முஸ்லிம் பாடசாலைகள் பாரியளவு பின்னடைவைக் கொண்டுள்ளன - சியாம்டீன்
அமெரிக்காவில் அமைந்துள்ள உலகத் தமிழ் பல்லைக்ககழகம் வருடாந்தம் வழங்கும் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பு விழாவின் இவ்வருடத்திற்கான நிகழ்வு 2014 -11- 23 ல் இந்தியாவில் மதுரை வீ கிரேண்ட் ஹோட்டல் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது . பல்வேறு சமூகப் பணிகளில் பங்காற்றி வரும் கண்டி அக்குரணையைச் சேர்ந்த எஸ் எச். எம் சியாம்டீனுக்கு இந்நிறுவனம் மதிப்புறு முனைவர் கௌரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது. கல்வி , சமூக சேவைiயும் மற்றும் கணக்கியல் துறைக்குமான கலாநிதிப் பட்டம் வழங்கப்ட்டுள்ளது. சியாம்டீன் அறக்கட்டளை அமைப்பின் மூலம் பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றிவரும் இவர் தம்முடைய சொந்தப் பெயரில் அறக்கட்டளை அமைப்பொன்றை உருவாக்கி பல்வேறு சமூக இயக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார். இதன் பெயர் சியாம்டீன் அறக்கட்டளை நிதியமாகும். இதன் மூலம் அக்குரணையில் சலுகை அடிப்படையிலான பகுதி நேர வகுப்புக்களை நடாத்தி கல்வி மேம்பாட்டுக்காக உழைத்து வருகின்றார். அத்துடன் பல பாடசாலைகளில் நிலவும் குiறாபடுகளைக் கண்டறிந்து அதற்குத் தேவையான அளவு உதவிகளையும் செய்து வருகின்றவர். அத்துடன் தம் அறக்கட்டளை உதவியின் மூலம் முறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மிகவும் பின்தங்கிய மாணவர்களுக்கு புலமைப் பரிசில் நிதி உதவி வழங்குதல் மற்றும் பரிசளிப்பு விழாக்களை ஏற்பாடு செய்தல் போன்ற மாணவர்களின் கல்வி ஊக்குவிப்பு நடவடிக்கையில் ஈடுபாடுடையவர். இவர் வழங்கிய செவ்வி
நேர்காணல் இக்பால் அலி
இவர் தம் ஆரம்ப கல்வியை தெலும்புகஹவத்த முஸ்லிம் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். 7 ஆம் ஆண்டு முதல் க. பொ. த. உயர் தரம் வரை அக்குரணை அஸ்ஹர் தேசிய பாடசாலையில் கல்வி கற்று அதேபாடசாலையில் 1990 முதல் 1993 ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆசிரியர் நியமனம் பெற்று ஆசிரியராகவும் கடமையாற்றினார். இவர் நீண்ட காலமாக யப்பான் நாட்டில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு வருபவர் என்பது குறிப்படத்தக்கது.
நீங்கள் சமூக சேவையில் ஈடுபடுவதற்கான காரணம் என்ன?
நான் சிறுவயதில் அக்குரணை அஸ்ஹர் பாடசாலையில் கல்வி கற்றுக் கொண்டிருக்கின்ற காலகட்டம் அதாவது 1986 ஆம் ஆண்டு முதல் மாணவனத் தலைவனாக கடமையாற்றி 1988 -1989 ஆம் ஆண்டகளில் சிரேஷ;ட மாணவனத் தலைவனாக கடமையாற்றச் சந்தர்ப்பம் கிடைக்கப்பெற்றது.. அப்போது அதிபராக அப்துல் கையும் அவர்கள் கடமையாற்றினார். இந்த சந்தர்ப்பத்தில் செயற் திறன் மிக்க மாணவனத் தலைவனாக கடமையாற்றக் கூடிய வாய்ப்புக் கிடைத்துடன் ஆளுமையும் ஆற்றலும் இயல்பாகவே எனக்கு ஏற்பட்டது. அதிகளவு நேர்மையான உண்மைத் தன்மையுடன் ஒழுக்கமுள்ள மாணவச் சமூகத்தை கட்டி எழுப்ப வேண்டும் எண்ணம் எனக்குள் இருந்தது. இந்த நல்ல சிந்தனைகளை என்னுடைய அதிபர் மற்றும் ஆசிரியர் குழாத்தினர் எனக்கு ஊட்டி வளர்த்தனர். இப்பாடசாலையில் 1990 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா நடைபெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட நீதி, உயர் கல்வி அமைச்சர் மறைந்த ஏ. சீ. எஸ். ஹமீட் அவர்களினால் 1988- 1989 ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கிய மாணவனாகத் தெரிவு செய்து பரிசும் கேடயமும் எனக்கு கிடைக்கப்பெற்றது என்பது பெரும் பாக்கியமாகும். அத்தோடு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்ற காலகட்டத்தில் தொடர்ச்சியாக வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. இது என்னுடைய வளர்ச்சிக்கு ஒரு உந்து சக்தியாக இருந்தது.டன் அதிபர், ஆசிரியர்களிடத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள்தான் என்னை மேலும் சமூகச் சேவைப் பணிகளில் ஈடுபட வைத்தது என்று கூறலாம்.
