Header Ads



சகோதர முஸ்லிமின் சுகத்தில், பங்கு கொள்ளுங்கள்..!

அஷ்ஷெய்க் எம்.யும்.எம்.காமில் (கபூரி)

இவ்வையகத்தில் மிக அழகான தோற்றத்தில் மனிதனைப் படைத்த அல்லாஹ் அம்மனிதன் வாழ்வதற்கான சகல விதமான ஏற்பாடுகைளயும் தயார் செய்து வைத்துள்ளான். இவ்வாறு எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலாவால் படைத்து பரிபாலிக்கின்ற மனிதனை அல்லாஹுத் தஆலா இவ்வுலகில் அம்மனிதன் வாழும் காலத்தில் பல முறை பல சோதனைகளின் மூலமாகப் பரீட்சித்துப் பார்க்கின்றான்.

இத்தகைய அல்லாஹ்வின் சோதனைகளில் நின்றும் உள்ளது தான் நோய். இன்று நம்மில் அதிகமான மக்கள் பல நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதை அன்றாட எம் கண்களால் நாம் பார்த்த வண்ணம் உள்ளோம். அல்லாஹ் தஆலா மனிதர்களின் மீது கொண்ட அன்பினாலேயே இத்தகைய நோய்களையும் மனிதர்களுக்கு வழங்குகின்றான். யார் இவ்வாறான நிலைமைகளில் பொறுமையைக் கடைப்பிடிக்கின்றார்களோ நிச்சயமாக அம்மக்களுக்கு அல்லாஹுத் தஆலா மகத்தான நற்கூலியை தயார் செய்து வைத்திருக்கின்றான்.

அப்துல்லாஹ் பின் மஸ் ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோய் வாய்ப்பட்டு காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்த போது நான் அவர்களிடம் சென்றேன். “தாங்கள் கடும் நோயால் சிரமப்படுகிaர்களே! (அல்லாஹ்வின் தூதரே) தங்களுக்கு இதனால் இரு (மங்கி) நன்மைகள் கிடைக்கும் என்பதலோ? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் எந்த ஒரு முஸ்லிமுக்கும் எந்தத் துன்பம் நேர்ந்தாலும் அதற்குப் பதிலாக மரத்தின் இலைகள் உதிர்வதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிரச் செய்யாமல் இருப்பதில்லை. (நூல்: புஹாரி, முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் சகோதரன் நோய் வாய்ப்பட்டால் அச்சகோதரனை சென்று நலம் விசாரித்து அவருக்கு ஆறுதல் கூறுவது பிற முஸ்லிம் சகோதரர்களின் மீது கடமையாகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; "ஒரு முஸ்லிமிற்கு மற்றொரு முஸ்லிமின் மீது ஆறு உரிமைகள் உள்ளன.

1. நீ அவனைச் சந்திக்கும் போது ஸலாம் சொல்வது
2. அவன் உன்னை விருந்திற்கு அழைத்தால் அதற்கு பதிலளிப்பது
3. அவன் உன்னிடம் அறிவுரை கேட்டால் சரியான அறிவுரை கூறுவது
4. அவன் தும்மி ‘ அல்ஹம்து வில்லாஹ” என்று கூறினால், அதற்கு (யர்ஹ முக்கல்லாஹ்) என்று பதிலளிப்பது.
5. அவன் நோய் வாய்ப்பால் அவனை நலம் விசாரிப்பது
6. அவன் மரணித்து விட்டால் அவனைப் பின் தொடர்ந்து (அடக்கம்) செய்யச் செல்வது”
(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் நூல்: முஸ்லிம்)

நோய் விசாரிக்கச் செல்வதன் சிறப்பைப் பற்றி அல்லாஹ்த் தஆலா ஹதீஸ¤ல் குத்சியில் விபரிக்கும் போது,

“கியாமத் நாளான்று” ஆதமுடைய மகனே! நான் நோயாளியாக இருந்தேன் நீ என்னை நலன் விசாரிக்க வில்லை? என்று அல்லாஹ் தஆலா கூறுவான். என் இரட்சகனே! நான் எப்படி உன்னை நலன் விசாரிப்பேன்? நீயோ அகிலங்களின் இரட்சகன் (நீயோ நோய் என்ற குறையை விட்டும் பரிசுத்தமானவன்” என்று அடியான் கூறுவான்.

“என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தது உனக்குத் தெரியாதா? நீ அவனை நலன் விசாரிக்க வில்லை நீ அவனை நலன் விசாரித்திருந்தால் அங்கே என்னை அடைந்திருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா?” என அல்லாஹ் தஆலா கூறுவான். ‘ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன் நீ எனக்கு உணவு தரவில்லை” என்று அல்லாஹ்த் தஆலா கூறுவான் “என்னுடைய இரட்சகனே! நான் எப்படி உனக்கு உணவு அளிப்பேன்? நீயோ அகிலங்களின் இரட்கசன் என அடியான் கூறுவான் நீ அவனுக்கு உணவு கொடுக்க வில்லை. நீ அவனுக்கு உணவு கொடுத்திருந்தால் அதன் நன்மையை என்னிடம் பெற்றிருப்பாய் என்பது உனக்குத் தெரியாதா? என்று அல்லாஹ் தஆலா கூறுவான்”

