Header Ads



நமது மார்க்கப் போதகர்கள் குறித்து, பிற சமய சகோதரர்கள்

அன்பின் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

என்னுடன் சுமுகமாகப் பழகும் ஒரு மாற்று மத சகோதரர் என்னிடம் கூறிய ஒரு விடயம் பற்றி நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

குறித்த சகோதரர் அவரது மத போதகரின் போதனை ஒழுங்கிலும் நமது வெள்ளிக்கிழமை பிரசார உரையின் ஒழுங்கையும் நன்கு அவதாணித்து அது பற்றி என்னிடம் குறிப்பிடுகையில் பின்வருமாறு கருத்துரைத்தார்.

நண்பரே நான் வாராந்தம் செல்லும் கிறிஸ்தவப பள்ளியில் நடக்கும் மதபோதனைகளை நடாத்துபவர் எதுவிதமான ஆரவாரமும் இன்று மிக நிதானமாகவும் அமைதியாகவும் கருத்தை முன்வைப்பதை நான் அவதாணித்துள்ளேன். மாறாக நீங்கள் வாராந்தம் ஒவவொரு வெள்ளிக்கிழமைகளிலும் சென்றுவருகின்ற வெள்ளிக்கிழமை உரையை நான் பல இடங்களில் அவதாணித்துள்ளேன். இவ்விரண்டையும் ஒப்பிடுகின்ற போது உங்களது போதகர் மிக உரத்த குரலில் சில வேலை வன்முறையுடன் கூடிய உரையாக இருக்கின்றதே என்று எண்ணுமளவுக்கு மிகக் காரசாரமானதாகவும் மென்மையைக் கண்டுகொள்ள முடியாத விதத்திலும் காணப்படுவதனை நான் அவதாணித்துள்ளேன்.

சில வேளைகளில் இறைவனிடம் பிரார்த்திப்பது கூட அடித்துப் பரிப்பது போன்று ஒரு தோரனையில் உள்ளதை நான் அவதாணித்து உள்ளேன். எனது அவதாணம் தவறு எனின் மண்ணிக்கவும் என்று என்னிடம் கருத்துரைத்தார்.

குறித்த சகோதரரிடம் அதனை ஒத்துக்கொள்வதனையும் அது இஸ்லாம் கற்றுத்தந்துள்ள வழிமுறையன்று என்பதனையும் எனினும் இவ்வாறு அனைத்துப் போதகர்களும் நடந்துகொள்வதில்லை என்று ஒருவாறு சமாளிப்பதனையும் தவிற என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை.

ஆவேசமான பயான்களை குறிப்பாக ஜும்ஆ பயான்களை ஒலிபெருக்கியில் கேட்கும் மாற்றார்கள் முஸ்லிம்களைப் பற்றிய தவறான கருத்தாடல்களுக்குத் துணையாக இதைப் பயன்படுத்துகின்றனர்.

ஒலிபெருக்கியில் பேசப்படும் பேச்சுக்கள் பல்வேறு தரப்பையும் சென்று அடைவதால் மென்மையான அதேசமயம் சிந்தனையைத் தூண்டும் வகையில் பயான் செய்ய நம்மவர்கள் பக்குவப்பட வேண்டும்..

சில வேளைகளில் இறைவனிடம் பிரார்த்திப்பது கூட அடித்துப் பரிப்பது போன்று ஒரு தோரனையில் உள்ளதை

குறித்த சகோதரர் சொல்ல வந்தது இறைவனிடம் கையேந்திப் பிரார்திக்கும் போது கூட மென்மையான விதத்தில் தயை கூரந்து இறைவனிடம் கேட்பதாக அன்றி பலவந்தமாக வேண்டும் தோரனை என்று குறிப்பிட்டமை அவதாணிக்கத்தக்கது. உண்மையில் குறித்த ஒரு குத்பாவைக் கேட்ட பின்பு அது தொடர்பில் ஏற்பட்ட உரையாடலில் தான் இவ்வாறு கருத்துரைத்தார்.

