Header Ads



பலிக்கடாவாக்கப்பட்டவனே நான் - அப்துர் ராஸிக்

(SLTJ பொதுச் செயலாளர் அப்துர்ராஸிக் வழங்கிய, நேர்காணல் இங்கு சுருக்கித் தரப்படுகிறது. நன்றி - மீள்பார்வை)

நீங்கள் அண்மையில் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன?

மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு தேரரை திட்டினோம் என்ற காரணத்தை சொல்லியே வழக்குத் தொடுத்தார்கள். ஆனால் இவர்கள் என்னை உண்மையிலேயே பௌத்த மதத்தை அல்லது தேரரை திட்டினேன் என்ற காரணத்தை வைத்து கைதுசெய்யவில்லை. இவர்கள் என்னை அரசியல் தேவையொன்றிற்கா கவே கைது செய்தார்கள். டான் பிரசாத்  பல காலமாக இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கெதிராக இனவாதத்தை பரப்பிக் கொண்டிருக்கின்ற இனவாதி. அவனை அரசாங்கம் கைதுசெய்யவில்லை. எமது ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வோரை தாக்குவோம் என்று அவன் பகிரங்கமாக எச்சரித்தால் நாம் பொலிஸாரிடம் முறையிட்டோம். அந்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவன் கைதுசெய்யப்பட்டான். இந்தக் கைதுக்கு நாங்கள்தான் காரணமென முஸ்லிம் அரசியல்வாதிகளும் அமைப்புகளும் பெருமையாக உரிமை கொண்டாடுகின்றார்கள்.

இதனால் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இவனை கைதுசெய்தால் சிங்கள மக்கள் கொந்தளிப்பார்கள். எனவே மக்களை சமாதானப்படுத்துவதற்காக அப்துர் றாஸிக்கையும் கைதுசெய்ய வேண்டுமென அமைச்சர் சாகல ரத்தனாயக்க பிரதமரிடம் குறிப்பிட்டிருந்தார். எனவே ஒரு பௌத்த இனவாதியை கைதுசெய்வதற்காக அரசினால் பலிக்கடாவாக்கப்பட்டவனே நான். ஒரு அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கமையவே நான் கைதுசெய்யப்பட்டேன். இது கண் டிக்கதக்க ஒரு விடயம். நல்லாட்சி அரசாங்கத்தின் நல்லதொரு அறிகுறியாக இது விளங்கவில்லை.

நீங்கள் ஒரு பௌத்த மதகுருவை நிந்தித்தமை குறித்து என்ன சொல்ல வருகிறீர்கள்?

ஒரு மதகுரு என்பவர் நல்ல முறையில் நடந்துகொள்ள வேண்டும். மதகுரு ஒருவர் சிறுவர் துஷ்பிரயோகம் செய்தால் அவரைக் கண்டிக்க கூடாது அல்லது கைது செய்யக் கூடாது என்ற சட்டம் இருக்கின்றதா? மதகுரு இவ்வாறான பாவங்களை செய்தால் ஏனைய மனிதர்களை விட அவருக்குத்தான் கூடிய தண்டனை வழங்க வேண்டுமென்பது மனித இயல்பு. அவர்கள் மதகுரு என்ற போர்வையில் தூசனம் பேசுவார்கள், மிரட்டுவார்கள், கொலை செய்வோம் என்பார்கள், நாட்டை விட்டு விரட்டுவோம் என்பார்கள். அதை நாங்கள் கண்டிக்கக் கூடாது என்றால் இந்த நாட்டில் சட்டம் அனைவருக்கும் சமம் என்பது பொய்த்து விட்டது என்றுதான் அர்த்தம். நாங்கள் ஒரு மதகுருவை திட்டவில்லை. இந்த நாட்டில் இனவாதத்தைக் கக்கிய ஒரு நபரைத்தான் திட்டினோம், விமர்சித்தோம்.

