இறந்து போய் விட்டாயென்ற, இரங்கல் செய்தி கேட்டதிலிருந்து...!
இதயம் கணமாய் துடிக்குது
இரத்தம் அணலாய் கொதிக்குது..
இறந்து போய் விட்டாயென்ற
இரங்கல் செய்தி கேட்டதிலிருந்து...!
சர்க்கார்களின் பொடு போக்குத்தனம்
சமூகத்தாரின் அலட்சியக்குணம்
சரித்திரம் படைக்கவேண்டிய நீ.. இன்று
சந்திகளின் சுவரொட்டிகளில்....!!!
சாக்ரடீஸ் போலொரு மேதையாவோ
சாம்ராட் போலொரு வீரனாவோ
சாதிக்க வேண்டும் என்றே
சாமியிடம் வேண்டியிருப்பாள் உன் தாய்..!
பெற்றவர்களும் நினைக்கவில்லை
மற்றவர்களும் முனையவில்லை,
ஓட்டையாய் இருந்த குழியை
கூட்டமாய் மூடி மறைக்க...!
உலகிலேயே அதிகம் பால(க)ர்
உன்போல் பலர் மாண்டர் இங்கு
உலகிற்கு இன்று உந்தன் இறப்பு
உணர்த்தட்டும் மற்றுமோர் காவியத்தை...!
மீண்டுமொரு பாலகன் கொலை
மீளாமலிருக்கட்டும் இந்திய மண்ணில்
மாற்றம் ஒன்றே மாற்று வழி... அரசை
மாற்றிவிடும் மக்கள் மொழி...!
- sironmany -
F M Rozaan

Excellent My appreciation to you
ReplyDelete