அத்துடன் அவர் அவரது மதப்போதகரை உயர்த்தும் நோக்கில் கதைக்கவில்லை மாறாக ஒரு நிதர்சனமான ஒப்பீட்டையே முன்வைத்தார். நாம் அவர்களது மதப் போதகிரின் நிலைமை குறித்து இங்கு வாதிப்பதற்காக நான் இதனை எழுதவில்லை.

நாம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்பதால் நம்மிடையே நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய மாற்றம் குறித்து நமது உரையாடலை அமைத்துககொள்வோம்.

நமது வாழ்வில் மிக ஆவேசமான குத்பாக்கள் நாம் செவிமடுக்காமல் இல்லை. சிலவேளைகளில் குத்பா பிரசங்கம் செய்பவருக்கே என்ன பிரச்சாரம் செய்தார் என்பது பற்றி பிறகு சொல்ல வேண்டிய நிலைமையை நாம் அவதாணிக்கின்றோம்.

இது குத்பாப் பிரசங்கள், வியாழன் வெள்ளிக் கிழமைகளில் இடம் பெரும் மாலை நேர மார்க்கத் தெளிவுரைகள் என்று அடுக்கிக்கொண்டு போகலாம்.

இந்நிலைமை மாற குறித்த பிரசாரகர்கள், நமது பள்ளி நிர்வாகத்தினர் போன்றவர்கள் கூடிய கவனமெடுத்தல் அவசியம் என்பது எனது தாழ்மையான கருத்தாகும்.

Postede by: Thalib Zakky

14 comments:

  1. no doubt there must be some improvement in the quality of Friday sermons in our mosques and but what this brother in other faith tells not always right.. there are so many imams who speak with calmness in sermons and but nothing wrong when emotional comes in sermons. Allah not only address human brains and He also touch human hearts as well.. so, nothing wrong in emotional sermons.. unlike christian missionary talks. they not only lost their brain they lost their hearts as well. dryness of their talks are apparent.. that is why many people come to Islam with our heart touching talks. do not be fooled with your friends advice .. they always try to find fault on us to misguide you

    ReplyDelete
  2. நண்பரே இறைவனிடம் அடித்துப்பறிப்பது போன்றுதான் நாம் கேட்க வேண்டும். ஏன் தெரியமா? முஸ்லிம்களாகிய நாம் அல்லாஹ்தான் அனைத்தையும் தர தகுதியுடையவன், அவன் அளவற்ற அஅருளாளன். வேறு யாரிடமும் எங்களுக்கு பேட்க முடியாது. இறைவனே கூறுகிறான் அவன் கீழ் வானத்தில் வந்து எனது அடியார்கள் யாரும் என்னிடம் கையேந்தமாட்டானா என்று.
    எங்கள் ஈமானில் உள்ள குரைதான் நான் அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்காமல் இருப்பது.
    நாம் அனைவரும் அல்லாஹ்விடம் மன்றாடி ( அதாவது அடித்துப்பறிப்பது போன்று) தான் கேட்கவேண்டும். அது பாவமன்னிப்பு கேட்பதாக இருந்தாலும் சரி, பாத்திரம் நிறைய பணம் கிடைக்க வேண்டுமென்றாலும் சரி.
    அவனைத்தவிர வேறு யாரிடமும் எங்களுக்கு மன்றாட ( அடித்துப்பறிக்க) அனுமதியில்லை.

    ReplyDelete
  3. Wrong article for wrong reasons islam not a man mad religion we have guidelines from our messenger
    Writer should learn more about islam

    ReplyDelete
  4. கட்டுரை உண்மையான தகவலையே கூறுகின்றது. மெளலவிமார் பள்ளிவாசல்களில் காட்டுக் கத்தலும், வெறிக் கத்தலும் கத்துவதால், அதனை கேட்டு வளரும் முஸ்லிம்களின் பண்பும் அப்படியே மாறி விடுகின்றது.

    முஸ்லிம்களின் உள்ளம் வன்முறை சிந்தனை கொண்டதாகவும், மார்க்கம் என்று பேசினாலே மோசமான, கொடூரமான வார்த்தைகளில் பேசுவதுமாக மாறிப் போனதில் சும்மாக்களின் பொழுதும், பயான்களின் பொழுதும் மவ்லவிகள் போடும் சத்தங்கள் முக்கிய காரணமாகும்.

