Header Ads



நபிகளாரின் அறிவிப்பும், அமெரிக்காவின் கண்டுபிடிப்பும்...!!


DAILY MAIL என்ற பிரிட்டன் பத்திரிகை 23-02-2017 ஒரு ஆய்வு முடிவை வெளியிட்டது

அமெரிக்காவின் கலிபோர்னிய பல்கலைகழக ஆராட்சியாளர்கள் மேர் கொண்ட ஆய்வு தான் அது

ஆயிரம் பேரை கொண்ட ஒரு குழுவை இரண்டாக பிரித்து 500 பேர் அவர்களது வழமை போல் உணவு உட் கொள்ளவும் 500 பேர் மாதத்தில் ஐந்து தினங்கள் நோன்பு வைக்கவும் அறிவுறுத்த பட்டது

மாதத்தின் முடிவில் இரு சாராரும் பரிசோதிக்க பட்டனர் 

ஆச்சரிய படும் முடிவுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்

ஆம் நோன்பு வைக்காதவர்களோடு ஒப்பிடும் போது நோன்பு வைத்தவர்களின் இரத்த அழுத்தம் குறைவாக இருந்தது கொலஸ்றால் சம சீராக இருந்தது

பல நோய்களின் தாயாக உள்ள இரத்த அழுத்தம் கொலஸ்றால் போன்றவைகளை நோன்பு கட்டுபடுத்துவதை கண்டறிந்த விஞ்ஞானிகள் மேலும் சில ஆய்வுகளையும் மேர் கொண்டனர்

தொடர்ந்து மூன்று மாதங்கள் மீண்டும் மீண்டும் பரிசோதித்த ஆய்வாளார்கள்
முடிவில் பின்வரும் முடிவுக்கு வந்தனர்

ஆம் மாதம் ஐந்து தினங்கள் நோன்பு வைப்பது புற்று நோய் இதய நோய் சர்கரை நோய் போன்ற வற்றை கட்டு படுத்தும் என்று அறிவித்தனர்

நபிகள் நாயகம் அவர்கள்  வாரம் இரு நாள் நோன்பு வைப்பதை வழமையாக கொண்டிருந்தனர்

வாய்ப்பும் வலுவும் உள்ளவர்கள் அவ்வாறு வைக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டனர்

நபிகள் நாயகத்தின் நடை முறை பற்றி ஆயிஷா நாயகி சொல்வதை கேளுங்கள்

1725 
- ( عن عائشة قالت 
: { إن النبي صلى الله عليه وسلم كان يتحرى صيام الاثنين والخميس } .
رواه الخمسة إلا أبا داود

நபிகள் நாயகம்  வியாளன் திங்கள் ஆகிய நாட்களில் நோன்பு வைப்பதை வழமையாக கொண்டிருந்தனர் அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) ஆதாரம் புகாரி முஸ்லிம்

2 comments:

  1. அல்லாஹ் சொல்லாததில் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு செய்யும் மிகப்பெரிய அநியாயமாக இன்றைக்கு இருப்பது என்னவென்றால், அல்லாஹ்வையும் விஞ்ஞானி கண்டுபிடித்து தரவேண்டும் என்று முஸ்லிம் என்று சொல்லக்கூடிய மக்களே எதிர்பார்ப்பதுதான் ஆகும். நோன்பு, தொழுகை, ஹஜ்ஜு எல்லாமே ஈமான் கொண்ட மனிதனுக்கு ஆகும். இதனை காபிர் செய்து லபோரற்றியில் ஆய்வு செய்வதற்கு அல்லவே. அந்த காபிர் எப்படி, நோன்பு பிடித்து இருப்பான்? ஸஹர் செய்து இருப்பனா? எத்தனை மணித்தியாலம் நோன்பு பிடித்து இருப்பான்? இதையெல்லாம் விட அல்லாஹ்வின் தூதர் சொன்னதாக இருக்கின்றது, செயல்கள் எல்லாம் எண்ணங்களைப் பொறுத்தே.

    ReplyDelete
  2. Let's take positive aspect of the article n intention of the writer .
    Reading between the lines it substantiates the phisical benifits of fasting .
    Good piece of article .

    ReplyDelete

Powered by Blogger.