Header Ads



பதிவுசெய்யப்படாத மோட்டார் சைக்கிளில், தலைகவசம் இன்றி வேட்பாளர் பிரச்சாரம்


புத்தளத்தில் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுப்பவர்கள் குறித்து நான்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

வடமேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்களை பயன்படுத்தி பல தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெறுவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என புத்தளம் தேர்தல் அலுவலகத்துடன் இது குறித்து ஆழமாக ஆராய்ந்துள்ளோம் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் குறித்து கடுமை; நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை கேட்டுக்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை பார்த்தால் அது குறித்து தகவல்களை வழங்கலாம்,முகநூல்களில் வீடியோக்கள் படங்களை பதிவு செய்யலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் விசேட அதிரடிப்படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தவுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

பொதுஜனபெரமுனவின் வேட்பாளர்சனத்நிசாந்த பதிவு செய்யப்படாத மோட்டார் சைக்கிள் ஒன்றில் தலைக்கவசம் அணியாமல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.

No comments

Powered by Blogger.