Header Ads



கொரோனாவால் வெளிநாடுகளில் நிர்க்கதியான இலங்கையர்களை, திருப்பியழைக்க அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல்


கொரோனாவினால் பாதிக்கப்பட்டு வெளிநாடுகளில் நிர்க்கதியாகியிருக்கும் இலங்கையர்களை திருப்பியழைக்க வேண்டும் என்று உத்தரவிடவேண்டும் என்று கோரி அடிப்படை உரிமைமீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தரணி நாகாநந்த கொடித்துவக்கு இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

ஜனாதிபதியின் சார்பில் சட்டமா அதிபர், சுகாதார அமைச்சர், குடிவரவுக்கட்டுப்பாட்டாளர் ஆகியோர் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

பாரிய தொகையான இலங்கையர்கள் மத்திய கிழக்கு உட்பட்ட வெளிநாடுகளில் இலங்கைக்கு வருவதற்காக காத்திருக்கின்றனர்.

இதுவரை கொரோனாவினால் 40 இலங்கையர்கள் வெளிநாடுகளில் காவுகொள்ளப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அரசியல் யாப்பின்படி தமது தாய்நாட்டுக்கு திரும்ப சட்ட உரிமை உண்டு என்று மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments

Powered by Blogger.