நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்தது போன்ற திருப்தியும், சந்தோஷமும்..!!
Ash Sheik M Z M Shafeek (UK)
அனைவராலும் எதிர்பார்க்கப் பட்ட இலங்கையின் 07 ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தல் நேற்று 08/01/2015 வியாழக் கிழமை சுமூகமான முறையில் நடந்து முடிந்துள்ளது. சுமார் இரண்டரை வருடங்களாக நேரடியாகவே பல இன்னல்களுக்கும் இனவாத அடக்குமுறைகளுக்கும் முகம் கொடுத்து வந்த தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ இனத்தவர்களுக்கு ஆறுதலான, மனநிம்மதியை தரக் கூடிய முடிவுகள் எட்டப் பட்டிருப்பதை நாம் அறிவோம்.
குறிப்பாக அண்மைய காலங்களில் பெரும்பான்மை பௌத்த இனவாதிகளால் அரசின் முழு ஒத்துழைப்புடன் அரங்கேற்றப் பட்ட இனவாத செயற்பாடுகளுக்கு முகம் கொடுக்க முடியாது துடித்துப் போன முஸ்லிம் சமூகம் அல்லாஹ்விடம் அழுது புலம்பியதற்கும் கேட்ட துஆக்களுக்கும் அவர்களது தஹஜ்ஜுத் தொழுகைகளுக்கும் நோற்ற நோன்புகளிற்கும் இட்ட சாபங்களுக்கும் தேர்தலை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டு பெருவாரியாக வாக்களித்ததற்கும் தகுந்த பிரதிபலனை அல்லாஹ் வழங்கியுள்ளான். இன்றிலிருந்து இரண்டு மாதங்களிற்கு முன்பு இப்படியானதொரு தேர்தலையும் இதுபோன்றதொரு முடிவையும் யாரேனும் கனவிலேனும் சிந்தித்திருப்போமா ??
பௌத்த இன சகோதரர்கள் பெருவாரியாக வாழும் அனைத்துப் பகுதிகளிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ முன்னிலை வகித்துள்ள அதேவேளை முஸ்லிம்களையும் தமிழர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட அனைத்துப் பகுதிகளிலும் மிகப் பெரும் வாக்குவித்தியாசத்தில் பொது வேற்பாளர் மைத்ரிபால சிறிசேன அவர்கள் வெற்றிபெற்றிருப்பதும் கூர்ந்து கவனிக்கப் படவேண்டிய அதே வேலை சிறுபான்மை சமூகங்களின் வாக்குப் பலமே ஆற்சியை தீர்மானிப்பதில் பாரிய செல்வாக்குச் செலுத்தியுள்ளது என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது.
வேறு ஒருவகையில் சொல்வதென்றால் இனவாத சக்திகளுக்கும் அதற்கு உடந்தையான அரசுக்கும் மிகப் பலமாக அடி விழுந்திருக்கிறது. (அல்லாஹு அக்பர்) அளவுக்கு அதிகம் ஆதரவு வைக்க முடியாவிட்டாலும் ஓரளவேனும் நிம்மதியாக, தமது உரிமைகளை தக்கவைத்துக் கொண்டு முன்னோக்கிச் செல்லக் கூடிய ஒரு எதிர்காலத்தை அல்லாஹ் நாட்டு முஸ்லிம் சமூகத்துக்கு மீண்டும் வழங்கியிருக்கிறான் என ஆதரவு வைக்கலாம்.
உண்மையில் கடந்த சிலவருடங்களாக நாட்டு முஸ்லிம்கள் எதிர் கொண்டு வருகின்ற துயரங்களை மனத்திரை முன் கொண்டு வருகின்ற போது இன்று தேர்தல் முடிவுகளுடன் நாடு சுதந்திரம் பெற்று விட்டது என்பது போன்றதொரு குதூகளிப்பும் சந்தோஷமும் ..................
வார்த்தைகள் முட்டுகின்றன. கண்கள் கண்ணீரை சொரிகின்றன.
அல்லாஹு அக்பர்.
அண்மைக் காலமாக எம்மைச் சுற்றி சுற்றி வந்த அனைத்து சோதனைகளுக்குப் பின்னாலும் நாம் விட்ட ஏராளமான தவறுகளும் ஒளிந்திருந்ததை பிந்தியேனும் உணர்ந்து கொண்டோம். ஆகவே இப்போது மீண்டும் அனைத்தையும் மறந்து விட்டு ஏனோதானோ என்று இருந்து விடாது மிகக் கவனமாக தமது எதிர்காலத்தை திட்டமிட வேண்டிய கடப்பாடு முஸ்லிம் சமூகத்துக்கு இருக்கிறது.
அல்லாஹ்வின் தீர்ப்புக்கு முன்னாள் எந்தக் கொம்பனும் வாலாட்ட முடியாது. அப்போ கோத்தாவுக்கும் ஞானசாரவுக்கும் அப்பசரனை தானா ???

Post a Comment