Header Ads



கேள்விக்குள்ளாகி வருகின்ற மைத்திரி - ரணில் நல்லாட்சி..!

-நஜீப் பின் கபூர்-

மனிதர்களுக்குப் பதவிகள் வரும், போகும். பதவிக்கு வந்தவர்கள் தாம் இருந்த இடத்தில் எப்படிப் பணியாற்றினார்கள். தமது பதவிகளை எப்படிப் பாவித்தார்கள். என்பதனைப் பொறுத்து அந்த இடத்தில் அந்த நிறுவனத்தில் அவர்கள் நாமம் நிலைத்திருக்கும். இது நாடுகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் பொருந்தும்.

உரோம, கிரேக்க, பாரசீக, பிரான்சிய, ஜேர்மனிய, பேரசுகள் பற்றியும்  தற்காலத்தில் அமெரிக்க, ரஷ்ய, சீன வல்லாதிக்கம் பற்றியும், ஜூலிய சீசர், மகா அலக்சாண்டர், நெப்போலியன் பொனபாட், அடேல்ப் ஹிட்லர் என்றெல்லாம் பல பெயர்கள் அவர்கள் மாண்டுபோய் பல ஆயிரம், நூற்றாண்டுகள், தசாப்தங்கள் கடந்து போய் இருந்தாலும் வரலாற்றில் அந்த  நாமங்கள் இன்றும் உச்சரிக்கப்பட்டு வருவதை நாம் பார்த்து வருகின்றோம்.

இந்த வகையிலும் நமது நாட்டிலும் மஹிந்த ராஜபக்ஷ என்ற நாமம் அண்மைக் காலங்களில் மிகப் பெருமையாக உச்சரிககப் பட்;டு வந்தது. இன்று அதிரடியாக அந்த இடத்தில் மைத்திரியை மக்கள் அதிகாரத்தில் அமர வைத்திருக்கின்றார்கள். மஹிந்த பிடியிலிருந்து நாடு விடுபட்டிருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷவுக்கு இந்த நிலை ஏற்பட்டமைக்கு  அவருடைய குடும்பம், ஊழல் மிகுந்த அவரது நிருவாகம், மற்றும் அவர் கையாட்கள் மேற் கொண்ட அடாவடித்தனங்கள் என்பன அவர் பதவிலிருந்து வெளியேற்றப்பட பிரதான காரணங்களாக இருந்தன என்று தற்போது குறிப்பிடப்படுகின்றது.

ராஜபக்ஷவை இப்படிப் பதவியிலிருந்து வெளியேற்ற  மாதுலுவாவே சோபித தேரர், ஜேவிபி, ஹெல உறுமய வெகுஜன இயக்கங்கள் ஊடகங்கள், ஐ.தே.கட்சி பேன்றவை மேற் கொண்ட நடவடிக்கைகள் பரப்புரைகள் காரணமாக இருந்தன என்ற விடயங்களை முன்பு ஒரு முறை விரிவாக சொல்லி இருந்ததால் அது பற்றி நாம் இப்போது இங்கு அதிகம் பேசவில்லை.

ஓரணியில் நின்று ராஜபக்ஷவை பதவியிலிருந்து இறக்கவும் மைத்திரியை அதிகாரத்தில் கொண்டு வந்து நிறுத்தவும் காரணமாக இருந்த இதே தரப்பினர் - அணியினர் தற்போது  என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதனை நாம் ஒருமுறை ஆராய்ந்து பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மைத்திரியை பதிவிக்கு அமைத்தியவர்கள் நிலை

