Header Ads



''உருக்கமான ஒரு வேண்டுகோள்'' - எங்களின் மன உணர்வுகளோடு விளையாடாதீர்கள்...!

(டாக்டர் என். ஆரிப்)
அமைச்சர் றவுப் ஹக்கீம்,
அமைச்சர் அதாவுல்லாஹ்,
பா. உ. எச். எம். எம். ஹரீஸ்,
மா. ச. உ. ஏ. எம். ஜெமீல்,
மற்றும் அரசியல்வாதிகளே!

எங்களின் மன உணர்வுகளோடு விளையாடாதீர்கள்

சாய்ந்தமருது பிரதேசமானது 17 கிராம சேவகர் பிரிவுகளையும், 30 ஆயிரத்துக்கு மேற்பட்ட சனத் தொகையையும் கொண்டதும், தனியான பிரதேச செயலகத்தையும் கொண்டதுமான பிரதேசமாகும் என்பதை நீங்கள் எல்லோருமே அறிவீர்கள்.

பல இடர்களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் தான் பிரதேச செயலகம் கூட வழங்கப்பட்டது என்பதும் சகலரும் அறிந்த உண்மையாகும். அந்தக் காலகட்டத்தில் இருந்த பிரபல அரசியல்வாதிகள் விருப்பமில்லாத நிலையிலேயே, அவர்களாலும் தவிர்க்க முடியாததால் தான் அது கூட வழங்கப்பட்டது.

இலங்கையில் தனியான பிரதேச செயலகம் இருந்தும் தனியான உள்ளுராட்சி சபை இல்லாத ஒரெயொரு பிரதேசம் சாய்ந்தமருது என்பதும் ரகசியமான விடயமல்ல. இத்தகைய நிலையிலே, பல காலமாக தனியான உள்ளுராட்சி சபையின் தேவைப்பாடு உணரப்பட்டும், அதற்கான வேண்டுகோளும் விடுக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. காலத்துக்குக் காலம் அதனை ஒரு துரும்பாக அரசியல்வாதிகளால் பயன்படுத்தப்படுகின்றதே தவிர, தூய எண்ணத்தோடு யாரும் இதனை முன்னெடுக்கவில்லை. அவ்வாறு முயற்சிப்பதாவும் தெரியவில்லை.

கடந்த சில மாதங்களாக சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை கிடைக்கப்போகின்றது என்று பரவலான ஊகங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்ற நிலையில், அதனோடு தொடர்பு பட்டவாறு ஒருவரையொருவர் சாடுகின்ற வகையிலான செய்திகளும் வந்து கொண்டேயிருக்கின்றன. அவர் தரப்போகின்றார், இவர் தடுக்கப்போகின்றார். அந்த வழியால் வரப்போகிறது, இந்த வழியால் தடுக்கப்போகிறார்கள் என்பன போன்ற செய்திகள் தான் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், உள்ளுராட்சி சபை மட்டும் வருவதாக இல்லை.

அப்பாவிகளான எங்களின் மன உணர்வுகளோடு ஏன் விளையாடுகிறீர்கள்? உள்ளுராட்சி சபை சாய்ந்தமருதுக்குத் தேவையில்லை என்றால், அதனை வெளிப்படையாக நியாயப்படுத்திச் சொல்லுங்கள். நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் அவை நியாயமாக இருந்தால். ஆனால் அதற்காக, பிரதேச செயலகம் கிடைக்க முதலும் சொன்னது போன்ற நியாயமில்லாத காரணங்களைச் சொல்லாதீர்கள். 

உள்ளுராட்சி சபையை நாங்கள் கொண்டுவர முயற்சிக்கிறோம், ஆனால் சிலர் தடுக்கிறார்கள் என்று மொட்டையாக சொல்வதை விடவும், தடுப்பவர்கள் யார் எப்படித் தடுக்கிறார்கள் என்பதை வெளிப்படையாகவே சொல்லுங்கள் மக்களுடைய காதுகளில் பூச்சுற்றாமல். எல்லோருமே சந்தர்ப்பவாத அரசியல் தான் செய்கிறீர்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. தயவுசெய்து பொதுமக்களாகிய எங்களின் மன உணர்வுகளோடு விளையாடாதீர்கள் என்று சம்பந்தப்பட்ட அனைவரையும் உருக்கமாகக் கேட்டுக் கொள்கின்றேன்.