“ஆதமுடைய மகனே! நான் உன்னிடம் தண்ணீர் கேட்டேன். நீ எனக்குத் தண்ணீர் கொடுக்க வில்லை” என்று அல்லாஹ் தஆலா கூறுவான். “என்னுடைய இரட்சகனே! நான் எப்படி உனக்குத் தண்ணீர் கொடுப்பேன்? நீயோ அகிலங்களின் இரட்சகன் என்று. அடியான் கூறுவான்” என்றுடைய இந்த அடியான் உன்னிடம் நீர் அருந்தக் கேட்பான். நீ அவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை. நீ அவனுக்குத் தண்ணீர் புகட்டி இருந்தால் என்னிடம் அதன் நன்மையை பெற்றருப்பாய்” என்று அல்லாஹ் தஆலா கூறுவான். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்: முஸ்லிம்)

எம்மத்தியில் எத்தனையோ சகோதரர்கள் நோய் வாய்ப்பட்டிருக்கின்றார்கள். அத்தகைய சகோதரர்களை நாம் நோய் விசாரிக்கச் செல்வதால் எமக்கு எவ்வளவோ நன்மைகள் கிடைக்கின்றன. என்பதை பொன் மொழிகள் மூலமாக நாம் அறிந்து கொண்டோம். நாம் எம்முடைய சகோதரர்களை நோய் விசாரிக்கச் செல்லும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எமக்கு கற்றுத் தந்தவாறு தூய எண்ணத்துடன் சென்று அந்நோயாளியை தரிசித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு நோயளியைத் தரிசிக்கும் போது ஓதுமாறு எமக்குக் கற்றுத் தந்த அந்த அழகான துஆக்களையும் நாம் ஓத வேண்டும்.

“லா பஃஸ தஹுருன் இன்ஷா அல்லாஹ் லா பஃஸத ஹுருன் இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்மா அஸ்பிஹி அல்லாஹும்கா ஆபிஹி”

“ஒன்றுக்கும் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நோய் உங்களது பாவத்தை போக்கி பரிசுத்தப் படுத்திவிடும் இன்ஷா அல்லாஹ் யா அல்லாஹ் இவரை சுப்படுத்துவானாக!

இத்தகைய அழகான துஆவை ஓதியதன் பின்னர் அந்நோயாளியிடம் எமக்குப் பிராத்தனை செய்யுமாறும் பணிவாக வேண்டிக் கொள்ள வேண்டும். நோயாளியின் துஆவை அல்லாஹ் அங்கீகரிப்பதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். எமது சகோதர நோயாளிகளை நாம் சந்திக்கும் நேரமெல்லாம் அல்லாஹ் தஆலாவின் வல்லமைகளையம் அவன் மிக்க கருணை உள்ளவன் எம்மீது கொண்ட அன்பினாலேயே இத்தகைய சோதனைகளை எமக்கு தருவதன் மூலமாக எமது பாவங்களை மன்னித்து விடுகின்றான்.

என்று ஈமானிய வார்த்தைகளை அந்நோயாளிகளுடன் நாம் பரிமாற வேண்டும். என்றாலும் துரதிஷ்ட வசமாகச் சிலர் நோயாளியை தரிசிப்பதற்காக வேண்டி வைத்தியசாலைக்குச் சென்றால் அங்கு சென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோயாளியை தரிசிப்பதற்குக் காட்டித் தந்த வழிமுறைகளுக்கு முற்றிலும் புறம்பாக நடந்து கொள்கின்றனர். சிலர் வைத்தியசாலைக்குச் சென்று கூட உற்றார் உறவினர்களின் பிற சகோதர முஸ்லிம்களின் குற்றம் குறைகளை இந்நோயாளியிடம் கூறுகின்றனர். மற்றும் சிலர் அந்நோயாளியின் மனம் புண்படும் படியாக நடந்து கொள்கின்றனர்.

நாம் எம் முன்னோர்களின் வரலாற்று ரீதியாகக் காணும் உண்மை எத்தனையோ பிறமதச் சகோதரர்கள் முஸ்லிம் மக்களின் நற்பண்புகளின் பால் கவரப்பட்டு புனித இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவி இருக்கின்றார்கள். எனவே சகோதர்களே நாம் நோயாளிகளை தரிசிக்க வைத்தியசாலைக்குச் சென்று வருபவர்களாக இருந்தால் அங்கே நாங்கள் எங்கள் தனிச்சிறப்பை அம்மக்களுக்கு முன்னால் வெளிப்படுத்துவதன் மூலமாக சமூக ஒற்றுமைகளுக்கும் அவை அடித்தளமாக அமையும் என்பதில் ஐயமில்லை. எனவே சகோதரர்களே எம்மால் முடிந்தளவு வைத்தியசாலைகளுக்குச் சென்று வைத்தியசாலையின் ஒழுங்குகளைப் பேணி நோயாளிகளை தரிசிப்பதன் மூலமாக சமூக ஒற்றுமையைப் பேணி அளவில்லாத நன்மைகளைப் பெற்று ஈருளகிலும் வெற்றி பெறுவோமாக!

1 comment:

Powered by Blogger.