Header Ads



Hardy College of Technology இன் விளக்கம்

கடந்த 6ம் திகதி சகோதரர் ; Mohamed Aashiq என்பவரின் பெயரில் Jaffna Muslim இல் கற்பிக்கப்படாத பாடம் பரீட்சை எழுதிய மாணவர்களின் வேதனை. மேற்படி தலைப்பில் வெளியான செய்தியை அம்பாறை ஹாடி தொழில் நுட்பவியல் கல்லூரியின் பழைய மாணவர்களுக்கு முழுமையாக வாசிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

இக்கல்லூரியில் பயிற்சியை முடித்து உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் பழைய மாணவர்களின் அர்ப்பணிப்பின் மூலம் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேல் நற்பெயரை பேணி வந்த இக்கல்லூரியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக குரல் கொடுத்தும் தேவை ஏற்படின் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டும் இக்கல்லூரியின் நற்பெயரை பாதுகாப்பது எங்களது தார்மீகப் பொறுப்பாகும். அத்துடன் இக்கல்லூரியில் பயிற்சி பெறும் மாணவர்களது கல்விக்கு தடையாக இருப்பவர்களை இனம் கண்டு உரிய நடவடிக்கை எடுப்பதும் எங்களது கடமையாகும். அவர்கள் நிருவாகமாகவோ அல்லது மாணவர் குழுவாகவோ இருந்தாலும் சரியே. 

சகோதரர்  அவர்களால் கூறப்பட்ட இக்கல்லூரி நிருவாகத்தின் குறைகளின் உண்மைத் தன்மையை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுப்பதற்காக எமது சங்க அங்கத்தவர்கள் களம் இறங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. 

அதன்படி முதலில் குறிப்பிட்ட மாணவர் குழுவின் ஒருசில உறுப்பினர்களையும் இக்கல்லூரியில் பயிற்சி பெறும் 25 இற்கும் மேற்பட்ட பாடநெறிகளை பயிலும் மாணவர்களின் பிரதிநிதிகளையும் சந்திக்க நேர்ந்ததோடு விரிவுரையாளர்கள் அதிகாரிகள் ஆகியோரையும் சந்தித்தோம்.
அதன்போது சகோதரர் ஆழாயஅநன யுயளாஙைர என்பவர், கற்பிக்கப்படவில்லை என்று பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறிய Nஏஞ – டுநஎநட 5 ஐஊவு மாணவர்கள் குழுவின் இணைப்பாளர் என்பதையும், அவரால் குறிப்பிட்டவாறு நிருவாகத்தைப் பற்றி மாணவர்கள் எதுவித அதிருப்தியும் தெரிவிக்காமையை அறிந்ததும் நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம்.
அத்துடன் ஏனைய இரு பதிவேற்றங்களிலும், இவரும் மற்றும் அடையாளம் காணப்பட்ட இக்குழுவைச் சேர்ந்த ஒருசிலர் மட்டுமே இதன் பின்னணியில் இருந்ததை அறிந்து கொண்டோம். இம்மாணவர் குழு சார்பாக இவ்விடயத்தில் தலையிட்டமைக்காக  எங்களுக்கு தலை குனிவும் ஏற்பட்டது.  

மேலும் 5 பாடநெறிகளின் கற்றல் மற்றும் கற்பித்தல் நடைமுறைகளை அறியாதது போல் நடித்து பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறிய இக்குழுவின் செயலை பாடசாலை கீழ் வகுப்பு மாணவர்களின் செயலை விட இழிவாகத்தான் கருத வேணடியுள்ளது. 

கற்பிக்கப்படவில்லை என்ற காரணத்தைக் காட்டி பரீட்சை மண்டபத்தில் பிரதி பண்ணுவதற்கு அனுமதி கேட்ட யுயளாஙைர அவர்கள், இது சம்மந்தமாக நாங்கள் நிருவாகத்திடம் எதுவும் கூறவில்லை என்று பதிவேற்றம் செய்தது உண்மைக்கு முரணாகும். நிருவாகம் இத்துச் செயலுக்கு அனுமதி மறுத்ததும் மாணவர்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு அவர்களின் வரவு, அற்பணிப்பு மற்றும் பெறுபேறு போன்றவற்றை குறிப்பிட்ட கால இடைவெளியில் மதிப்பீடு செய்து மாணவர்களை நல்வழியிற்கு கொண்டு வருவதற்கு நிருவாகம் செய்த முயற்சிகள்  அவர் பார்வையில்  நொண்டிச்சாட்டாகிவிட்டது. 

சமயக் கிரியைகள் போக்குவரத்துக் கஷ்டம் போன்றவற்றைக் காரணம் காட்டி விடுபடும் அலகுகளை சுயமாகப் படிப்போம் என்ற உறுதிமொழியை எழுத்து மூலம் வழங்கி கற்றல் நடவடிக்கைகளை விட்டு விலகி இருந்தமையும் ஆதாரபூர்வமாக எங்களுக்கு அறியக்கிடைத்தது. மேலதிக வகுப்புக்களை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்காமலும் விரிவுரைகள் நடைபெறும் பொழுது இடையூறாக நடந்து கொண்டு கணனிக் கூடத்தை விட்டு வெளியேற்றப்பட்டவர்களும்தான் இப்படியான வெளிநடப்பினதும் பதிவேற்றத்தினதும் சூத்திரதாரிகள் என்பதை மிகவும் தெளிவாக அறிந்து கொண்டோம்.

மேலும் கடந்த 3ம் திகதி பரீட்சை மண்டபத்தினுள் பிரதி பண்ணுவதற்கு முயற்சித்து கையும் களவுமாக பிடிபட்ட ஒருவர் அவமானம் தாங்காது பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறியவுடன்  இச்சிறு குழு ஏனையவர்களையும் வெளியேறுமாறு நிர்ப்பந்தித்ததையும் எங்களுக்கு அறியக்கிடைத்தது.

இக்கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளை உரியவர்களிடமோ அல்லது மாணவர்களின் நலனுக்காக செயல்படும் எங்களிடமோ எடுத்துக் கூறாது இப்படியாக பரீட்சை மண்டபத்தை விட்டு வெளியேறி ஊடகங்களில் பதிவேற்றம் செய்வதன் நோக்கம் என்ன? நிருவாகத்தின் பெயரையும் கல்லூரியின் பெயரையும் களங்கப்படுத்துவதா? அல்லது குறுகிய காலத்தில் பிரபல்யம் அடைவதா? அல்லது குறுக்கு வழியில் சான்றிதழ் பெறுவதா?

ஹாடியின் சான்றிதழுக்கு உள்ள உடனடி ஏற்றுக் கொள்ளும் தன்மை மற்றும் தொழில் வாய்ப்புக்கு முக்கிய காரணம் இக்கல்லூரியில் நடைமுறையில் உள்ள தரக்கட்டுப்பாடும் மாணவர்களின் அர்ப்பணிப்பும் திறமையும்தான். இவற்றிற்கு மாற்றமான முறையில் சான்றிதழ்களை பெற முயற்சிப்பவர்களுக்கு எதிராக எமது சங்கம் என்றும் தொழில்படுவதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் மற்றும் அதற்காக நிருவாகத்தை தூண்டவும் தயங்கமாட்டோம்.

RR Jayasinghe
President
Alumini Association
Hardy College of Technology
Ampara

No comments

Powered by Blogger.