தனது மானத்திற்கு களங்கம் ஏற்படுத்தியதாக ஞானசார தேரர் வழக்குக் தொடுத்திருந்தாரா?

அவர் எனக்கெதிராக எந்த வழக்கும் கொடுக்கவில்லை. இது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இடம்பெற்ற கைதுதான் என் பதை மீண்டும் தெளிவாக சொல்கிறேன். 

SLTJ அமைப்பிற்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபாயவுக்கும் தொடர்பு இருப்பதாக ராஜித சேனாரத்ன அமைச்சரவைக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இந்தக் கருத்துக்கு எதிராக SLTJ அமைப்பு எத்தகைய மறுப்பையும் தெரிவிக்கவில்லையே?

அமைச்சர் ராஜிதவின் கருத்தை மறுத்து எமது அமைப்பு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. ராஜித சொன்னது போல எனக்கும் NIB இற்கும் தொடர்பு இருப்பதாக இருந்தால் ஆதாரங்களைக் கொண்டு வந்து நிரூபிக்க வேண்டும். வாய்க்கு வந்தபடி யாரும் எதையும் சொல்லலாம் ஆனால் அதனை உண்மைப் படுத்துவதற்கு ஆதாரங்கள் மூலமாக நிரூபிக்க வேண்டும்.

NIB இல் நான் வேலை செய்ததாக ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் அது என்ன தப்பு என்று கேட்கின்றேன். அது அரசாங்கத்தினுடைய ஒரு திணைக்களம். நான் அல்கைதாவுடனோ அல்லது LTTE உடனோ அல்து ISIS உடனோ தொடர்பு வைத்திருந்தால் அது பாரதூரமானதொரு விடயம். அது விமர்சிக்கப்பட வேண்டியதுதான். NIB உடன் கூட நான் தொடர்புபட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மை.

மஹிந்தவிற்கோ கோத்தாபாயவிற்கோ வால் பிடிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்குக் கிடையாது. குறிப்பாக கோத்தபாயதான் இந்த பொதுபலசேனாவை உருவாக்கியவர் என்று பொது இடங்களில் விமர்சித்திருக்கின்றோம். எங்களுக்கும் NIB இற்கும் இடையிலான ஒரே தொடர்பு அவர்கள் எங்களுடைய அமைப்பு தொடர்பான விடயங்கள் சந்தேகங்களை எங்களிடம் வினவுகின்றபோது அதனை நாங் கள் தெளிவுபடுத்துவது மாத்திரமே.

மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள். குறிப்பாக முஸ்லிம் அமைப்புகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. இதனால் அனைத்து அமைப்புகளுக்கும் அச்சத்திற்கு மத்தியிலேயே இயங்கின. என்றாலும் நீங்கள் மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் சுதந்திரமாக இயங்கினீர்கள் ஏதாவது சலுகைகள் வழங்கப்பட்டனவா?

2015 நவம்பர் மாதத்தில் நாங்கள் குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு வெளி யீட்டு விழாவை நடாத்தினோம். இது நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே இடம்பெற்றது. எனவே நல்லாட்சியில் தான் நாங்கள் சுதந்திரமாக இயங்கினோம். மஹிந்தவின் ஆட்சிக்காலத்திலும் நாங்கள் எங்களுடைய செயற்பாடுகளை சுதந்திர மாகவே முன்னெடுத்துச் சென்றோம்.

எங் களைப் பொறுத்தவரையில் யாருடைய ஆட்சிக்காலமாக இருந்தாலும் எங்களுடைய செயற்பாடுகளை சட்டத்திற்கு உட்பட்ட வகையில் முன்கொண்டு செல்வோம். கடந்த ஆட்சியில் தம்புள்ள பள் ளிக்கெதிராக பிரச்சிணை ஏற்பட்டபோது ஆர்ப்பாட்டம் செய்தோம். அதுபோன்று மஹிந்தவின் காலத்தில் ஜெனீவா பிரேர ணைக்கு எதிராக இன்னொரு ஆர்ப்பாட்ட மொன்றை செய்தோம். அப்போது மஹிந்த விற்கு ஆதரவாக செயற்படுகின்றோம்  என நினைத்துக் கொண்டார்கள்.