    பள்ளிவாசல் பூராவும் மைக் செட், ஸ்பீக்கர் இருந்தும் என்ன காரணத்திற்காக இவர்கள் இப்படி கூச்சல் போட்டு அடித் தொண்டையில் காட்டுக் கத்தல் கத்த வேண்டும்?

    பண்பாகவும், அமைதியாகவும் மார்க்கத்தை பிரச்சாரம் செய்தால், அதனை கேட்டு பின்பற்றுகின்ற மனிதர்களிடமும் அதே பண்பு வரும்.

    ReplyDelete
  5. அந்த மாற்று மத சகோதரர் சொல்வது முற்றிலும் உண்மை அதுவே இஸ்லாத்திற்கும் மாற்று மதங்களுக்கும் இடையான வேறுபாடும் கூட இஸ்லாம் இது சர்வபலம் பொருந்திய இறைவனால் அனுப்பப்ட்ட மார்க்கம் என்றும் இதைத் தவிர ஏனையவைகள் அனைத்தும் பின்பற்றத் தகாதவைகள் என்று வாதிடுவதுடன் தனது மார்க்க விடயங்களிலும் சரியான தூய்மையான மற்றும் முறையான நெறிகளை மாத்திரம் செய்யச் சொல்லும் மார்க்கம் மாறாக மாற்று மதங்களில் மதப்போதகர்கள் யார் சொன்னாலும் இவை ஏற்க்கப்டத்தக்கவையாக இருக்கும் எனவேதான் அந்த மதங்களில் மதப்போதகர்களின் சொல்லப்படும் விதம் அதாவது அவர்கள் மக்களைக் கவர்ந்திளுக்கும் வகையில் அமைத்துக் கொள்கின்றனர் இஸ்லாத்தில் மார்க்கம் என்பது மனிதனால் உருவாக்கப்பட்டதாக எடுத்துக்காட்டப்படவில்லை இது இறைவனால் அனது தூதர்கள் மூலம் மணிதனுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளதுடன் அவற்றை பின்பற்றினால் இறைவனால் வழங்கப்டும் கூலிகளையும் மறுத்தால் விதிக்கப்படும் தண்டணைகளுயும் விளக்குகின்றது அதாவது ஓர் தயாரிப்பாளர் தனது தயாரிப்பிற்கு வழகாட்டியை வழங்குவது போல வழிகாட்டிகளின் சொல்லப்படும் போது ஒருபோதும் செய்யப்படவேண்டியவைகள் மற்றும் செய்யப்படக் கூடாதவைகள் கண்டிப்பான அறிவுறுத்தல்களாகவே சொல்லப்படும் இந்த வகையலை; தான் உலகைப் படைத்தவனும் அவனது வழிகாட்டியின் ஏவல் விலக்கல்களை விதித்துள்ளான் (இந்த உதாரணம் புரிதலுக்கு மாத்திரம்) உங்களிடம் கேட்ட ந்னபர் ஓர் கிறித்தவ சகோதராக இருப்பதனால் கீழுள்ள வசனங்களை விளக்கும் போது அவர்கள் எவ்வாறு விளக்குகின்றனர் என்று கேளுங்கள் அப்போது அவரே உணர்ந்து கொள்வார் ஏன் எமது ஆலிம்களின் தொணி கடுமையாக உள்ளது என்று

