Header Ads



வருடம் முழுவதும், இலவச பீட்சா...!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் பிரான்சிஸ்கோவில் பீட்சா ஆர்டர் செய்தவருக்கு பணக்கட்டுகளை அனுப்பிவைத்த டோமினோஸ் பீட்சா நிறுவனம். அங்குள்ள டோமினோஸ் உணவகம் ஒன்றில் பீட்சாவும், சிக்கன் விங்சும் வேண்டுமென வாடிக்கையாளர்  செய்திருந்த ஆர்டருக்கு சுமார் 1300 அமெரிக்க டாலர்களைக் (இந்திய ரூபாயில் சுமார் ரூ.86000) கொண்ட கட்டுக்களை டெலிவரி செய்துள்ளது. 

அங்குள்ள பாரில் வேலை செய்யும், அவருக்கு இரவு வேலையில் விடுமுறை என எண்ணி பீட்சாவுக்கு போன் செய்திருந்தார். பீட்சா கைக்கு கிடைக்கும் முன்னரே அவருக்கு, வேலையிலிருந்து அழைப்பு வந்ததால், பீட்சாவை வாங்கியதும், அதை திறந்துகூட பார்க்காமல் வீட்டின் பிரிட்ஜ்க்குள் வைத்துவிட்டு  புறப்பட்டுவிட்டார். மறுநாள் அதிகாலை வீட்டுக்கு வந்த பிரிட்ஜில் இருந்து பீட்சாவை சூடுபடுத்த வெளியில் எடுத்தார். பீட்சாவின் அட்டைப் பெட்டியைத்  திறந்து பார்த்தபோது, அதில் பணம் இருப்பதைப் பார்த்த அவர் அதை புகைப்படம் எடுத்து பேஸ்புக்கில் வெளியிட்டார். 

இதையடுத்து, அந்த பணத்தை மைக் வைத்துக் கொள்ள வேண்டுமா திரும்பக் கொடுத்து விட வேண்டுமா என பெரும் விவாதம் ஏற்பட்டது. மைக் இரவுப் பணியில் இருந்தபோதே பீட்சா டெலிவரி செய்த நபர் பலமுறை அவரது மொபைலை தொடர்பு கொண்டிருக்கிறார். எனவே தன்னால் ஒருவர் வேலை இழக்கக் கூடாது என எண்ணிய அவர் அந்த பணத்தை டோமினோஸ் பீட்சாவை டெலிவரி செய்பவரிடமே திரும்பக் கொடுத்துவிட்டார். 

அவரின் இந்த நற்செயலைப் பாரட்டி டோமினோஸ் உணவகம் ஒரு ஆண்டுக்கு அவருக்கு இலவச பீட்சா வழங்குவதாக தெரிவித்துள்ளது. டோமினோஸ்  உணவகத்தில் வங்கியில் டெபாசிட் செய்யவேண்டிய பணத்தை, சிக்கன் விங்ஸ் என எழுதிய பீட்சா அட்டைப் பெட்டிக்குள் வைத்ததிருந்தனர். இதுவே  இந்த குழப்பத்துக்கு காரணமாகியது.

No comments

Powered by Blogger.