மஹிந்த ராஜபக்ஷவை இந்த நாட்டு அரசியலிலிருந்து ஓரம்கட்டிவிட வேண்டும் அவர் மிக மேசமான முறையில் நாட்டை வழிநடாத்திச் செல்லகின்றார்,  என்று மக்கள் மத்தியில் கருத்துக்களை துனிச்சலுடன் முன்வைத்த மாதுலுவாவே சோபித்த தேரர், நாம் ராஜபக்ஷக்களை பதவியிலிருந்து விரட்டியடித்தன் நோக்கம் இன்னும் நிறைவடைந்து விடவில்லை. எனவே எமது மக்கள் நலனுக்கான நோக்கங்களை அடைந்து கொள்வதற்கு நாம் அடுத்த போராட்டத்தை முன்னெடுகக் வேண்டி இருக்கின்றது என்ற எச்சரிக்கையை சில தினங்களுக்கு முன்னர் விடுத்திருந்தார். எனவே மைத்திரியை பதவிக்குக் கொண்டுவர முதல் வேட்டை தீர்த்தவரே இன்று மைத்திரி-ரணில் நல்லாட்சிக்கு எதிராக சிவப்புக் கொடி காட்ட ஆரம்பித்திருக்கின்றார்.

மேலும் தற்போது நாட்டில் இருக்கின்ற தேர்தல் முறையை ஒழித்துவிட்டு புதிய முறையில் தேர்தலை நாடத்துவதற்கான நடவடிக்கையை உடனடியாக புதிய அரசு கொண்டுவர வேண்டும் என்றும் அவர்  குறிப்பிட்டிருக்கின்றார்.

தேரரின் இந்த தேர்தல் முறை மாற்றக் கோரிக்iகைகள் தொடர்பாக சிலர், தொகுதி எல்லை நிர்ணையம் செய்வதற்கு நீண்ட கால அவகாசம் தேவை என்று கூறி அதனைத் தற்போது செய்து முடிப்பதில் நெருக்கடிகள் இருக்கின்றது என்று, சில ஆளும்தரப்பு அரசியல்வாதிகள்  ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருக்கின்றனர். அப்படியாக இருந்தால் அதனை ஏன் 100 நாள் வேலைத் திட்டத்தில் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்று கேட்பதுடன் புதிய ஆட்சியாளர்களும் கால அட்டவணைகள் ஏதும் இன்றி வழக்கமான  தேர்தல் வாக்குறுதிகள்கத்தான் இவற்னை முன்வைத்திருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. இந்த தேர்தல் மாற்றத்தை செய்யாது பொதுத் தேர்தலுக்கு நின்றால் வழக்கம்போல் பதவி பட்டங்களுக்காக கட்சி தாவுகின்ற சம்பவம் 2015க்குப் பின்னரும் நடந்து, வழக்கமான அரசியல் பித்தலாட்டங்கள் இங்கு தொடரும் என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

கால அவகாசம் பற்றிய விடயத்திலுள்ள உண்மைத் தன்மைப் பற்றி நாம் தேடிப் பார்த்ததில் ஜே.ஆர். ஜெயவர்தத்ன அரசியல் யாப்பில் சொல்லப்பட்ட அரசியல் யாப்பிற்கு ஏற்ப தொகுதிகளின் எல்லைகளை மாற்றி அமைக்க-நிர்ணைக்க 40 நாட்கள் அந்த நாட்களில் தேவைப்பட்டிருக்கின்றது.

இன்று நவீன தொழிநுட்பங்கள் விருத்தியடைந்திருக்கின்ற கால கட்டத்தில் இந்தப் பணிகளை மிகச் சுலபமாக 10 நாட்களில் செய்து முடிக்கலாம்  என்று இதில் அனுபவமுள்ள வல்லுனர்கள் மூலம் தெரிந்து கொள்ள முடிகின்றது. இதற்காக செய்ய வேண்டிய பெரிய காரியம் ஏதுவும் கிடையாது என்று அவர்கள் குற்றிப்பிடுகின்றார்கள்.

கடைசியாக மேற் கொள்ளப்பட்ட குடிசன மதிப்பிடு மற்றும் 2014 தேர்தல் இடப்பு என்பன கணணி மயப்படுத்தப் பட்டிருக்கின்றது. அதனை வைத்துக் கொண்டு இந்தப் பணிகளை துரிதமாக செய்து முடிக்கலாம். என்று அவர்கள் மேலும் கருத்துத் தெரிவிக்கின்றார்கள். எனவே இந்த மாற்றத்தை செய்யப் பின்னடிப்திலும் அரசியல் உள் நோக்கங்கள் காணப்படுகின்றதோ என்று நாம் சந்தேகிக் வேண்டி இருக்கின்றது.