    1:23-33 (Proverbs 1:23-33)
    23. என் கடிந்துகொள்ளுதலுக்குத் திரும்புங்கள்; இதோ, என் ஆவியை உங்களுக்கு அருளுவேன்; என் வார்த்தைகளை உங்களுக்குத் தெரிவிப்பேன்.
    24. நான் கூப்பிட்டும், நீங்கள் கேட்கமாட்டோம் என்கிறீர்கள்; நான் என் கையை நீட்டியும் கவனிக்கிறவன் ஒருவனும் இல்லை.
    25. என் ஆலோசனையையெல்லாம் நீங்கள் தள்ளி, என் கடிந்துகொள்ளுதலை வெறுத்தீர்கள்.
    26. ஆகையால், நானும் உங்கள் ஆபத்துக்காலத்தில் நகைத்து, நீங்கள் பயப்படுங்காரியம் வரும்போது ஆகடியம்பண்ணுவேன்.
    27. நீங்கள் பயப்படுங்காரியம் புசல்போல் வரும்போதும், ஆபத்து சூறாவளிபோல் உங்களுக்கு நேரிடும்போதும், நெருக்கமும் இடுக்கமும் உங்கள்மேல் வரும்போதும், ஆகடியம்பண்ணுவேன்.
    28. அப்பொழுது அவர்கள் என்னை நோக்கிக் கூப்பிடுவார்கள்; நான் மறுஉத்தரவு கொடுக்கமாட்டேன்; அவர்கள் அதிகாலையிலே என்னைத் தேடுவார்கள், என்னைக் காணமாட்டார்கள்.
    29. அவர்கள் அறிவை வெறுத்தார்கள், கர்த்தருக்குப் பயப்படுதலைத் தெரிந்துகொள்ளாமற்போனார்கள்.
    30. என் ஆலோசனையை அவர்கள் விரும்பவில்லை; என் கடிந்துகொள்ளுதலையெல்லாம் அசட்டைபண்ணினார்கள்.
    31. ஆகையால் அவர்கள் தங்கள் வழியின் பலனைப் புசிப்பார்கள்; தங்கள் யோசனைகளினால் திருப்தியடைவார்கள்.
    32. பேதைகளின் மாறுபாடு அவர்களைக் கொல்லும், மூடரின் நிர்விசாரம் அவர்களை அழிக்கும்.
    33. எனக்குச் செவிகொடுக்கிறவன் எவனோ, அவன் விக்கினமின்றி வாசம்பண்ணி, ஆபத்திற்குப் பயப்படாமல் அமைதியாயிருப்பான்.

    ReplyDelete
  6. மேலும் இஸ்லாம் மார்க்கம் இறைவனின் தூதர் என்று அவனால் அனுப்பப்ட்ட தூதர்கள் போதித்த விதத்தில் போதிக்கப்படல் வேண்டும் அதாவது பல இடங்களில் எமது ஆலிம்கள் மார்க்கத்தை முறையாகக் கற்று சொற்பழிவுகளை நிகழ்த்த வேண்டும் என்பதும் இதில் அடங்கியுள்ளது சிலர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றேன் அவ்வாறு செய்யச் சொல்லி இறைவனும் அவனது தூரரும் கட்டளையிட்டுள்ளார்கள் என்பதாற்காக ஒலிவாங்கி வெடிக்கும் அளவிற்கு கத்த தேவையில்லை அன்று அல்லாhவின் தூதர் அவர்கள் வழிகாட்டியாக அதாவது வாழும் வழிகாட்டியாக இருந்ததனால் அவர்களின் முகபாவனை மற்றும் செயல்களில் வெறுப்பு விருப்பு மற்றும் விலக்கல்களுக் காட்டினார்கள் ஆனால் அவை எவை என்று தெளிவான அறிவில்லாமல் சிலர் எடுத்ததற்கெல்லாம் சத்தத்தை உயர்த்துவதும் விரும்பத்தக்கதல்ல மேலும் அனேகமான மௌலவிகள் தாங்கள் உரை நிகழ்த்தும் தலைப்பிற்கு ஏற்ப உரைகளைத் தயார்படுத்தி பேசுவதில்லை பலர் ஏனோதானே என்று வந்து வாய்கு வந்தவைகளையெல்லாம் பேசும் போது அவர்கள் ஏனோ இறையச்சத்தை ஊட்டுகின்றனர் என்பதை காட்டவும் கூச்சலிடுகின்றனர் இவைகளைத் தவிர்க்க நமது ஆலிம்கள் முதலில் போச இருக்கும் தலைப்பில் நபியவர்களி வழிகாட்டுதல் எவ்வாறு அமைந்திருந்தது என்பவை ஒழுங்கிட்டு பேசுவார்களோ ஆனால் இறையச்சம் கேட்பவர்களுக்கு தானாகவே வரும் முதலில் வார்த்தைகளில் சிறந்த வார்த்தை இறைவேதம் என்பதையும் வழிகாட்டல்களில் சிறந்த வழிகாட்டல் அவனது துர்தரிர் வழிகாட்டல் என்பதையும் நமது ஆலிம்கள் விளங்கி பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டடால் போதும் மார்க்கம் தானாக வளரும்

    ReplyDelete
  7. கட்்டுரை ஆசிரியர்் சொல்்லவேண்்டியதை நேரடியாக சொல்்லலாம்்.மாற்்று மதத்்தவரை சேர்்க்்கத்்தேவையில்்லை.

    ReplyDelete
  8. Wrong Article the writer want to tell his idea to be implemented among us so use this way,
    Brother Read the Hadith of Rasoul, ""when he comes to Mimber he is like commander in Battle feed"" this is what hadith says, so commander never use soft wording in battle feed, please don't change the command of our beloved prophet
    make practice of reading hadiths rather than listening from someone

    ReplyDelete
  9. அஸ்ஸலாமு அழைக்கும் வ வ. VOICE SRILANAK அவர்கள் விளங்கிக் கொண்டுள்ள இஸ்லாம் எவ்வகையானது?

    ReplyDelete
  10. You all talk about Friday sermons
    It is easy to
    Criticise ulama but you yourself go do some sermons then you will know how it hard and how is ??
    No right for non umma to criticise ulama
    If you think it is not write way speak to them personally to get a reply from them
    How many ulama are attached to people with their sermons

    ReplyDelete
  11. சில பள்ளிவாசல்களில் பாயான், ஜுமமாவுக்கு போனால், ஏன்தான் வந்தோம் என்று தலைவிதியை நொந்துகொள்ள வேண்டி இருக்கும். சுருக்கமாக சொல்ல வேண்டிய விடயங்களை நீட்டி, முழக்கி, அலுப்பெற்றி, உச்ச ஸ்தாயியில் அகோரமாக சத்தம் போட்டுக் கத்தி, அய்யோ... அது அல்லாஹ்வின் இல்லமாக மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், அது மார்க்கம் தொடர்பான விடயமாக இல்லாமல் இருந்திருந்தால் ஒரு பத்துப் பெரும் அதனை கேட்க மாட்டார்கள், அப்படி ஒரு காட்டுக் கத்தல்.

    ஒருவர் உரையாற்றுவதில் ஒரு அழகு இருக்க வேண்டும், வன்மம், வெறி இருக்கக் கூடாது.

    பல போதகர்கள் மைக் என்று ஒன்று இருப்பதையே மறந்து சத்தம் போட்டு கத்துவார்கள். மென்மையாக போதிக்கப்பட வேண்டிய மார்க்கத்தை வன்மமாக உள்ளத்தில் திணிக்கின்றார்கள். இதன் காரணமாக, மேலே ஒரு சகோதரர் சொன்னது போன்று, மார்க்கம் பேச ஆரம்பித்தாலே நம்மவர்களும் சத்தமாக, ஆக்ரோஷமாக பேச ஆரம்பித்து விடுகின்றனர். தவறு போதிக்கும் முறையில் உள்ளது. இதன் காரணமாகத்தான், மார்க்க விடயம் என்று வரும் பொழுது முகநூல் சமூக ஊடகங்களில் கூட ஆக்ரோசமாக முறையற்ற வார்த்தைகளை எல்லாம் அள்ளி வீசுகின்றார்கள். இதற்குக் காரணமான வெறியூட்டல் பள்ளிவாசல்களிலேயே மேற்கொள்ளப் படுகின்றது. மார்க்கம் மட்டும் தெரிந்தால் போதாது, மென்மை, அழகு, நாகரீகம் போன்ற அழகிய பண்புகளும் தெரிந்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  12. அந்த மாற்றுச் சகோதரருக்கு அல்லாஹ் நேர்வழியைக் கொடுப்பானாக.

    ReplyDelete
  13. Nallavar endhal peyar sol li aluzhavum

    ReplyDelete
  14. What message of Islam did you give to him ? If you didn't , you can give. You can share Islam with any non Islamice faith people easily. Watch here>>> https://www.youtube.com/playlist?list=PL0l3xlkh7UnvUed8fwDdDSJ3KGWBrNwjF

    ReplyDelete

Powered by Blogger.