சியாம்டீன் அறக்கட்ளையின் நோக்கம் என்ன ?
நான் தற்போது வியாபாரத்துறையில் ஈடுபட்டாலும் ஆரம்பத்;தில் ஒரு ஆசிரியர் சேவனாக இருந்துள்ளேன். அதனால் எங்கள் பிரதேசத்திலுள்ள மாணவர்கள் கல்வித்துறையில் அக்கறை காட்டாமை என்கின்ற துர்ப்பாக்கிய நிலைமையுள்ளது. இதன் காரணமாக தமது வாழ்க்கையில் கஷ;டங்களும் துன்பங்களும் அனுபவிக்க வேண்டியவர்களாக உள்ளனர். இந்த நிலைமையிலிருந்து எமது சமூகத்தை கட்டி எழுப்ப வேண்டும் என்பதுடன் இந்தப் பிரச்சினைகளை இனம் கண்டு இதற்கான உடனடித் தீர்வுகளை பெற்றுக் கொடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.
பள்ளிக் கூடங்கள் இருந்தும் மாணவர்கள் ஆர்வத்தோடு பாடசாலைகளுக்குச் சென்று கல்வி கற்கின்ற நிலை எங்கள் பகுதியில் மிகக் குறைவு. கூடுதலாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்களையே கூடுதல் கரிசனை காட்டுகின்றனர். வெளிநாட்டுத் தொழில் துறையில் ஆர்வம் காட்டினாலும் தகைமை வாய்ந்த கல்வி கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்து விட்டு வெளிநாட்த் தொழில் வாய்ப்புக்களுக்குச் சென்றால் போதியளவிலான சம்பளத்தை ஈட்ட முடியும். ஆனால் அந்த நிலைமை இங்கு இல்லை. தொழில் நுட்பக் கல்விக் கூடங்களை எமது பகுதி மாணவர்கள் கவனத்தில் கொள்வதில்லை. அங்கு பரந்தளவிலான பாடப்பரப்புக்களைக் கொண்ட தொழில் சார் கற்கை நெறிகள் போதிக்கப்படுகின்றன. நானும் கூட கொழும்பில் உள்ள உயர் தொழில் நுட்பக் கல்லூரியில் கணக்கியல் கல்வி கற்று கல்வி சான்றிதழைப் பெற்றுக் கொண்டேன். மலேசியா நாட்டில் சிறுது காலம் உதவிக் கணக்காளராக சேவையாற்றியுள்ளேன்.
எனவே எமது எதிர்காலச் சந்ததியினர்கள் தகைமை சார் கல்விச் சான்றிதழ்களுடன் தங்களுடைய தொழில் துறையை வளப்படுத்திக் கொள்ள வேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் கூலித் தொழில் செய்பவர்களாகவே எமது இளைஞர் சமூகத்தைக் காண முடியும். இந்த நிலை மாற வேண்டும். இந்த நோக்கத்தை கருதியே என்னுடைய அறக்கட்டளை அமைப்பை ஆரம்பித்து பல சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றோம்
அவ்வாறாயின் நீங்கள் ஆற்றுகின்ற சமூகப் பங்களிப்புக்கள் என்ன?
அந்த வiயில் அக்குரணையில் சியாம்டீன் அறக்கட்டளை மையத்தின் ஊடாக சலுகை அடிப்படையில் பாடசாலை மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புக்களை நடத்தி வருகின்றோம். இது 9 ஆம் ஆண்டு முதல் 11 ஆம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கான ஒரு மாதிரித் திட்டமாகும். அத்தோடு வசதி குறைந்த மாணவர்களை அடையாளம் கண்டு இந்த பிரத்தியேக வகுப்புக்கான கட்டணங்களையும் எமது அறக்கட்டளை வழங்குகின்றது. அதில் சுமார் 300 மாணவர்கள் உள்ளனர். இம் மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு மேலதிகமாக பாடங்கள் போதிக்கப்படுகின்றன. அடிக்கடி விழிப்புணர்வூட்டும் நிகழ்வுகள் நடத்துகின்றோம். புலமைப் பரிசில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டுதல், மகிழ்ச்சிகரமான கற்றலுக்கு மாணவர்களை ஊக்குவித்தல், புலமைப் பரிசில் நிதி உதவி வழங்குதல். பாடசாலைகளுடைய பௌதீக வளப் பற்றாக் குறைகளை முடிந்தளவு நிவர்த்தி செய்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.
நாளுக்கு நாள் கல்விச் செயற்பாடுகளிலும் கல்விக் கொள்கையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகின்றது. அதற்கு ஏற்றவாறு எமது மாணவர் சமூகத்தைத் தயார் படுத்த வேண்டியிருக்கிறது. இதற்கு பாடசாலை அதிபர் ஆசிரியர் மாத்திரமல்ல பெற்றோர்களுடைய பங்களிப்பு அவசியாகும். பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களுக்கு என்னை அதிதியாக அழைக்கின்ற சந்தர்ப்பங்களிலெலாலம் இந்த பெற்றோர்களுடைய பங்களிப்புச் சம்மந்தமாக நான் ஒரு அதிதியாக அல்லாமல் ஒரு வளவாளராக இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் உரைகளை நிகழ்த்தி வருகின்றேன்.
அஸ்ஹர் தேசிய பாடசாலை, தெலும்புகஹவத்த முஸ்லிம் வித்தியாலயம், குருந்துகஹஎல முஸ்லிம் வித்தியாலயம், மல்கமந்தெனிய முஸ்லிம் வித்தியாலயம் கல்ஹின்னை அல்- மனார் தேசிய பாடசாலை, உக்குரஸ்பிட்டிய முஸ்லிம் பாடசாலை, கட்டுகஸ்தோட்டை சாஹிராக் கல்லூரி, மடவளை மதீனா தேசிய பாடசாலை உட்பட பல பாடசாலைகளில் உரை நிகழ்த்த சந்தர்ப்பம் கிடைத்தது.
இவ்வாறு கல்வி நடவடிக்கைகளுக்குப் புறம்பாக திடீரென ஏற்படும் இயற்கை அனர்த்தங்களின் போது அவசர நிவாரண உதவிகளை நாங்கள் செய்து வருகின்றோம்.
இவ்வகையான சேவைகளைக் கருத்திற் கொண்டே மதியுறு முனைவர் கலாநிதி பட்டம் எனக்கு கிடைக்கப் பெற்றது. இந்த பட்டம் கிடைக்கப் பெற்றதை அடுத்து பிரபல தென்னிந்திய நடிகரும் நெருங்கி நண்பருமான ஸ்ரீமன் அங்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். இவைகள் யாவும் என்னுடைய சேவைக்கு கிடைத்த பெரு வெற்றியாகக் கருதுகின்றேன்.
உங்களுடைய எதிர்கால திட்டங்கள் என்ன?
கல்வி சார் நடவடிகைக்களை கருத்திற் கொண்டே என்னுடைய எதிர் காலத் திட்டங்கள் அமைந்துள்ளன. ஏனைய மாவட்டங்களை விட கண்டி மாவட்டத்தில் தமிழ் மொழி மூல முஸ்லிம் பாடசாலைகள் பாரியளவு பின்னடைவைக் கொண்டுள்ளன. அங்கு நிலவும் பிரச்சினைகளை இனங் கண்டு அதற்குத் தேவையான உதவிகளையும் பங்களிப்புக்களையும் செய்யவுள்ளோம். அதுதான் என்னுடைய இலக்காகும்.
Walha Siyamdeen.
ReplyDeleteYour Junior.