இனவாதம், மதவாதம் பிரதேசவாதம் குலவாதம் என்பன ஏற்பட்டு நாட்டிலும் சமூகங்களிடமும் மற்றறுமின்றி ஒரே கட்சிக்குள்ளும் வெட்டுக் குத்துக்கள் நடக்கவும் காரணமாக இருக்கின்ற இந்த ஜேஆரின் தேர்தல் முறையை மாற்றி அமைக்க சாக்குப் போக்குகளை முன்வைப்பது மைத்திரி-ரணில் நல்லாட்சிக்கு ஏற்புடையதல்ல. இது மக்களுடைய முக்கிய எதிர்பார்ப்புக்களில் முக்கியமான ஒரு விவகாரம் என்றும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகின்றோம்.

வடக்குத் தலைவர்கள் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் நமது நாட்டில் நடந்த சுதந்திர தினக் கூட்டத்திற்கு வந்து தமது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கினார்கள். இது போன்ற ஆரோக்கியமான நடவடிக்கைகளை தற்போதய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்று தேரர் ஆட்சியாளர்களுக்கு அறிவுரை கொடுத்து இருக்கின்றார்.

மைத்திரியை வேட்பாளராக களமிறக்க இரஜதந்திர நடவடிக்கைகளை மேற் கொண்ட முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குற்றவாலிகளை சேர்த்துக் கொண்டு சுதந்திரக் கட்சியில் மைத்திரி பயணிக்க விரும்பினால் அந்தப் பயணத்தில் தனக்கு ஒத்துப்போக முடியாது என்று நேரடியாகவே மைத்திரியிடம் சொல்லி இருக்கின்றார். 

முன்னாள் ராஜபக்ஷவை ஜனாதிபதி கதிரையில் இருந்து இழுத்துக் கீழ் போடுவதற்குப் தனது பரப்புரைகள் மூலம் பாரிய பங்களிப்பை செய்த ஜேவிபி, ராஜபக்ஷ அரசின் குற்றக் கும்பல்கள் மீது நடவடிக்கைகளை மேற் கொள்வதற்கு மைத்திரி - ரணில் நல்லாட்சி பின்னடிப்பது தமக்கு பல சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது என்று கூறுகின்றது.

நாம் இன்னும் சில நாட்களுக்கு இதுவிடயத்தில் உன்னிப்பாக அவதனிப்போம். அரசு தொடர்தும் மெத்தனப் போக்குடன் நடந்து கொள்ளுமாக இருந்தால் அதறற்கு என்ன நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று நாம் முடிவு செய்து வைத்திருக்கின்றோம் என்று ஜேவிபி தலைவர்களில் ஒருவரான லால் காந்த தெரிவித்திருக்கின்றார். இதே நிலைப்பாட்டில்தான் ஜாதிக ஹெல உறுமயவும் இருக்கின்றது.

மைத்திரியை பதவிக்கு அமர்த்த தனது வாக்குப் பலத்தை வழங்கிய ஐ.தே.கட்சி ஜனாதிபதி மைத்திரி வருகின்ற பொதுத் தேர்தலில் தன்னைப் பதவியில் அமர்த்திய எம்முடன்தான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்கின்றது. ஆனால் மைத்திரி சுதந்திரக் கட்சியில் தற்போது தலைவர். அவர் எப்படி ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் களமிறங்க முடியும். இது எவ்வளவு தூரம் யதார்த்தமான கோரிக்கை என்று கேட்கத்தோன்றுகின்றது. எனவே ஐக்கிய தேசியக் கட்சி பொதுத் தேர்தல் வெற்றிக்கு மைத்திரி தயவை எதிர்பார்க்கின்றது. 

இன்னும் சிலர் மைத்திரி நடுநிலையாக பொதுத் தேர்தலில் இருக்க வேண்டும் என்று கேட்க்கின்றார்கள். இது ஐக்கிய தேசியக் கட்சியின் பலயீனம் என்றுதான் குறிப்பட வேண்டும். அதனால்தான் இப்படியான கோரிக்கைகள் அந்தக் கட்சி சார்பில் விடுக்கப்படுகின்றது.

ஜனாதிபதித் தேர்தலின்போது மைத்திரியை பதவியில் அமர்த்துவதில் பல வெகுஜன இயக்கங்கள் இணைந்திருந்தது என்பது அனைவரும் அறிந்த விடயம். இதில் முக்கிய பங்காற்றியவர்களில் ஒருவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறைப் பேரசிரியர் நிர்மல் ரஞ்சித். 

ஆட்சி மாற்றம் தற்போது ஏற்பட்டிருந்தாலும் அரசியல் வாதிகள் ஒருவருக்கு ஒருவர் நெருக்கமான உறவுகளுடன் செயலாற்றி வருவதாலும் அவர்களிடம் தொடர்புகள் இருக்கமாக இருப்பதாலும் தமது சாகக்களுக்கு எதிராக அவர்கள் நடவடிக்கைகளை மேற் கொள்வதற்குப் பின்னடிக்கின்றார்கள். எனவேதான் குற்றவாலிகள் இன்னும் வீராப்பு பேசுகின்றார்கள் என்று சாட்டுகின்றார் பேரசிரியர் ரஞ்சித்.

மக்கள் விரும்புகின்ற நல்லாட்சியை முன்னெடுத்துச் செல்வதில் நிறையவே நெருக்கடிகள் இருந்து வருகின்றது என்று அவர் மேலும் குற்றம் சாட்டுகின்றார். இதனால்தான் இன்று அப்பட்டமாக குற்றம் புரிந்தவர்களுக்கும் நடவடிக்கை எடுபப்து தாமதமாகி வருகின்றது என்கின்றார் பேரசிரியர் நிர்மல் ரஞ்சித்.

மைத்திரி -  ரணில் நல்லாட்சி தொடர்பாக தற்போது ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள், வாதப் பிரதி வாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக் முடிகின்றது. இது புதிய அரசுக்கு அரோக்கியமான ஒரு நிலையாக இருக்க மாட்டாது.

தனது மனைவி பற்றி ஊடகங்களில் வந்து நல்லாட்சிக்காரர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்கள் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் எவரும் அவரைக் கைது செய்வதற்கு இன்னும் எமது வீட்டிற்கு வந்ததாகத் தெரியவில்லை என்று அகங்காரமாகப் பேசி வருகின்றார் விமல் வீரவன்ச. கள்ளக் கடவுச்சீட்டு தொடர்பான விவகாரம் அது. ஆனால் அவரைத்  தேடி பொலிசார் வீடு தேடிச் சென்றால்  ஆள் ஸ்கெப்பாகி இருக்கின்றார் என்று கூறுகின்றார்கள் பொலிசார்.

100 நாள் வேலைத் திட்டத்தில் குறிப்பிடப்பிட்ட சில விடயங்களை மறந்து நல்லாட்சி தற்;போது  முன்னெடுக்கப்படுகின்றது என்ற குற்றசாட்டுகளும் தற்போது சொல்லப்படுகின்றது.  வரவு செலவு திட்டத்தில் சொல்லப்பட்ட 10000 ரூபா சம்பள அதிகரிப்பு கொடுப்பனவு என்று வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. மேலும் ஓய்வூதியக்காரர்களின் கொடுப்பனவு 3500 ரூபாய் என்று சொல்லி விட்டு அதனை 1000 ரூபாய் என்று குறைத்து வழங்குகின்றார்கள்.

இந்த நாட்டில் ஏறக்குறைய 70 இலட்சம் பேர் அரச தனியார் துறைகளில்  வேலை பார்க்கின்றார்கள் ஆனால் அதற்கு ஒரு அமைச்சர் தனியாக நியமனம் செய்யப்பட வில்லை. நீதி அமைச்சுடன் அந்த அமைச்சு இணைக்கப்பட்டிருக்கின்றது. என்று அதற்கும் ஜேவிபி குற்றம் சாட்டுகின்றது.  இதிலிருந்து தொழிலாளுகள் மீது அரசுக்கு ஒரு தெளிவான கொள்கை கிடையாது என்று அவர்கள் கூறுகின்றார்கள்.