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை தேவையில்லை என்று சொல்கின்ற அரசியல்வாதிகள் தைரியமாக அதற்கான காரணங்களை உங்களால் முடிந்தால் வெளிப்படுத்துங்கள். உங்களின் சுயநலத்துக்காக இல்லாமல், இந்த ஊரின் நலனுக்காக என்று நியாயமாக இருந்தால் பொதுமக்களாகிய நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். 

இதனைக்கோருவதற்குரிய சந்தர்ப்பம் இதுவல்ல என்று சொல்கின்றவர்கள், தயவுசெய்து ஏற்கெனவே அதற்கான சந்தர்ப்பம் வரவில்லையா என்பதையும், ஏன் இப்போது கேட்க முடியாது என்பதையும், அப்படியாயின் எப்போது கேட்கலாம் என்பதையும் தெளிவாகவே தெரியப்படுத்துங்கள். 

சாய்ந்தமருதுக்கு தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்பட்டால், அது ஏனையவர்களுக்குத் தீங்காக அமையலாம் என்று ( பிரதேச செயலகம் வழங்கப்படுவதற்கு முன்னரும் ) சொன்னது போன்று நொண்டிச்சாட்டு சொல்லாமல் எவ்வாறு தீங்காகும் என்று நியாயமாகச் சொல்லுங்கள். ஏனெனில் தனியான பிரதேச செயலகம் வழங்கப்பட்டதன் பின்னர் எந்த தீங்கும் யாருக்கும் ஏற்பட்டதாக இல்லையே. மாறாக, நன்றாகத் தானே போய்க்கொண்டிருக்கிறது. 

இன்னும் சிலர், அதனைப்பற்றிக் கதைத்தாலே பிரிவு, பிரிவு என்றும், பிரிக்கப்போகிறார்கள் என்றும், பிரதேசவாதம் என்றும் முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள். இது நிருவாகப்பரவலாக்கம் என்று பார்க்காமல், ஏன் பிரிவு என்று பார்க்கிறீர்கள்? ஒரு பாடசாலையை பகுதித் தலைவர்களின் கீழ் பகுதி பகுதியாகப் பிரிக்காமல், அதிபரின் தலைமையின் கீழ் முழுப்பாடசாலையையும் நிருவகிக்கலாம் தானே? ஏன் பிரித்து நிருவகிக்க வேண்டும்? புதிதாக எத்தனை பாடசாலைகள் முளைக்கின்றன? ஏன்? அது காலத்தின் தேவை என்பதை உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமென்றால் இதனை மட்டும் ஏன் உங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
இப்போது, முன்னாள் மேயர் சிராஸ் அவர்கள், சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபை தனது தாகம் எனவும், அது மட்டுமே தனது இலக்கு என்றும், அதற்காகவே அமைச்சர் அதாவுல்லாவோடு சேர்ந்தேன் என்றும் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். எல்லாமே சந்தர்ப்பவாத காய்நகர்த்தல்கள் என்பதை படியாத பாமரமகனும் புரிந்து கொள்வான். மேயர் பதவி நான்கு வருடங்களுக்கும் வழங்கப்பட்டிருந்தால் அவரிடமிருந்து தற்போதைய கூற்று வந்திருக்குமா? நான் 2013 ஜூலை மாதம் இது சம்பந்தமாக அவருக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தேன். அதில் நான் சொன்ன விடயங்களை பகிரங்கமாக அவரால் தெரிவிக்க முடியுமா என்று கேட்கிறேன்.

இறுதியாக, சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளிடம் பொதுமக்கள் சார்பாக உருக்கமாகக் கேட்டுக் கொள்ள விரும்புவது, இனிமேலும் எங்களை ஏமாற்றாமல், எங்களின் மனங்களை ரணமாக்காமல், எங்களுக்குக் கிடைக்க வேண்டியதை கிடைக்க நடவடிக்கை எடுங்கள் அல்லது முட்டுக்கட்டையாவது போடாமல் இருங்கள்.

6 comments:

  1. Dr. Arif, ஏனையவர்களுக்கு அரசியல் சாயம் பூசி நீங்கள் அரசியலுக்கு வரமுயட்சிப்பது போல் தெரிகிறது. நீங்களும் அசிங்கமான முஸ்லிம்களுக்கு பலயீனத்தையும் பல இழப்புக்களையும் ஏற்படுத்தக் கூடிய இந்த பிரதேச வாதத்தை நியாயப் படுத்துவது உங்களது சுயநல அரசியல் பிரவேசத்துக்கே என்பதை உங்களது அதிபர், பகுதித்தலைவர் என்ற உதாரணமே சாட்சிபகிர்கிறது. பகுதித்தலைவர் அந்த பாடசாலையிலேயே இன்னொரு பாடசாலையை உருவாக்க முயற்சி செய்கிறார் என்பதே யதார்த்தமானது.

