப் பதவி வேண்டுமென, அதாவுல்லா விரும்பிய நிலையில், அவருக்கு ராஜாங்க அமைச்சுப் பதவியை மாத்திரம் வழங்கவே, அரசாங்க உயர் மட்டம் தீர்மானித்திருந்தது.


ஏற்கனவே 40 ராஜாங்க அமைச்சுகளுக்கான 40 பாராளுமன்ற உறுப்பினர்களும் தயார் செய்யப்பட்டிருந்தனர்.


இருந்தபோதும் இன்று (12) புதன்கிழமை  39 பேரே, ராஜாங்க அமைச்சுப் பதவிகளை பொறுப்பேற்றனர்.


அந்த 40 ஆவது பாராளுமன்ற உறுப்பினராக, அதாவுல்லா காணப்பட்டுள்ளார். எனினும் அவருக்கு ராஜாங்க அமைச்சுப் பதவியில் விருப்பமின்மையினால், அவர் அந்தப் பதவியை ஏற்கவில்லை என அறிய வருகிறது.


இதுபற்றி அறிவதற்காக அதாவுல்லா மற்றும் அவரின் ஊடகச் செயலாளர் வசீரை தொடர்புகொண்ட போதும் அவர்கள் பதிலளிக்கவில்லை.

4 comments:

  1. Yes, he can’t fill the pockets without full ministry power

    ReplyDelete
  2. இந்த சம்பவம் குறித்து "முஸ்லீம் குரல்" மிகவும் குழப்பமாகவும் வருத்தமாகவும் உள்ளது. தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா யுபிஎஃப்ஏவின் (UPFA) தீவிர ஆதரவாளராக இருந்து வருகிறார். 2007 முதல், பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அரசாங்கங்களின் கீழ் பல மந்திரி பதவிகளை வகித்துள்ளார். 2016 ல் எஸ்.எல்.பி.பி உருவானதிலிருந்து மகிந்த ராஜபக்ஷ ஆதரவாளராக இருந்து வருகிறார். திகமுதுல்லா மாவட்டத்தின் அம்பாரா முஸ்லீம் வாக்காளர்களின் நலனுக்காக இந்த விவகாரம் விரைவில் தீர்க்கப்பட வேண்டும் என்று நாங்கள்
    தயவுசெய்து ஒரு கோரிக்கையை அரசாங்கத்தின் முன் வை க்கின்ரோம்.
    Noor Nizam - Convener "The Muslim Voice".

    ReplyDelete
  3. @Nallainathan; Anyone can write anything at Jaffna Muslim OLNP. They will not care for anyone's view. But every writers have their own responsibility to preserve the dignity of this online news paper. Please mind it to comment best view..

    ReplyDelete
  4. பொதுஜன பெறமுணயின் முக்கிய முஸ்லீம் உறுப்பினர் அதாஉல்லா கட்சிக்காக உண்மையில் பாடு பட்டவர். நிச்சயமாக அவருக்கு அமைச்சர் பதவி கொடுக்க வெண்டும்

    ReplyDelete

Powered by Blogger.