Header Ads



இலங்கை முஸ்லீம்களும், அரசியல் முடிவுகளும்..!

(S.A.Satham)

பிரபல கருத்துக்கணிப்பின் படி தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமேயானால் அவர்கள் வெற்றிபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் காலி, மாத்தறை,ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனராகலை,குருநாகலை போன்ற 6 மாவட்டங்களிலும் குறைந்தது 60 வீதமான வாக்குகள் பெற்றாலே மாத்திரம் அவர்களால் ஏனைய அனைத்து மாவட்டங்களினதும் தோல்வியை ஈடு செய்து வெற்றிக்கனியை புசிக்க முடியும்.

ஆனால் தற்போதைய நிலவரப்படி அது குருநாகலை மாவட்டத்தில் மாத்திரமே சாத்தியமாகும் என்கின்றது கணிப்பு. ஹம்பாந்தோட்டையில் கூட அவர்களின் நிலை 55 வீதத்தையும் தாண்டாது என்பது ஒரு ஆச்சர்யமான உண்மை ஆகும்..!!

அண்ணளவாக
காலி : 50 - 55 வீதம்
மாத்தறை : 55 - 58 வீதம்
ஹம்பாந்தோட்டை : 50 - 55 வீதம்
இரத்தினபுரி : 52 - 55 வீதம்
மொனராகலை : 55 - 59 வீதம்
குருநாகலை : 58 - 65 வீதம்
என எதிர்பார்க்கபடுகின்றது.

ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் அரசாங்கம் படு தோல்வி அடைந்துவிடும் என்பதை இன்று தற்போதைய அரசாங்கமே நன்கு தெரிந்து வைத்திருக்கின்றது!

ஆகவே தற்போதைய மகிந்த அரசாங்கத்தின் முழு முயற்சியும் இந்த 6 மாவட்டங்களிலும் எவ்வாறு 60 வீதத்தை பெறலாம் என்பதே.

அதற்காக எதிர்வரும் காலங்களில் SLMC,TNA ஆகிய கட்சிகளின் முடிவை பொறுத்து ஒரு இனவாத அரசியலில் அரசாங்கம் இறங்குவதற்கே அரசாங்கம் தயாராகி வருகின்றது... !! அதன் காரணமாகத்தான் அண்மையில் கண்டி தர்மராஜா கல்லூரியில் நடை பெற்ற சமாதான நீதவான்களுக்கான கூட்டத்தில் பிரதமர் டீ.எம்.ஜயரத்ன, ரவூப் ஹக்கீமை நோக்கி! நீங்கள் ஜனாதிபதி மகிந்தவுக்கு ஆதரவளிப்பதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என சூளுரைத்தார்!!

ஆகவே தற்போதைய அரசாங்கத்தின் தேவை SLMC அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிரணியுடன் சேர வேண்டும் என்பதும் அதன் பின்னர்தான் தங்களால் இனவாத அரசியலை முன்னெடுத்து செல்ல முடியும் என்பதுமே!!

ஆனால் பெரும்பான்மையான முஸ்லிம் மக்களின் விருப்பம் SLMC அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என இருப்பதால் தன் எதிர்கால அரசியல் இருப்பை கருதினால் SLMC அரசில் இருந்து வெளியேறும்!!

ஆளும்கட்சி சூத்திரகாரர்களின் சூழ்ச்சியை தவிடு பொடியாக்கி நாட்டில் ஒரு நல்ல ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என SLMC தலைமை விரும்பினால் மகிந்த அரசிலேயே தொடர்ந்தும் இருக்கும்!!!

என்னை பொருத்தவரையில் இந்த தருணத்தில் உணர்ச்சி வசப்படாமல் சற்று வேறுபட்டு யோசிப்போமேயானால் சிறப்பாக இருக்கும்!!

அது மாத்திரமன்றி எங்களில் அதிகமானோருக்கு மகிந்த ராஜபக்ச  தோற்றால் ஒரு வேலை இராணுவ ஆட்சி இலங்கையில் வந்து விடுமோ என்ற அச்சம் அடி மனதில் இருக்கின்றன.

