Header Ads



என் கண்களை கசியச்செய்த, அந்த மனிதர் அல்காரி ஸஅத் அல் காமிதி

தனது அழகிய குரல் வளத்தால் அனைவரது இதயங்களிலும் நீங்காத இடம் பிடித்திருக்கும் உலகப் புகழ் பெற்ற காரிகளுள் ஒருவரான சஊதி அரேபியாவைச் சேர்ந்த அல்காரி ஸஅத் அல் காமிதி அவர்களை கடந்த வருடங்களில் சஊதி அரசு புனித கஃபதுல்லாவின் இமாமத் பதவிக்கு வரும்படி பலவிடுத்தம் வேண்டிக் கொண்டது. 

அல்காரி ஸஅத் அல் காமிதி அவர்கள் அதற்கு கூறிய பதில்தான் நபிகளாரின் காலத்தில் வாழ்ந்த உவைஸுல் கர்னியின் வரலாற்றை ஞாபகப்படுத்துகிறது. 
அப்படி அவர் என்ன சொன்னார் ? 

எனது தாய் தந்தையை நான்தான் பராமரித்து வருகிறேன். என் தாய் தந்தையை விட்டு விட்டு கஃபதுல்லாவில் இமாமத் பதவிக்கு வந்தால் நான் எனது தாய் தந்தைக்கு செய்யவேண்டிய கடமைகளில் குறைவு செய்தவனாகி விடுவேன். ஆகவே என்னால் வரமுடியாது எனக் கூறியுள்ளார். 

அதற்கு சஊதி அரசு அல்காரி ஸஅத் அல் காமிதி மற்றும் அவரது தாய் தந்தை எல்லோருக்கும் ஹரம் ஷரீபுக்கு அண்மையிலே வீடு வசதி செய்து தருவதாக தெரிவித்தது. எனினும் அவரது பெற்றோருக்கு பிறந்த மண்ணை ( தம்மாம் ) விட்டு விட்டு வர முடியவில்லை.

ஆதலால் பெற்றோர் அந்த வாய்ப்பையும் ஏற்க மறுத்துவிட்டனர்.

பெற்றோர் அங்கு வருவதற்கு மறுத்துவிட்டமையால், அல்காரி ஸஅத் அல் காமிதி அவர்களோ பெற்றோரை விட்டு விட்டு ஹரம் ஷரீபின் இமாமத் பதவிக்கு தாம் ஒரு போதும் வரப்போவதில்லை என மறுத்துவிட்டார்கள்.

அல்காரி ஸஅத் அல் காமிதி அவர்கள் தற்போது தம்மாமின் கானூ மஸ்ஜிதின் பிரதான இமாமாக கடமை புரிந்து கொண்டுருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

சுப்ஹானல்லாஹ். இந்தக் காலத்திலும் ஸஹாபாக்கள் போன்ற வாழ்க்கை வாழக்கூடிய மேன் மக்களும் உள்ளனர் என்பதை நினைக்கும் போதே உடம்பெல்லாம் புல் அரிக்கிறது.

தமது பொற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக மாத்திரமே உலகிலேயே அதி உன்னதமான பதவியைக் கூட அடைந்து  கொள்ள மறுத்த என்றும் எனது அன்புக்குரிய அல்காரி  ஸஅத் அல் காமிதி அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக அவரது அந்தஸ்துக்களை இம்மையிலும் மறுமையிலும் உயர்த்துவானாக. 

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

3 comments:

  1. செய்தியை பார்த்துக் கொண்டே அழவேண்டி இருக்கிறது கண்கள் குழமாகிறது

    ReplyDelete
  2. உண்மையில் எமக்கு படிப்பினை தரும் செய்தி.

    ReplyDelete
  3. May Allah acknowledges him and his filial duty to his parents!

    ReplyDelete

Powered by Blogger.