Header Ads



கவிஞர் முத்துக்குமார் மரணம் - காஷ்மீர் குறித்து, அவர் எழுதிய பாடல்..!


பாடலாசிரியர் 'முத்துக்குமார்' மரணம்...
காஷ்மீர் குறித்து அவர் எழுதிய பாடலை 
நினைத்துப் பார்க்கவேண்டிய தருணம்..!

-----------------------

அல்லாஹ்வே எங்களின் தாய் பூமி
பூவாசம் பொங்கிய 'தால்' ஏரி
பூவனம்
போர்களம்
ஆனதெனோ
பனிவிழும்
மலைகளில்
பலிகள் ஏனோ
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அழகாய் மாராதா..
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அமைதி காணாதா..
உம்மை நானும் கேட்பது
மீண்டும் எங்கள் கஷ்மிர்..
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அழகாய் மாராதா..
யா அல்லாஹ்
எங்கள் கஷ்மிர்
அமைதி காணாதா..
ஓ... அந்த ஆப்பிள் தோட்டம் இங்கே
கல்லரை தோட்டம் ஆனதோ..
பள்ளத்தாக்கின் பசுமை எங்கே
ரத்த கோலம் பூண்டதோ
வாழ்கையே இங்குதான் 
வலிகளாய் போனதே
எங்கள் பெண்கள் முகங்கள் 
சிவந்ததெல்லாம்
நாணம் கொண்டு அன்று...
மரணம் கண்டு இன்று...
ஓ... எங்கள் கஷ்மிரின் ரொஜ பூ
விதவைகள் பார்த்து அழதானா...
ஓ... எங்கள் கஷ்மிரின் வாரிசுகள்
மரணத்தின் கையில் விழத்தானா...
எங்களின் மண்ணில் 
குண்டு வைத்து
எங்கும் ஓலம்
எங்களின் கண்ணில் 
கத்தி வைத்து
குத்தும் காலம்
யா அல்லாஹ்
எங்கு போகும்
கஷ்மிர் புராக்கள்..
யா அல்லாஹ்
என்று தோன்றும்
கஷ்மிர் விழாகள்..
எங்கள் அன்றைய 
கஷ்மிர்
எங்கள் கஷ்மிர்
ஓ... எங்கள் சோர்க பூமியை இன்று
சாக்காடாய் யார் செய்தார்..
எங்கள் சொந்த பிள்ளையை
பலி கேக்கும்
சதி எல்லாம் யார் செய்தார்..
கலவரம் முடியுமா..
நிலவரம் மாருமா..
எங்கள் வீட்டுத் தோட்டம் 
முன்பு போல்
பூக்கள் பூத்திட வெண்டும்
புதை குழி அழிந்திட வெண்டும்
சாலையில் சென்று வர இன்று
சாவினை வென்று வர வெண்டும்
இந்த நிலையை 
தந்தாரோ
புரியவில்லை
கண்களை 
மூடியும்
தூக்கம் இல்லை
மேகம்கூட
கண்ணீரை
சோகமாய் சிந்துதே
எங்கள் கஷ்மிர்...!!!
எங்கள் கஷ்மிர்...!!!
நன்றி - கவிஞர் முத்துக்குமார்

No comments

Powered by Blogger.