UAE யின் தேசிய தினம், இலங்கையில் கொண்டாடப்பட்டது
ஜக்கிய அரபு எமிரேட்ஸின் 47வது தேசிய தினம் நேற்று(03.12.2018) கொழும்பில் கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வுகள் கொழும்பில் உள்ள ஜங்கரில்லா ஹோட்டலில் இலங்கையில் உள்ள ஜ்க்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்கான துாதுவா் அஹமட் அலி அல் முல்லா தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றது. இந் நிகழ்வின்போது பிரதம அதிதியாக வெளிநாட்டு அமைச்சின் செயலாளா் ரவீந்திரநாத் ஆரியசிங்க அவா்கள் தேசிய தினத்தினை குறிக்குமாக 47வது தேசிய தினக் கேக்கை வெட்டி தேசிய தினத்தினை ஆரம்பித்து வைத்தாா்.
இந் நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் சபாநாயகா் கருஜயசூரிய ஆகியோா்கள் கலந்து கொண்டு இந் நிகழ்வுக்கு வருகை தந்தவா்களது அழைப்பிதழ்களை உள்ள இலக்கங்களைக் கொண்டு ஒரு சீட்டிலிப்பு குழுக்கள் ்முறையை நடாத்தினாா்கள். அதில் முதல் பரிசு பெற்றவருக்கு சிமாாட் போன் ஒன்றும் ஏனைய 4 பேருக்கும் துபாய் நாட்டுக்குச் சென்று வருவதற்கான பிரயாணச் சீட்டுக்களும் அதிதிகளினால் அதிர்ஸ்டசாலிகளுக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் புரவலா் ஹாசீம் ்உமா் முன்னாள் அமைச்சாகள் அரசியல்வாதிகள் வெளிநாட்டுத் துாதுவா்கள் என பலரும் கலந்து கொண்டனா்
Post a Comment