Header Ads



'அரசாங்கத்தை பீதிக்கு உள்ளாக்கும், சதித்திட்டம் இடம்பெறுகிறது'

எதிர்ப்புகளை ஏற்படுத்தி அரசாங்கத்தை பீதிக்கு உள்ளாக்கும் சதித்திட்டம் இடம்பெற்று வருவதாக இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

தோல்வியடைந்த அணிகள் மக்களை தந்திரமான முறையில் தூண்டி அரசாங்கத்திற்கு எதிரான இந்த சீர்குலைப்பு திட்டத்தை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புத்தளம் மஹாகும்பக்கடவல கொட்டுக்கச்சிய பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த எதிர்ப்பு கட்டுப்படுத்த ராஜபக்ச நிகழ்ச்சி நிரலை பயன்படுத்த போவதில்லை.

அத்துடன் எதிர்ப்புகளை பார்த்துக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி நிரலை தற்போதைய அரசாங்கம் கையாளப்போவதில்லை.

கடந்த காலத்தில் ரத்துபஸ்வல, கட்டுநாயக்க, சிலாபம் பகுதிகளில் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து நடத்தப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதை மறக்க முடியாது.

இதனால், சந்தர்ப்பவாத அரசியல் அணிகளின் சூழ்ச்சிகளின் பின்னால் சென்று நடவடிக்கை எடுக்க நேரமில்லை.

நேரத்துடன் அந்த எதிர்ப்புகளையும் சதித்திட்டங்களையும் அடக்கும் விதத்தை எதிர்காலத்தில் காணமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.