கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் எழுச்சி ஏற்பட்டுள்ளது - இஸ்திஹார்
2000 ஆம் ஆண்டில் ஏற்பட்டுள்ள முஸ்லிம் அரசியல் எழுச்சிதான் கண்டி மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டிலும் ஏற்பட்டுள்ளது. சுயெச்சை அணியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று கண்டி மாவட்டத்தில் சுயெச்சைக் குழு 11 இல் இரத்தினக்கல் சின்னத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரும் அக்குறணை பிரதேச சபைத் தவிசாளருமான இஸ்திஹார் இமாமுதீன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கண்டி மாவட்டத்தில் முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய முழு நோக்கமாகும். கண்டி மாவட்டத்தில் தேசியத் தலைவராக போட்டியிடும் வேட்பாளரும் கூட இந்த அடிப்படையில்தான் பாராளுமன்றத்திற்குள் கால் பதித்தார். 2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் கூட இந்த மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநித்துவம் என்ற கோசத்துடன் தான் பாராளுமன்றத்திற்கு மூன்றாவது பிரதிநிதியாக உள் நுழைந்தார். அன்று அவர்கள் முன் வைத்த கோசங்கள் எல்லாம் தற்போது மறந்து இம்மாவட்டத்தில் இருவர் மட்டும் வெற்றி பெற்றால் போதுமென்ற மனப்பாங்குடன் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். மூன்றாவது முஸ்லிம் பிரதிநிதித்துவம் கிடைக்கக் கூடாதென்ற கோதாவில் சுயெச்சை ஆணியை சேறு பூசும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதைப் பார்க்கின்ற போது ரொம்ப வேடியாக்கை இருக்கிறது.
எமது சுயெச்சை அணியின் வருகையினால் முஸ்லிம் தேசியத் தலைமைகளுக்கு பெரும் அரசியல் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக முஸ்லிம் பிரதிநித்துவத்தை இல்லாமற் செய்வதற்காக முன்வந்துள்ள அணியெனக் கூறி வேறு இல்லாத பொல்லாத விசமப் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் முயற்சிகளில் முஸ்லிம் தலைமைகள் ஈடுபட்டு வருகின்றனர். இப்படி முயற்சி முன்னெடுப்புக்களை மேற்கொள்பவர்கள் அவர்களுடைய ஆரம்ப அரசியல் நுழைவைப் பற்றி மீளவும் மீட்டிப்பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது மிக முக்கியமான செய்தியாகும்.
2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் நான்கு முஸ்லி பிரநிதிநிகள் கண்டி மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றம் சென்றுள்ளனர். எம். எச். ஏ. ஹலீம், ரவூப் ஹக்கீம், எம். எல். ஏ. காதர், பைசர் முஸ்தபா முதலிய நான்கு பேர்கள் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டளவில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அதற்கு முன் பெற்ற உறுப்பினர்களை விட இருவருடைய பிரதிநிதித்துவம் குறைவடைகின்றது. அந்நேரத்தில் இது தொடர்பில் இந்த தலைமைத்துவங்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு அவர்களுக்காக எழுதும் ஊடகவியலாளர்களோ அல்லது இதைப் பற்றிப் பேசும் பூத்தி ஜீவிகளோ எவையும் எழுதவும் இல்லை. பேசவும் இல்லை.
இந்த முக்கியமான விடயம் தொடர்பில் எமது ஜம்மிய்யதுல் உலமா சபை எமது சமூகத் தலைவர்கள் சிவில் சேவை அமைப்பினர் சிந்தித்து மக்களுக்கு தெளிவூட்ட வேண்டிய கடமையும் பொறுப்பும் இருக்கிறது. உண்மையிலேயே நாங்கள் அக்குறணை பிரதேச சபையை கைப்பற்றி இரு வருடங்களுக்குள் மக்களுக்கு என்னென்ன தேவைகளை நிறைவேற்றி கொடுக்க வேண்டும் என்கின்ற விடயங்களில் ஒரு தெளிவான வழிகாட்டல்களை வழங்கியிருக்கின்றோம். நாங்கள் அரசியலில் சாம்பாதிப்பதற்காக வருபவர்கள் இல்லை.
