Header Ads



நக்பா தினம் - மே 15


1948ல் இஸ்ரேல் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளினாலும் ஆக்கிரமிப்புகளினாலும் இலட்சக்கணக்கான ஃபலஸ்தீனர்கள் தம் சொந்த இடங்களை விட்டும் துரத்தப்பட்டனர்.

இத்துன்பகரமான சம்பவத்தை நினைவுபடுத்துமுகமாகவே நக்பா தினம் நினைவுகூரப்படுகிறது. அரபு மொழியில் நக்பா என்றால் பேரழிவு என்று பொருள்.

நக்பாவின்போது, இஸ்ரேலியர்கள் 774 ஃபலஸ்தீன கிராமங்களையும், நகரங்களையும், ஆக்கிரமித்ததோடு, 531 கிராமங்களையும் நகரங்களையும் துவம்சம் செய்து நாசமாக்கினர். அத்தோடு 70 க்கும் மேற்பட்ட இடங்களில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான ஃபலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு வருடமும் மே 15-ம் தேதி நக்பா தினம் நினைவுகூரப்படுகிறது. இத்தினத்தில், ஃபலஸ்தீனர்கள் மீண்டும் தம் பிரதேசங்களுக்கு மீள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தும் வகையில், ஆர்ப்பாட்டப் பேரணிகளும் பலஸ்தீனர்களின் பூர்வீகம் குறித்த கண்காட்சிகளும் நடாத்தப்படுவது வழக்கம்.


No comments

Powered by Blogger.