ஆம் உண்மைதான்... அதற்காகத்தான் தற்போதைய இந்த அரசாங்கம் தயாராக இருக்கின்றது... பாகிஸ்தானில் நடந்ததை போன்று இலங்கையில் மகிந்த தேர்தலில் தோற்றால் அவர் கட்டாயம் உயர் நீதிமன்ற உதவியையும் இராணுவ உதவியையும் நாடுவார் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

இருப்பினும் சர்வதேச வல்லரசு நாடுகளும் இந்தியாவும் தற்போதைய இலங்கை ஜனாதிபதி தேர்தல் மீது தன் இரண்டு கண்களையும் வைத்த வண்ணம் உள்ளன என்பது அவரின் அந்த கற்பனை கோட்டைக்கு பெரும் சவால்தான்... தேர்தலின் பின்னர் அவ்வாறான யாதேனும் அசம்பாவிதம் நடக்குமேயானால் அதனை தவிடு போடி ஆக்கிவிடும் வல்லமை வல்ல இறைவனுக்கு உண்டு என்பதனையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அது மாத்திரமன்றி முன்னாள் இராணுவ கட்டளை தளபதி சரத் பொன்சேகா எதரணியுடன் இருப்பதால் எதிர்காலத்தில் இராணுவம் தற்போதைய அரசாங்கதிட்கு தலையசைக்குமா என்பதிலும் பல சந்தேகங்கள் உள்ளன.

அது மாத்திரமன்றி கௌரவ மைத்ரீபால சிறிசேன அவர்கள் முன்னாள் பாதுகாப்பு பிரதி அமைச்சராகவும் கடமையாற்றி இருக்கின்றார் என்பதாலும் சந்திரிக்கா பண்டாரநாயக்க அவர்கள் தன் ஆட்சிக்காலத்தில் படையினருக்கு பல சேவைகளையும் சலுகைகளையும் வழங்கி வந்துள்ளார் என்பதாலும் நாங்கள் பயப்பட வேண்டிய அவசியம் நமக்கில்லை... ஆனால் தற்போதைய அரசாங்கம் அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களுக்கு நீண்ட காலமாக வழங்கி வந்த உதவி தொகையிலும் பாரிய மோசடிகளை செய்ததாலும் இராணுவத்தினரை தவறான முறையில் உபயோகிப்பதாலும் தற்போதைய அரசாங்கம் மீது இராணுவத்திற்கு மறைமுகமான ஒரு வெறுப்பு இருக்கத்தான் செய்கின்றது... ஆகவே சந்திரிக்காவினை எதிர்த்து இராணுவம் செயற்படுமா என்பதிலும் கேள்விக்குறிதான்.

ஆகவே இராணுவ பயம்காட்டி மக்களை திசை திருப்புவதற்கு தற்போதைய அரசாங்கம் பல சூழ்ச்சிகளை மேற்கொண்டுள்ளது என்பதை நம் அனைவரும் புரிந்து கொண்டு இந்த பயத்தையெல்லாம் காலில் இட்டு நசுக்கி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிறிசேனாவுக்கு தங்களின் பூரண ஆதரவினை வழங்கி அவரை வெற்றிபெற செய்வோம்.

4 comments:

  1. Really good. You Sid well Mr.Satham. V 4 MY3

    ReplyDelete
  2. தற்போதைய சூழலில் ரவுப் ஹகீம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது உசிதம். ஏனெனில், ஒட்டு மொத்த முஸ்லிம் கட்சிகளும் மைத்திரிக்கு ஆதரவளித்து, ஒரு வேளை இன வாதிகளின் பிரச்சாரங்களாலும், தேர்தல் திள்ளு முள்ளுகளாலும் மகிந்த வெற்றி பெற்றால் இது வரை எமக்கெதிராக செய்து முடித்துள்ள அநியாயங்களையும், அட்டூழியங்களையும் விட பன்மடங்கு நிலுவையில் உள்ளதை யாரும் மறுக்க முடியாது. எனவே நாம், ரவுப் ஹகீம் விடயத்தில் சற்று நிதானமாக இருப்போம்.
    அநியாயக் காரர்களை விட்டும் அல்லாஹ் எமது நாட்டு முஸ்லிம்களையும், இஸ்லாத்தையும் பாதுகாப்பானாக.

    ReplyDelete
  3. The govt might do whatever they want, all the Muslim political parties may take the president side,it doesn't mean that it will
    Be in favour of MR!

    ReplyDelete
  4. how v can bileve my3? he also budest.sihala urima party with them.they joined with them one of bone and with some rules.even my3 accept that rules. we dont no his future idieas.so we can do only one think,its dua,allah only knows who is good 2 gide for our muslim community,so let pra allah more and more 4 this mater.

    ReplyDelete

Powered by Blogger.