Header Ads



மைத்திரி புதிய ஜனாதிபதி, தேர்தல் ஆணையாளர் பிரகடனம், மஹிந்தவுக்கும் நன்றி கூறினார்

நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிநேன இலங்கையின் 7 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர்  மஹிந்தானந்த தேசப்பிரிய சற்றுமுன் அறிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசின் புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்தார். புதிய ஜனநாயக முன்னணியின் அன்னம் சின்னத்தில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன 62,17,162 (51.28 வீத) பெற்றுள்ளார் என்றும் அவர் அறிவித்தார். 

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கும் தாம் நன்றிகளை வழங்குவதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.