Header Ads



நியூசிலாந்தில் ஆக்டோபஸ், தப்பியோடிவிட்டதாம்...!


-BBC-

நியூசிலாந்தில் உள்ள ஒரு கடல்வாழ் உயிரினங்கள் காட்சியகத்திலிருந்து ஆக்டோபஸ் ஒன்று தப்பியோடிவிட்டதாம்.

அது வைக்கப்பட்டிருந்த தொட்டியிலிருந்து ஏறி வெளியே வந்து , கழிவு நீர்க் குழாய் ஒன்றின் வழியாக இறங்கி கடலுக்குள் சென்று விட்டது அந்த சாமர்த்தியமான ஆக்டோபஸ்.

இங்க்கி என்று பெயரிடப்பட்ட அந்த ஆக்டோபஸ் வைக்கப்பட்டிருந்த தொட்டியின் மூடி திறந்திருந்த நிலையில், அது இப்படி துணிகரமாக தப்பி விடுதலை அடைந்திருகிறது.

தரை வழியாக நகர்ந்து வந்த அந்த ஆக்டோபஸ், 50 மீட்டர் நீளமுள்ள , நேரடியாகக் கடலுக்குள் செல்லும் அந்த குழாயைக் கண்டுபிடித்துவிட்டது.

இங்க்கி தனது தொட்டியில் சோகமாக இல்லை என்று கூறிய காட்சியகத்தின் நிர்வாகி ராப் யேரல், ஆனால் இயல்பாகவே தனது சுற்றுச்சூழலைப் பற்றி ஆர்வமாக இருக்கும் இந்த ஆக்டோபஸ் தன்னைச் சுற்றியுள்ள இடங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கும் என்று கூறினார்.

ஆக்டோபஸ்கள் பொதுவாகவே தப்பியோடும் திறன் கொண்டவையாகும்.

No comments

Powered by Blogger.