நாட்டிலின்று தோன்றியது 'மைத்திரி' ஆட்சி
அழுததற்கும் தொழுததற்கும் விட கிடச்சாச்சி-ஊர
அழிச்சவங்க எரிச்சவங்க கத முடிச்சாச்சி
நாட்டிலின்று தோன்றியது 'மைத்திரி' ஆட்சி-'மஹிந்த'
நாசமத்து போனதற்கு வாக்குகள் சாட்சி
'அதாவுல்லா'க்கும் 'ஹிஸ்புல்லா'க்கும் வேட்டுவச்சாச்சி-நம்ம
'அஸ்வரின்ட' நெலம இப்போ கேவலமாச்சி
அரப்படிச்ச 'பாயிஸிக்கும்' நோண்டியாப்போச்சி-முடிவ
அறிஞ்சவுடன் 'திஸ்ஸ'வுக்கும் வயித்தால போச்சி
'ஞானசார' வாய இப்ப மூட வச்சாச்சி-கொடிய
'கோத்தபாய' நாட்டவிட்டே ஓட வச்சாச்சி
யானைமேல அன்னம் ஏறி பவனிவந்தாச்சி-திரும்ப
தப்பு ஏதும் நடந்துப்புட்டா எறக்கினாப்போச்சி....!!
கவிஞர் பொத்துவில் அஸ்மின்

Post a Comment