இவர்கள் எதிர்ப்பதற்கான முக்கிய காரணம் என்னவென்றால் தூய நோக்குடன் களமிறங்கியுள்ளவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைக் கைப்பற்றும் நிலை ஏற்படுமாயின் இன்றைய அரசியல்வாதிகளுடைய பிழைப்பு ஆப்பு வைத்த நிலையாக போய்விடும் என்ற பீதி அவர்களுக்கு இருக்கிறது. சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் சுயாதீன குழுவினரையே தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமூக மேம்பாடுகள் என்று போர்வையில் பேசப்படும் மேதாவிகளெல்லோரும் இந்த தூய எண்ணத்துடன் அரசியலில் களமிறங்கியுள்ள சுயெச்சை அணியை எதிர்க்கின்றனர்.
எங்களை பசில் ராஜபக~வின் முகவர் என்று எமக்கு சேறு பூசுகின்றார்கள். அரசியல் அமைப்பு என்ற ரீதியில் நாங்கள் எல்லா அரசியல் கட்சிகளுடனும் தொடர்புகளைப் பேணி வருகின்றோம். அப்படியான தொடர்புகளை நாங்கள் எல்லோருடனும் வைத்துக் கொண்டு இருக்கின்றோம். இதுவொரு சாதாரண விசயம். இது பெரிய குற்றச்சாட்டு அல்ல. நாங்கள் எந்தவொரு நபருடைய முகவராகவோ அல்லது வேறு ஒரு நபருடைய தயவிலோ அரசியலில் களமிறங்க வேண்டும் என்கின்ற விடயத்தில் எங்களுக்கு எந்தத் தேவையும் இல்லை. நாங்கள் 2010 ஆம் ஆண்டு முதல் எங்களுடைய அரசியல் பயணத்தை தொடங்கிய ஆரம்பம் முதல் இன்று வரைக்கும் எம்மைப் பற்றி சேறு பூசுவதுதற்கும் எமது வரலாற்றை அசிங்கப்படுத்துவதற்கும் எத்தனையோ திட்டங்களையும் சூழ்ச்சிகளையும் செய்தார்கள். ஆனால் அந்த திட்டங்கள் போட்ட சாணாக்கியத் தலைவர்களுடைய எண்ணங்கள் எல்லாம் பலிக்காத நிலையிலேயே மீண்டும் எம்மை சேறு பூசும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்கள். எவற்றுக்கும் எம்முடைய சுயெச்சை அணி அஞ்சப் போவதில்லை. 2020 ஆண்டு பொதுத் தேர்தலில் நாங்கள் புதிய சரித்திர வரலாற்றைப் படைப்போம் என்பது உறுதியுடன் கூறிக் கொள்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி சார்பில்லாமல் வேறு கட்சிகளில் போட்டியிடும் எமது முஸ்லீம் வேட்பாளர்களை ரவூப் ஹக்கீம் அவர்கள் ராஜபக்ஷ முகவர்கள் என்று பொதுமக்களிடம் பொய் கூறி அவர்களை திசைதிருப்புவதில் கில்லாடியாக காணப்படுகின்றார் .ஆனால் ரவூப் ஹக்கீம் ஒரு ரணில் முகவர் என்பதை தற்போது மக்கள் நன்றாக உணர்ந்து விட்டார்கள் .
ReplyDeleteஅப்போ ஏன் ஐக்கிய மக்கள் சக்தியுடன் உள்ளார்? யு என் பீ இல் இல்லையே?
ReplyDeleteThis group formed to spilt the Muslims votes from the money of ruling elite family.
ReplyDelete