அந்த இடத்தில் நாங்கள் மஹிந்தவை பார்க்கவில்லை. நாட்டைத்தான் பார்த் தோம். எங்களுடைய நாட்டை சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிவதற்கு ஒரு போதும் விடமாட்டோம். அந்த அடிப் படையில்தான் GSP+ சலுகைக்காக எமது முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்  கள் மேற்கொள்ளப்படுவதனை விட மாட் டோம். அமைப்பு ரீதியாக நாங்கள் எந்த ஆட்சியாளர்களுக்கும் ஆதரவு செலுத்து வதுமில்லை எதிர்ப்புத் தெரிவிப்பது மில்லை. இந்த அடிப்படையில் செயற்படக் கூடிய அமைப்பு அரசியல்வாதிகளின் நிக ழ்ச்சி நிரலுக்கேற்ப செயற்பட்டது என்பத னை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

2 comments:

  1. GSP+ சலுகையை இந்த அரசுக்கு எதிராக, மக்களை திசை திருப்பும் நோக்கில் உங்களது விருப்பு வெறுப்புக்காக பாவித்தீர்கள் என்பதுதான் நிதர்சனம். GSP+ விடயத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் ஏற்கனவே சில முஸ்லீம் அமைப்புக்களால் ( முஸ்லீம் பெண்கள் அமைப்பு) கூறப்பட்டவையும், மொரகடவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவும் இவைக்கு சாட்சி பகர்கிறது. இவைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு எதோ இந்த அரசாங்கம் புதிதாக செய்கிறது என்ற ஒரு பொய் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது எந்த வகையில் ஒரு இஸ்லாமிய அமைப்புக்கான நேர்மைத்தன்மையை வெளிப்படுத்தும். உள்ளதை உள்ளபடி இறைவனுக்கு அஞ்சி செயட்படுங்கள். அதை விடுத்து உங்களது தர்க்கிக்கும் ஆற்றலையும் அறிவையும் வைத்து மக்களை கூட்டலாம் ஜனகராஞ்சனப்படுத்தலாம் என்று நீங்கள் செயட்படுவீர்களானால். நிட்சயம் இறைவனின் நீதி எதோ ஒருவடிவத்தில் உங்களை குறுக்கிடும் எனபதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete
  2. GSP+ சலுகையை இந்த அரசுக்கு எதிராக, மக்களை திசை திருப்பும் நோக்கில் உங்களது விருப்பு வெறுப்புக்காக பாவித்தீர்கள் என்பதுதான் நிதர்சனம். GSP+ விடயத்தில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் ஏற்கனவே சில முஸ்லீம் அமைப்புக்களால் ( முஸ்லீம் பெண்கள் அமைப்பு) கூறப்பட்டவையும், மொரகடவினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவும் இவைக்கு சாட்சி பகர்கிறது. இவைகள் எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு எதோ இந்த அரசாங்கம் புதிதாக செய்கிறது என்ற ஒரு பொய் பிரச்சாரத்தை மக்கள் மத்தியில் முன்னெடுத்தது எந்த வகையில் ஒரு இஸ்லாமிய அமைப்புக்கான நேர்மைத்தன்மையை வெளிப்படுத்தும். உள்ளதை உள்ளபடி இறைவனுக்கு அஞ்சி செயட்படுங்கள். அதை விடுத்து உங்களது தர்க்கிக்கும் ஆற்றலையும் அறிவையும் வைத்து மக்களை கூட்டலாம் ஜனகராஞ்சனப்படுத்தலாம் என்று நீங்கள் செயட்படுவீர்களானால். நிட்சயம் இறைவனின் நீதி எதோ ஒருவடிவத்தில் உங்களை குறுக்கிடும் எனபதை மறந்து விடாதீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.