Header Ads



ராஜகிரியவில் முஸ்லிம் வீடொன்றில், இனவாத குண்டர்கள் செய்த அக்கிரமம்

இல்லாத ஒரு பிரச்சினையை வேண்டுமென்றே உருவாக்கி அதன் மூலம் எமது பிரதேசத்திலும் முஸ்லீம்களுக்கு ஏதாவது கேடு விளைவிக்க வேண்டுமென்ற நோக்கோடு சில பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இனவாதிகளும் குண்டர்களும் செயற்படுகிறார்கள் என்பதை கடந்த சில வருடங்களாகவே அவதானிக்கக் கூடியதாயுள்ளது. எமது தொடர்ச்சியான  பொறுமையும் விட்டுக்கொடுப்பும் காரணமாக இவர்களுக்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்க்கொண்டிருக்கின்றது.

இவர்களின் இனவாத செயற்பாடுகளுக்கு அப்பால், வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு காரணங்களுக்காக அடிக்கடி பண வசூலில் ஈடுபடுவதோடு அதில் சிலர் முஸ்லிம் வீடுகளை மாத்திரமே இலக்காக கொண்டுள்ளார்கள் என்பதை அவதானிக்கக் கூடியதாயுள்ளது. வெசக், பொசொன் போன்ற பண்டிகை காலங்களில் பௌத்த கொடிகள், அன்னதானம், அலங்கார மின்விளக்கு போன்றவற்றிற்கு நாம் பண உதவிகள் வழங்கி வருவதுடன் பண்டிகைக்காலம் முடியும் வரையும் அலங்கார மின் விளக்குகளுக்கு தேவையான மின்சாரமும் எமது வீடுகளில் இருந்து கொடுத்து வருகிறோம், ஏனைய காலங்களிலும் எம்மால் முடிந்தவாரு பல்வேறு காரணங்களுக்காக உதவிகள் செய்து வந்தாலும் கூட, தற்போது நாட்டில் முஸ்லிம்கள் அச்ச சூழ்நிலையில் இருப்பதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள சில இனவாத குண்டர்கள் புதுப்புது காரணங்களுக்காகவும் பணம் வசூலித்து வருகிறார்கள்.

இவ்வாறு பணம் வசூலிக்கும் குண்டர்கள் சிலர் 2019 ஜுலை 7ம் தேதி இரவு எனது வீட்டிற்கு வந்து பணம் கேட்டனர் (இவர்கள் காலாகாலமாக வெவ்வேறு காரணங்களுக்காக முஸ்லிம் வீடுகளில் இருந்து மாத்திரம் பணம் வசூலிப்பவர்கள் என்பதனை நான் ஏற்கனவே அறிந்திருந்தேன்). என்னிடம் அவர்களுக்கு கொடுப்பதற்காக அப்போது பணம் இருக்கவில்லை என்று கூறிய போது அப்படி முடியாது என்று அந்த இடத்தை விட்டு நகர மருத்து என்னுடன் முரண்பட்டு சென்றவர்கள், மீண்டும் சில தினங்களில் பகல் வேளையில் எனது வீட்டுக்கு வந்து, வீட்டுக் கூரையின் மேல் அவர்களது பட்டம் ஒன்று விழுந்திருப்பதாகவும் அதை எடுக்க வீட்டுக் கூரை மேல் ஏறப்போகிரோம் என்றார்கள், கூரைத்தகடுகள் பழுதாகலாம் என்ற காரணத்தினால் கூரை மேல் ஏற வேண்டாம் என்று நான் சொன்ன போது, மிகவும் கீழ்த்தரமான தூசண வார்த்தைகளாலும் இனவாத வார்த்தைகளாலும் தூஷித்தவாறு, நீ கூரை மேல் குண்டுகளை பதுக்கி வைத்திருக்கிறாய் அதனால்தான் ஏற வேண்டாம் என்று சொல்கிறாய் உன்னால் முடிந்ததை செய் பார்ப்போம் என்றவாறு பெரும்பான்மை இன அயல் வீட்டார் முன்னிலையிலேயே பலவந்தமாக கூரைமேல் ஏறி பயங்கரவாதிகளின் வீடுகளை பரீட்சிப்பது போன்று, "பதுக்கி வைத்திருக்கும் குண்டுகளை தேடுகிறோம்" என்று கத்தியவாறு சில நிமிடங்களின் பின் கூரையிலிருந்து ஒரு பட்டத்தை எடுத்துக்கொண்டு கூக்குரலிட்டவாறு சென்றார்கள்.

அடுத்த சில தினங்களில் நான் வெளியூர் பயணமாக இருப்பதனாலும் இந்த சம்பவம் பற்றி போலீசில் முறையிட்டால் இவர்கள் மேலும் குண்டர்களை அழைத்து வந்து இப்பிரதேசத்தில் ஏதும் பதற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற சந்தேகத்தினாலும் வழமைபோன்று பொறுமையாகவே இருந்தேன். என்றாலும், இவர்கள் ஏதோ உள்நோக்கத்துடன் தான் இவ்வாறு செயற்படுகிறார்கள் அல்லது யாரோ இவர்கள் மூலம் ஏதோ ஒரு பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறார்கள் என்பதனை இவர்களது செயற்பாடுகளின் மூலம் புரிந்து கொள்ளக் கூடியதாய் இருந்தது.

தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் பிழைப்பு நடத்த காத்திருக்கும் இனவாதிகளிடம் இருந்தும், குண்டர்களிடம் இருந்தும் அவதானமாக இருங்கள் என்பதனையே இதன் மூலம் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

- M. Naseer -

3 comments:

  1. திருப்பி அடிக்காத வரையில் சிங்கள இனவாதிகளை அடக்க முடியாது. நாலு பேருக்கு நாற்பது முஸ்லிம்கள் சேர்ந்து பயமில்லாமல் சாத்திப்பாருங்கள் இவர்களின் உண்மை சுபாவம் புரியும்

    ReplyDelete
  2. பயத்தை விட்டு விட்டு நியாயம் நம் பக்கம் இருந்தால் இனவாதிகலை எதிர்க்க வேண்டும்

    ReplyDelete
  3. You have right to defend your self. Please don’t hesitate to take action.

    ReplyDelete

Powered by Blogger.