Header Ads



அனுரகுமார திசாநாயக்க, ஒரு கட்டத்தில் என் முன்னால் மண்டியிட நேரிடும் - சோமவன்ச

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) கட்சியானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட வேண்டுமென்று அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள சோமவங்ச அமரசிங்க, 2005ம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஜே.வி.பி. அரசாங்கத்துடன் இணைந்துகொள்ள வேண்டுமென்று நான் வலியுறுத்தினேன். ஆனால் கட்சியில் பலர் அதனை ஏற்கவில்லை. அதன் காரணமாகவே இன்று வரை கட்சிக்கு தொடர்ச்சியான பின்னடைவு ஏற்பட்டு வருகின்றது.

தற்போது கட்சியின் முக்கியஸ்தர்களாகவுள்ள அனுர குமார திசாநாயக்க, டில்வின் சில்வா, லால்காந்த, விஜித ஹேரத் ஆகியோர் அரசியல் முதிர்ச்சியற்றவர்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் என் முன்னால் மண்டியிட நேரிடும்.

ஜே.வி.பி. இனியும் தாமதிக்காமல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முன்வர வேண்டும். அதன் மூலம் கட்சியின் எதிர்காலம் பாதுகாக்கப்படும் என்றும் சோமவங்ச அமரசிங்ச தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ளார்.

2 comments:

  1. நல்ல கருத்துதான் .

    ReplyDelete
  2. Advice of old people is always ultimate .

    ReplyDelete

Powered by Blogger.