Header Ads



பிரதமர் வேட்பாளராக, நிமால் சிறிபால சில்வா..?

எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா, எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவார் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய தினம் நிமால் சிறிபால டி சில்வா எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் பிரச்சாரப் பணிகள் நிமால் சிறிபால டி சில்வா தலைமயில் நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுத் தேர்தலின் போது நடுநிலையாக செயற்படுவார் எனவும், கட்சிகளுக்கு ஆதரவளிக்க மாட்டார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இம்முறைப் பொதுத் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஆட்சி அமைக்கும் எந்தவொரு அரசாங்கத்துடனும் கடமையாற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிடக்கூடிய சாத்தியங்கள் குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறெனினும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நாமல் ராஜபக்ஸ தேர்தலில் போட்டியிட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

1 comment:

  1. How can we avoid this same robber gang, which encouraged MR to take political power by hook or crook for their own survival

    ReplyDelete

Powered by Blogger.