ஜனாதிபதி மைத்திரியின் ''முன்மாதிரிமிக்க'' அறிவுறுத்தல்
தமது நிழற்படங்கள் மற்றும் குரல்பதிவுகளை அநாவசியமாக பிரசார நடவடிக்கைகளில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதியினால் இந்த விடயம் தொடர்பில் ஊடகத்துறை அமைச்சுக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதிவாய்ந்த செய்தியுள்ள சந்தர்ப்பங்களிலும், விசேட நிகழ்வுகளிலும் மாத்திரமே ஜனாதிபதியின் நிழற்படங்கள் காட்சிப்படுத்தப்பட வேண்டுமென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஜனாதிபதியின் உருவப்படங்கள் அடங்கிய விசேட பிரசார பதாகைகள் மற்றும் கட்அவுட்களை பெருந்தெருக்களின் இருமருங்கிலும் காட்சிப்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment