Header Ads



சுவிஸர்லாந்திலிருந்து ஒரு, சுவாரசியமான தகவல்


பெர்னீஸ் ஓபர்லாந்தைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதியினர் பேஸ்புக்கில் தங்கள் சேவலை தத்தெடுக்க சரியான நபர்களை தேடுகிறார்கள்.

ஒரு வயதேயான இந்த வீட்டுச்சேவல், அண்டைவீட்டாரின் தூக்கத்தை கெடுப்பதாக இவர்கள் கருதுகின்றனர்.

சேவலானது எந்த நேரமும், குரல் எழுப்பியபடியே இருப்பதால், அது தங்களுக்கு தர்மசங்கடமாக உள்ளது என்கிறார்கள்.

மட்டுமின்றி, தங்கள் குடியிருப்புக்கு அருகாமையில் உணவகம் ஒன்று செயல்படுவதாகவும், அவர்கள் மதியம் கொஞ்சம் தூங்கி எழும் பழக்கம் கொண்டவர்கள் எனவும், தற்போது அவர்களின் தூக்கத்தை இந்த சேவல் கெடுத்து வருவதாக ஆதங்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்தே இந்த கடுமையான முடிவுக்கு அவர்கள் எட்டியுள்ளனர். தங்கள் சேவலை விருப்பமானவர்களுக்கு தானமாக அளிப்பது என்று.

தொடர்ந்து விவசாயிகளுக்கான பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

அதற்கு பதிலும் கிடைத்துள்ளது. Konolfingen பகுதியை சேர்ந்த பெண்மணி ஒருவர் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ளலாம் என வாக்குறுதி அளித்துள்ளார்.

மேலும், தங்கள் சேவலை அப்படியே கைவிட்டுவிட முடியாது எனவும், வாய்ப்பு அமையும் போதெல்லாம், வந்து பார்வையிடவும் அந்த பெண்மணியிடம் அனுமதி பெற்றுள்ளனர்.

No comments

Powered by Blogger.