சிறுநீரக சத்திரசிகிச்சைக்காக, உதவி கோருகிறார்
இலக்கம் 35/36, ரஹ்மானியா மாவத்த, மஹவத்த, மாவனல்லை என்ற முகவரியில் வசித்துவரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.எம்.நிஸார் என்பவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ளமையால் அவசரமாக சத்திரசிகிச்சை செய்யவேண்டும் என கண்டி பொது வைத்தியசாலை வைத்தியர் ஏ.டப்ளியூ.எம்.வாஸில் அறிவுறுத்தியுள்ளதுடன், சத்திரசிகிச்சைக்காக 16 இலட்சம் ரூபா செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
வறிய குடும்பப் பின்னணியைக்கொண்ட குறித்த சகோதரர் ஓட்டோ ஓட்டியே தனது குடும்பச் செலவுகளை முன்னெடுத்து வந்தார். எனினும், கடந்த ஒரு வடங்களுக்கு மேலாக நீரழிவு நோயால் பீடிக்கப்பட்டுள்ளமையால் தொழில் செய்யமுடியாத நிலையில் மிகவும் துன்பப்பட்டு வருகின்றார்.
அன்றாட வீட்டுச் செலவுக்கே கஷ்டப்படும் குறித்த சகோதரர் தனது சத்திரசிகிச்சைக்காக பணம் திரட்டமுடியாது நம்பிக்கை இழந்து காணப்படுகின்றார். இதனால், நல்லுள்ளம் கொண்ட சகோதரர்களின் உதவியை அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்துள்ளனர்.
மாவனல்லை, மஹவத்த, மஸ்ஜிதுல் ஜென்னா ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகம் இவருக்கு உதவி செய்யுமாறு தனவந்தர்களிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இவருக்கு எதிர்வரும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் சத்திரசிகிச்சை செய்யவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களது நன்கொடைகளை பின்வரும் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவையுங்கள்.
A.M.S.NAWASIYA
A/NO- 76801959
BANK OF CEYLON
MAWANELLA
CONTACT DETAILS
M.S.M.NISAR
NO-35/36, RAHUMANIYA MAWATHA,
MAHAWATTHA, MAWANELLA, SRILANKA.
0094779337380
0094779337380
பள்ளிவாசல் செயலாளர் - 071 8110704


Post a Comment