Header Ads



அரபாத் வீதிப் பலகை நீக்கம் - யூதர்களை கொன்றவரின் பெயரை சூட்டக்கூடாது என்கிறார் பெஞ்சமின்

இஸ்ரேலின் அரபு நகர வீதி ஒன்றுக்கு முன்னாள் பலஸ்தீன தலைவர் யாஸிர் அரபாத்தின் பெயர் சூட்டப்பட்டதற்கு இஸ்ரேல் பிரதமர் எதிர்ப்பு வெளியிட்டதால் அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது. வடக்கு இஸ்ரேலின் ஜாத் கிராமத்தில் உள்ள பெயர் பலகை அகற்றப்பட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

“இஸ்ரேலியர் மற்றும் யூதர்களை கொன்றவரின் பெயர்” இஸ்ரேல் வீதிக்கு சூட்டக்கூடாது என்று பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு கடந்த சனிக்கிழமை கூறி இருந்தார்.

யாஸிர் அரபாத்தை பலஸ்தீனர்கள் விடுதலைப் போராளியாக பார்த்தபோதும் பெரும்பாலான இஸ்ரேலியர் அவரை ஒரு தீவிரவாதியாகவே கருதி வருகின்றனர். இந்த பெயர் பலகை கடந்த ஒன்பது ஆண்டுகளாக இருந்து வருவதாக ஜாட் கவுன்ஸிலைச் சேர்ந்த முஹமது வதாத் இஸ்ரேலிய தொலைக்காட்சிக்கு கூறினார்.

இஸ்ரேலிய மக்கள் தொகையில் சுமார் 20 வீதமாக உள்ள அரபியர் தம்மை அரசியல் மற்றும் கலாசார அடிப்படையில் பலஸ்தீனர்களாகவே கருதி வருகின்றனர். 

No comments

Powered by Blogger.