சீனாவுக்கு கடலில் தீவு சமைக்க முன்னைய அரசு வழங்கிய அனுமதியை இந்த அரசும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றது. அதனை மைத்திரி - ரணில் அரசு முன்னெடுத்துச் செல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று ஜேவிபி சூளுறைத்திருக்கின்றது.

நல்லாட்சி அமைச்சரவையில் பதவிபெற்ற அமைச்சர்கள் சிலர் தங்கள் வேண்டுகோள்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும், தமது அமைச்சில் ஏனையோர் அநவசியமாக தலையீடு செய்பகின்றார்கள் என்றும் கூறி தமது பதவிகளை இராஜினாமச் செய்ய சிலர் முனைகின்றார்கள் இதில் முஸ்லிம் ராஜங்க அமைச்சர் ஒருவரின் கோரிக்கை உள்நோக்கம் கொண்டது மைத்திரி பிடியிருந்து விலகி ரணில் மடியில் போய் நின்றால்தான் தனக்கு அரசியல் எதிர்காலம் பாராளுமன்றப் பிரவேசம் என்று அவர் கருதுவதனால்தான் இந்த நாடகம். இதற்கும் சமூக நலன்களுக்கும் தொடர்பே கிடையாது என்பது எமது கருத்து.

நுகேகொடையில் மஹிந்தாவை பதவிக்கு மீண்டும் கொண்டுவரும் நோக்கிலும், கட்சியில் பிளவுகளை ஏற்படுத்துகின்ற நோக்கிலும் நடாத்தப்படுகின்ற விமல், வாசு, தினேஸ், கம்மன்பில கூட்டத்தில்  மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் எவரும் கலந்து கொள்ளக் கூடாது என்று அறிவித்தாலும் அதற்கு பல சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் மக்கள் பிரதி நிதிகள் போய் இருக்கின்றார்கள். 

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரனதுங்ஹ, எதிர் கட்சித் தலைவரும் கட்சியின் தேசிய அமைப்பாளரும் தனக்கு இந்தக் கூட்டத்தில் பங்கு கொள்ள அனுமதியை வழங்கியதற்காக நன்றி கூறுவதாக ஊடகங்கள் முன் பகிரங்கமாக அறிவித்தார். அப்படியானால் மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சியில் பதவிகளுக்குத் தற்போது அமர்த்தப்ட்டிருக்கின்றவர்கள் இரட்டை வேடம் போடுகின்றார்கள் என்பது இதிலிருந்து தெரிய வருகின்றது.

மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹவின் மகன் விமுக்தி குமாரணதுங்ஹவை அவரது தந்தை விஜே குமாரதுங்ஹ கட்சியின் தலைமைப் பதவிக்கு  அமர்த்துவதற்கு சிலர் முனைவதாக தெரிய வருகின்றது. இது மைத்திரியை பலயீனப்படுத்த மேற் கொள்ளப்படும் மற்றுமொரு  சதி வேலையாகவே கருதவேண்டும்.

இப்படியாக மைத்திரி அரசுக்கு பல முனைகளில் இருந்து வருகின்ற தொல்லைகளைப் பார்க்கும் போது மாலைதீவில் சட்டரீதியாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு அமர்ந்த நஷீட் வஹிடுக்கு நடந்த கெதியைத்தான் நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

கும்பிடக் கும்பிடக் குட்டுகின்றவனும், குட்டக் குட்ட கும்பிடுகின்றவனும் ஒரு முட்டால் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டிருக்கினாறார்.  இந்த கூற்றைப் பார்க்கும் போது மஹிந்த பாய்வதற்குத் தயாராகி வருகின்றார் என்றுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

சர்ச்சைக்குறிய அரசியல்வாதி சச்சின் வாஸ் கள்வர்களுக்கு வேட்பு மனு இல்லை என்றால் எமது மக்கள் பிரதிநிதிகள் 80 பேருக்கு வேட்பு மனுக் கிடைக்க மாட்டது என்று குறிப்பிட்டிருக்கின்றார். இதிலிருந்து நாம் விளங்கிக் கொள் வேண்டியது செய்தி என்ன என்று இந்த நாட்டுப் பொது மக்களிடத்தில் கேட்க வேண்டி இருக்கின்றது.

No comments

Powered by Blogger.