    உங்களை போன்றவர்கள் இந்த பிரதேசத்தை பலப்படுத்திக் கொண்டு முன்னெடுத்து செல்லக் கூடியவர்கள் என்ற காரணத்தினால் எழுதுகிறோம். நிட்சயமாக கல்முனை மாநகரத்துக்கு மாபெரும் இழப்பும், தமிழர்கள் இந்த பிரதேசத்தை தங்களது ஆளுமைக்கும் கொண்டுவருவதற்கும், இந்த கல்முனை நகரம் தமிழர் பிரதேசம் என அடையாலபடுத்துவதட்கும் உதவிபுரிவதாகவே அமையும். முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கும் ஆபத்தாகவே அமையும் என்பதை கூரிக் கொள்ள விரும்புகிறோம்.

    ReplyDelete
  2. Dr. Arif, ஏனையவர்களுக்கு அரசியல் சாயம் பூசி நீங்கள் அரசியலுக்கு வரமுயட்சிப்பது போல் தெரிகிறது. நீங்களும் அசிங்கமான முஸ்லிம்களுக்கு பலயீனத்தையும் பல இழப்புக்களையும் ஏற்படுத்தக் கூடிய இந்த பிரதேச வாதத்தை நியாயப் படுத்துவது உங்களது சுயநல அரசியல் பிரவேசத்துக்கே என்பதை உங்களது அதிபர், பகுதித்தலைவர் என்ற உதாரணமே சாட்சிபகிர்கிறது. பகுதித்தலைவர் அந்த பாடசாலையிலேயே இன்னொரு பாடசாலையை உருவாக்க முயற்சி செய்கிறார் என்பதே யதார்த்தமானது.

    உங்களை போன்றவர்கள் இந்த பிரதேசத்தை பலப்படுத்திக் கொண்டு முன்னெடுத்து செல்லக் கூடியவர்கள் என்ற காரணத்தினால் எழுதுகிறோம். நிட்சயமாக கல்முனை மாநகரத்துக்கு மாபெரும் இழப்பும், தமிழர்கள் இந்த பிரதேசத்தை தங்களது ஆளுமைக்கும் கொண்டுவருவதற்கும், இந்த கல்முனை நகரம் தமிழர் பிரதேசம் என அடையாலபடுத்துவதட்கும் உதவிபுரிவதாகவே அமையும். முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கும் ஆபத்தாகவே அமையும் என்பதை கூரிக் கொள்ள விரும்புகிறோம்.

    ReplyDelete
  3. i don't see anything wrong in Dr. Arif's request, if you see any disadvantage in giving a new Urban Council or Town Council to Maruthamunai, Sainthamaruthu, etc, if you see any disadvantage why don't you come up with the facts? rather shouting to divide the community. Remember we don't want to rule Tamils and we don't want to be ruled by Tamils in Kalmunai. Kalmunai is belongs to all like Sri Lanka

    ReplyDelete
  4. Kuruvi Is Right
    Yellarume Selfish ta Aniyaayama Nalla Irukira Kalmunaya Naharasafaya Pirikaporingla ata Ninaikumpotutan Ovaru Arasiyal Vaatimeleyum Aaatiramta Varutu Nandi Illata..........................
    Atilum SLMC Ninaikumpotu Rompa Perumaiya Iruku M.H.M. Ashraff Itukutan Inta SLMC Ivalavu Kastapattu Uruvaaakinaya????????????? Muslimgaludaya Manasu Rompeve Kaayapaduttinga Yellarayum Allah Partukuvan Nandi Ketteverhal

    ReplyDelete
  5. Our comments should not discourage professionals, experts and educated to make comments, we are a community that always listen to politicians, because they are so powerful helping people make money and expert opinions are ignored because our community is fully corrupted and politicized. Please listen to expert opinions as well, do not always go with the politician's opinion.

    ReplyDelete
  6. kuruvi kuruvithaan
    ungal karuthu warawetkathakkadhu kuruwi awarhaleee

    ReplyDelete

Powered by Blogger.